மின் மயானத்தில் தந்தையின் முகத்தை இறுதியாக பார்த்த அஜித்.. வேண்டாம் என கையெடுத்து கும்பிட்ட தருணம்!
சென்னை: நடிகர் அஜித் தன்னுடைய தந்தையின் சடலம் அருகே சோகமாக நின்றிருந்ததை புகைப்படமாகவும் வீடியோவாகவும் சிலர் எடுத்த போது கையெடுத்து கும்பிட்டு வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.
நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி என்கிற சுப்பிரமணியம் 2019 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது.
எனினும் அஜித்தின் தந்தை உயிரை மருத்துவர்கள் காப்பாற்றிய நிலையிலும் பி.எஸ். மணி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து வீட்டிலேயே தந்தைக்கு மருத்துவ உபகரணங்களை வரவழைத்து சிகிச்சை அளித்து வந்தார்.

செவிலியர்
தந்தையை கவனிக்க செவிலியரையும் அடிக்கடி தந்தையின் உடல்நலனை பரிசோதிக்க மருத்துவரையும் அஜித் நியமித்தார். இதனால் படங்களில் எந்த அச்சமும் இன்றி நிம்மதி நடித்து வந்தார். வெளியூர், வெளிநாடுகளில் படப்பிடிப்புகளில் இருந்தாலும் அவ்வப்போது மருத்துவர்களை தொடர்பு கொண்டு தந்தையின் உடல்நலன் குறித்து அஜித் கேட்டறிந்து வந்தார்.

குழந்தையை கவனிப்பது போல்
தந்தையை அந்தளவுக்கு குழந்தையை கவனித்துக் கொள்வது போல் கண்ணுக்குள் வைத்து பார்த்தார். இந்த நிலையில் இன்று காலை அஜித்தின் தந்தை அதிகாலையில் தூக்கத்திலேயே உயிரிழந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இது ரசிகர்கள், திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தந்தையின் இறப்புக்கு பலர் அஜித்திற்கு ஆறுதல் கூறி சமூகவலைதளங்களில் இரங்கல் மெசேஜ் அனுப்பி வருகிறார்கள்.

அரசியல்வாதிகள்
அது போல் அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்களும் நேரிலும் ட்விட்டரிலும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அஜித்திற்கு நெருக்கமான சிலர் போன் செய்த போதிலும் அஜித்தால் போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அது போல் அஜித் வீட்டில் அஞ்சலி செலுத்துவதற்காக முக்கியஸ்தர்களையும் குடும்ப உறுப்பினர்களையும் அனுமதித்ததாக தெரிகிறது.

இன்றைய தினம்
இந்த நிலையில் இன்றைய தினம் நண்பகல் 12.15 மணிக்கு தந்தை பி.எஸ் மணியின் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிகழ்விலும் அஜித்தின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். இது குடும்ப நிகழ்வு, தான் தனியாக இந்த சடங்குகளை தனிப்பட்ட முறையில் செய்ய ரசிகர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அஜித் கேட்டு கொண்டிருந்தார்.

யார் யார் பங்கேற்பு
இந்த இறுதி சடங்கில் ஷாலினியின் அண்ணன் ராபர்ட், தங்கை ஷாமிலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தனது மாமியாரின் கையை பிடித்து அழைத்து வந்தார் ஷாலினி். தந்தையின் உடலை மின் மயானத்தின் உள்ளே கொண்டு சென்ற போது அஜித் சோகமாக தனது முகத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை ரசிகர்களும் பத்திரிகையாளர்களும் புகைப்படமும் வீடியோவும் எடுக்க முயன்றனர். அப்போது அஜித் கையெடுத்து கும்பிட்டு வேண்டாம் என கூறினார். அஜித்தின் வேண்டுகோளை ஏற்று சிலர் கலைந்து சென்றனர்.

முதல்வர் ஸ்டாலின்
அஜித்தின் தந்தை இறப்புக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். அமைச்சர் உதயநிதி நேரில் சென்று அஜித்தின் தந்தை உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டிற்கு சென்ற நடிகர் விஜய் அவரை ஆரத்தழுவி அஜித்திற்கு ஆறுதல் கூறினார். அது போல் எஸ்.ஏ. சந்திரசேகரும் அஜித்தை போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்திருந்தார். தந்தையின் இறப்பால் அஜித் உள்பட அவருடைய அண்ணன்கள், தாய் மோகினி, மனைவி ஷாலினி உள்ளிட்டோர் சோகமாகவே இருந்தனர். தந்தையின் இறப்பால் அஜித் மிகவும் உடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications