"கணேஷ்... கணேஷ்... என்று 3 முறை "தல" என் பேரை சொன்னார்.. சொர்க்கத்துக்கே போய்ட்டேன்!

அஜித்துடன் ரசிகர் எடுத்து கொண்ட போட்டோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: "கணேஷ்... கணேஷ்... கணேஷ்... என்று 3 முறை தல அஜித் என் பேரை சொன்னார்.. நான் சொர்க்கத்துக்கே போய்ட்டேன்" என்கிறார் அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர்!!

எப்போதுமே நடிப்பையும் தாண்டி குணத்தால் பேசப்படுபவர் அஜித். இயல்பாகவே எளிமையாகவும், யதார்த்தமாகவும் பழகக்கூடியவர் அஜித். தன்னம்பிக்கைக்கு உதாரணமாக எப்போதுமே பேசப்படுபவர் அஜித்.

தன்னுடன் பணியாற்றுபவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அதை தீர்த்து வைப்பதுடன், தன்னுடன் இருப்பவர்கள் பொருளாதார ரீதியாக நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பும் இதயம் படைத்தவர் அஜித். இதுவரை இவர் ரசிகர்களிடம் முகம் காட்டியதாக சிறு செய்திகள்கூட வந்ததில்லை. அப்படித்தான் ஒரு ரசிகர் இவரை நேரில் சந்திக்கும்போது நடந்திருக்கிறது.

பின் தொடர்ந்த ரசிகர்

பின் தொடர்ந்த ரசிகர்

விஸ்வாசம் படம் ஷுட் முடிந்து சென்னை ஏர்போர்ட் வந்திருக்கிறார். அஜித்தை கண்டதும் ரசிகர் ஒருவர் போட்டோ எடுக்க முயன்றிருக்கிறார். ஆனால் கூட்ட நெரிசல் எடுக்க முடியாமல் போய்விட்டது. அதனால காரில் ஏறி வீடு திரும்பியதும், இந்த ரசிகரும் காரில் ஏறி கொண்டு ஏர்போர்ட்டிலிருந்து அஜித்தை பின்தொடர்ந்து வந்திருக்கிறார்.

உன் பெயர் என்ன?

உன் பெயர் என்ன?

திடீரென்று அஜித் கார் ஒரு இடத்தில் நின்றுவிட்டது. அஜித்தின் கார் டிரைவர் இறங்கி வந்து, ரசிகரிடம், தல உங்களை அழைக்கிறார் என்று சொல்லி இருக்கிறார். இதைக் கேட்டு ஷாக் ஆகி, அஜித்திடம் ரசிகர் ஓடிப்போனார். பிறகு அஜித் அவரிடம், "உன் பெயர் என்ன?" என்று கேட்கவும், கணேஷ் என்று பதில் தந்திருக்கிறார்.

போட்டோவுக்கு போஸ்

போட்டோவுக்கு போஸ்

அதற்கு அஜித், கணேஷ் இதுமாதிரி பின்னாடியே வந்தால் விபத்து நடக்காதா? அப்படி நடநதால் எனக்குதானே ரொம்ப வருத்தமா இருக்கும்? இது தப்பில்லையா? என்று அறிவுறுத்தி உள்ளார். அதோடு வா.. கணேஷ் போட்டோ எடுத்துக்கோ, நான் ரொம்ப டயர்ட்ஆ இருக்கேனே பரவாயில்லையா என்று கேட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார் அஜித்.

சொர்க்கத்துக்கே போய்ட்டேன்

சொர்க்கத்துக்கே போய்ட்டேன்

கடைசியாக தேங்ஸ் கணேஷ் என்றும் சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார். அஜித்துடன் நடந்த உரையாடலை அந்த ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார். 3 முறை என் பெயரை தல சொன்னார். புகை படம் எடுத்து கொண்டோம். அப்போது நான் சொர்க்கத்திற்கே போய் விட்டேன். என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்' என்றும் அந்த ரசிகர் உணர்ச்சி பெருக்கில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+