தாடி பாலாஜியால் தவெகவில் புயல்.. ‛தற்குறி’ ஸ்டேட்டஸை வாட்ஸ்அப்பில் வைத்தது ஏன்? வீடியோவில் விளக்கம்
சென்னை: தவெகவில் பதவி வழங்காத நிலையில் திடீரென்று ‛‛அவளோ புது பாய் பிரண்டுடன் சந்தோஷமாக இருக்கிறாள். தற்குறி நான் அவளின் நினைவுகளோடு'' என்று ஆதவ் அர்ஜுனாவை புஸ்ஸி ஆனந்த் வரவேற்கும் போட்டோவை நடிகர் தாடி பாலாஜி ஸ்டேட்டஸாக வைத்தது விவாதத்தை கிளப்பியது. தாடி பாலாஜி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியானது. இப்போது முதல் முதலாக தாடி பாலாஜி அந்த சம்பவம் பற்றி விளக்கம் அளித்துள்ளார். ஸ்டேட்ஸ் வைத்தது ஏன்? என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். கொடி அறிமுகம், கட்சி மாநாடு, நிர்வாகிகள் நியமனம் என அடுத்தடுத்து நடிகர் விஜய் தனது கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் நடிகர் விஜய் கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுனா, பேச்சாளர் ராஜ்மோகன், சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோருக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டன. இவர்கள் கட்சியில் இணைந்தவுடன் பொறுப்புகள் தேடிப்போயின.
ஆனால் கட்சியில் இவர்களுக்கு முன்பே சேர்ந்த நடிகர் தாடி பாலாஜிக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. தவெகவில் இணைந்தவுடன் விஜய்யின் படத்தை தன்னுடைய மார்பில் பச்சை குத்தினார். ''விஜய்யின் உருவத்தை பச்சை குத்துவதற்கு ஏழு மணி நேரமானது. அந்த வலியை விஜய்க்காக தாங்கிக் கொண்டேன்'' என பெருமிதமாக கூறினார். நடிகர் விஜயுடன் பல திரைப்படங்களில் தாடி பாலாஜி நடித்திருந்தாலும் அவருக்கு பதவி போய் சேரவில்லை.
இந்நிலையில் தாடி பாலாஜி தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்தார். அதில் 'அவளோ புது பாய் பிரண்டுடன் சந்தோஷமாக இருக்கிறாள். தற்குறி நான் அவளின் நினைவுகளோடு' என எழுதப்பட்டு இருந்தது. அதில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவை வரவேற்பது போலவும், தாடி பாலாஜி விஜயின் உருவத்தை மார்பில் பச்சை குத்தியபோது எடுத்த போட்டோவையும் இணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்த பலரும் தவெகவில் பதவி வழங்காததால் தாடி பாலாஜி தனது அதிருப்தியை ஸ்டேட்டஸ் மூலம் வைத்துள்ளதாக தகவல்கள் பரவின. அதாவது புதிதாக கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு வரவேற்பு, பதவி கிடைக்கிறது. ஆனால் கட்சியையே நினைத்து கொண்டு இருக்கும் எனக்கு ஒன்றுமே இல்லை என்பதை தாடி பாலாஜி வெளிப்படுத்தியதாக தகவல்கள் வந்தன.
இதற்கு தாடி பாலாஜி தரப்பில் இருந்து எந்த விளக்கமும் தரப்படவில்லை. இந்நிலையில் தான் நடிகர் தாடி பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் தனது வாட்ஸ் அப்பில் வைத்த ஸ்டேட்டஸ் பற்றி கூறியுள்ளதாவது: இன்றைக்கு தமிழ் கடவுள் முருகருக்கு உகந்தநாள். தைப்பூசம். இந்த தைப்பூச தினத்தில் அனைவருக்கும் மனமார்ந்த தைப்பூச நல்வாழ்த்துகள். இந்த வீடியோ பதிவு எதற்கு என்று கேட்டால், 2-3 நாளாகவே இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் என்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பற்றிய விஷயத்தை எல்லோரும் பகிர்கின்றனர். யாரோ ஒருவர் எனக்கு அனுப்பியதை நான் எதேச்சையாக எனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்தேன். அது இப்படியொரு விவாதப்பொருளாகும் என்று எனக்கு தெரியாது.
இன்னொரு விஷயம்.. எனது நண்பரும், தவெகவின் தலைவருமான மரியாதைக்குரிய விஜய் கட்சி தொடங்கும்போது நான் என்ன சொன்னேன் என்றால் அவரது நண்பராக நான் பணியாற்றுகிறேன். அவர் நல்லபடியாக வர வேண்டும்.அந்த கட்சி நல்லபடியாக வளர வேண்டும் என்று கூறினேன். பதவியை எதிர்பார்த்தோ, எனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்றோ நான் பணி செய்யவில்லை. இன்று தைப்பூச திருநாளில் நான் ஓபனாக சொல்கிறேன். யாருக்கு புரியுதோ இல்லையோ நான் கும்பிடும் கடவுளுக்கு புரியும். எனது நண்பரும், தவெகவின் தலைவருமான விஜய்க்கு புரியும். ஏனென்றால் விஜய் எல்லோருடைய பேச்சையும் கேட்டு அதை அனலிசஸ் பண்ணமாட்டார். அவரே ஒரு முடிவு எடுப்பார். அந்த முடிவு சரியாக இருக்கும். அதனால் தான் அவர் இன்று அரசியல் பயணம் செய்கிறார்.
தலைவருக்கு தெரியும். பாலாஜிக்கு என்ன கொடுக்க வேண்டும்? என்ன கொடுத்தால் பாலாஜி இன்னும் பலமாக ஓடுவார் என்று அவருக்கு தெரியும். தைப்பூச நாளில் சொல்கிறேன். கூடிய விரைவில் என்னுடைய நண்பரும், தலைவருமான விஜயிடம் இருந்து ஒரு அழைப்பு வரும். அந்த அழைப்பில் இருந்து என்னுடைய ஓட்டம் வேறுவிதமாக இருக்கும். இப்போதும் சொல்கிறேன். நான் பதவிக்காக பணி செய்யவில்லை. மார்ச் மாதம் தலைவர் (விஜய்) சுற்றுப்பயணம் போகிறார். அதற்கு உறுதுணையாக இருக்கும் ஆதவ் அர்ஜுனா, பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், என்னுடைய தலைவருக்கும் முதல் வாழ்த்துகள். இந்த சுற்றுப்பயணம் உங்களுக்கு பெரிய மாற்றத்தை கொடுக்கும். இப்போது நிறைய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. உங்களின் கட்சியில் தொண்டனாக பயணிப்பதில் எனக்கு சந்தோஷம். தொண்டனாகவே இருந்தாலும் எனக்கு சந்தோஷம் தான். எப்போதுமே எனது தலைவருக்காக பணியாற்றி கொண்டே இருப்பேன். மீண்டும் ஒருமுறை எனது நண்பரும், தவெக தலைவர் விஜய்க்கும் மனமார்ந்த வாழ்த்துகள்'' என்று கூறியுள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அந்த கூட்டணி, இந்த கூட்டணிலாம் கிடையாது! ஆல் ஏரியாவுலயும் நாம்தான் கில்லி! இஃப்தார் நோன்பில் விஜய்! -
நக்கீரன் கோபால் அப்பவே சொன்னாரே.. கரூரில் நடந்தது உண்மையில் என்ன? ட்ரோன் காட்சிகள் உண்மையா? -
பெரம்பூரில் விஜய் போட்டியிட விரும்புவதன் பின்னணி? திமுகவை அசரடிக்கும் செல்வாக்கு உள்ளதா? -
திருப்பரங்குன்றத்திற்கு பேசாதது ஏன்? விஜய்க்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய தமிமுன் அன்சாரி! -
நடத்தை விதி வந்தால்.. வெளியே வருவாருன்னு சொன்னீங்களே.. வீட்டுக்குள் விஜய்... விழிபிதுங்கும் தம்பிகள் -
விஜய் பாடல்களுக்கு தடை.. பள்ளி ஆண்டு விழாவில் பயன்படுத்த கட்டுப்பாடு.. காரணம் இதுதான் -
விஜய் மானத்தை வாங்கும் அருண்ராஜ்.. சில்வர் டப்பாவையடுத்து, பூஸ்ட் பாட்டில்! தவெக ஸ்டிக்கரை பாருங்க -
காலை முதல் நோன்பு கடைபிடித்த விஜய்.. குல்லா அணிந்து இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்பு! -
ஆதவ் அர்ஜுனாவுக்கு அடுத்த சிக்கல்.. மீண்டும் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரும் முக்கிய வழக்கு! -
திமுகவை திணறடிக்க திட்டம் போடும் சிபிஐ.. பாஜக மெகா பிளான்.. மிகப்பெரிய அரசியல் ட்விஸ்ட் வருது -
29 சீட் டீல் ஓகே? சென்னை வரும் டெல்லி விஐபி.. புஸ்ஸான தவெக பிளான்.. ஜெட் வேகத்தில் திமுக












Click it and Unblock the Notifications