அதென்ன கும்பகோணத்தை சுற்றியே நவக்கிரக கோயில்கள் இருக்கே! ஏன் தெரியுமா? நடிகர் அனுமோகன் விளக்கம்
சென்னை: கும்பகோணத்தை சுற்றி நவக்கிரகங்கள் இருப்பது ஏன் தெரியுமா என்பது குறித்து நடிகர் அனுமோகன் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து வாவ் தமிழா என்ற யூடியூப் சேனலுக்கு நடிகர் அனுமோகன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: 2023 ஆம் ஆண்டு பார்த்த மழையெல்லாம் பெரிய மழையே இல்லை. 2024 ஆம் ஆண்டுதான் பேரிடர் காத்திருக்கிறது என நான் சொன்னது சித்தர் ஏடுகளில் இருந்து பார்த்த விஷயம்.

ஓலைச்சுவடிகளில் சித்தர்கள் எழுதி வைத்ததைத்தான் நான் சொன்னேன். நானாக எதையும் சொல்லவில்லை. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பொதுவாக பஞ்ச பூதங்கள்தான் கடவுள். சூரியனின் வெளிச்சம் பட்டு காடுகள் எரியும். இந்த ஆண்டு நெருப்பின் சக்தி அதிகமாகவே இருக்கும்.
தீவிபத்துகள் எல்லாம் நிறைய நடக்கும். நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களால் பேரிழப்பு ஏற்படும். உலகளவில் ஒரு பேரழிவு உண்டு. இந்தியாவுக்கென ஒரு வரைப்படம் உள்ளது. அதன்படி சித்தர் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், இந்தியாவுக்கு கீழே இருக்கும் இலங்கை நீரில் மூழ்கும் என்றார்.
அதாவது இந்திய பெருங்கடல், வங்கக் கடல், அரபிக் கடல் ஆகிய மூன்றும் சேர்ந்து பொங்கும் என தெரிவித்துள்ளார். சித்தர் ஏட்டில் ராவண பூமி கடலில் மூழ்கும் என உள்ளது. 2024 க்கு பிறகு ஒரு தக்காளி நிறைய பேர் அடித்துக் கொள்வார்கள். ஏனென்றால் விவசாயத்தை அழித்துவிட்டார்கள். இதனால் விளைச்சல் இல்லாத நிலை ஏற்படும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு சித்தர் ஏட்டில் மேற்கு பக்கம் அரபிக் கடல் பொங்கி நிறைய ஊர்கள் கடலில் மூழ்கும் என்றார்கள். அதே போல் மூழ்கியது. அங்கு பொங்கிய போது கிழக்கு பக்கம் தேனாம்பேட்டையில் கடல் பின்னோக்கி சென்றது. அதுதான் மெரினா பீச். தற்போது 2024 ஆம் ஆண்டு டிசம்பர் முடிவதற்குள் மீண்டும் அலையம்மன் தோன்றுவாள்.
தேனாம்பேட்டை சிக்னலில் ஆலையம்மன் கோயில் என ஒன்று இருக்கிறது. அந்த காலத்தில் மீனவர்களால் கட்டப்பட்டது. அதை அலையம்மன் கோயில் என்றுதான் அழைப்பார்கள். 2024 ஆம் ஆண்டு மக்களை பாதிக்கும் வகையில் கிரக அமைப்புகளும் பஞ்ச பூத அமைப்புகளும் இருக்கிறது. இந்த அக்னி நட்சத்திர காலத்தில் இந்தியாவில் உள்ள மலை பிரதேசங்களில் மலைச் சரிவு, நிறைய இடங்களில் பூமி பிளக்கும். நிறைய இடங்களில் மழை அதிகமாக பெய்யும். இதனால் பூமி அழியும்.
உலகிலேயே நவக்கிரகங்களில் கோயில் தமிழகத்தில் கும்பகோணத்தை சுற்றி உள்ளது. சூரியன் பூமியை சுற்றும் போது அதன் கதிர்கள் இரவு நேரத்திலும் சுக்கிரன் மீது பட்டு விழும் இடம்தான் கும்பகோணம். புதன் மீது பட்டும் கும்பகோணத்திற்கு வரும். சூரிய கதிர்களை ஒவ்வொரு கிரகமும் வாங்கிக் கொடுப்பதுதான் கும்பகோணம்! அதனால்தான் கும்பகோணத்தை சுற்றி நவக்கிரகங்கள் உள்ளன. அதனால்தான் இரவில் கூட அங்கு போய் தங்க வேண்டும் என்பார்கள். இரவு நேரத்தில் கூட கிரகங்களின் கதிர்கள் நம் உடலுக்கு கிடைக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாம். இவ்வாறு அனுமோகன் தெரிவித்துள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications