ஷீத்தலுடனான காதல் முறிவு ஏன்?.. நான் தவறு செய்துவிட்டேன்.. பப்லு பரபரப்பு விளக்கம்
சென்னை: ஷீத்தலுடனான காதலை முறிந்து கொண்டதற்கு என்ன காரணம் என்பது நடிகர் பப்லு என்கிற பிரித்விராஜ் விளக்கமளித்துள்ளார்.
நடிகர் பப்லு சின்னத்திரை நடிகர், எம்ஜிஆரின் நாளை நமதே படத்தில் அவருக்கு தம்பி வேடத்தில் நடித்தவர் பப்லு. இப்படி பழைய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.

இவர் பாலசந்திரனின் நாடகங்களில் நடித்தவர். அவருடைய வானமே எல்லை படத்திலும் நடித்திருந்தார். நன்கு நடனம் ஆடக் கூடியவர். 58 வயதிலும் ஜிம்மிற்கு சென்று தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது. இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஆட்டிசம் குறைபாடு கொண்ட ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் அவர்கள் விவாகரத்து பெற்றுவிட்டார்கள். மகனை பப்லுதான் கவனித்து வருகிறார். மகனுக்கு 25 வயது இருக்கும். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தன்னை விட 30 வயது குறைவான ஷீத்தல் என்ற பெண்ணை காதலிப்பதாக அறிவித்திருந்தார்.
இருவரும் ஜோடியாக பல இடங்களுக்கு சென்றனர். ஷீத்தலுக்கு தனது மகனின் வயதுதான் இருக்கும். அப்படி சிறிய வயதில் பெண் தேவையா என கேட்ட போது கூட ஆமாம் எனக்கு உடல்ரீதியான தேவையை பூர்த்தி செய்து கொள்ள எனக்கு பெண் தேவை, எங்கள் வயதை பார்க்காதீர்கள். என் கட்டுமஸ்தான உடலை பாருங்கள்.
என்னை பார்த்தால் 58 வயது போல் இருக்கிறதா என்ற கேள்வியை பப்லு தன் தரப்பு நியாயத்தை கேள்விகளாக எழுப்பினார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் பப்லு- ஷீத்தல் இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திடீரென ஷீத்தல் தனது சமூகவலைதள பக்கத்தில் பிரித்வியுடனான படங்களை நீக்கிவிட்டார்.
இருவரும் பிரிந்து விட்டீர்களா என்ற நெட்டிசனின் கேள்விக்கு ஷீத்தல் லைக் கொடுத்துள்ளார். அது போல் இனியாவது சின்ன பையனா பார்த்து லவ் செய்து கல்யாணம் செய்துகோங்க என நெட்டிசன் ஒருவர் சொன்னதற்கும் ஷீத்தல் லைக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஷீத்தலை விட்டு பிரிந்தது ஏன் என பப்லுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பப்லு, வாழ்க்கையில் நல்ல பாடம் கற்றுக் கொண்டேன். என் பர்சனல் வாழ்க்கையை பர்சனலாக வைக்க தவறிவிட்டேன். இந்த வயதிலும் நான் ஹேப்பியாக இருக்கிறேன். என்னை போலவே எல்லோரும் ஹேப்பியா இருக்க வேண்டும் என நான் குழந்தைத்தனமாக நினைத்து வெளியே சொன்ன சில விஷயங்கள் இப்போது எனக்கே எதிராக திரும்பி விட்டது.
அனைவருமே காரித் துப்புகிறார்கள். இனியும் என் சந்தோஷத்தை வெளியே சொல்லி நான் எதுக்கு அவமானத்தை தேடிக் கொள்ள வேண்டும்? ஷீத்தலுக்கும் எனக்கும் இடையே என்ன நடந்தது என்பதெல்லாம் என் தனிப்பட்ட விஷயம். இனியும் என் தனிப்பட்ட விஷயத்தை வெளியே பேச மாட்டேன். அப்படி வெளியே பேசி கேலி கிண்டலுக்கு ஆளாக மாட்டேன். இவ்வாறு பப்லு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications