'தமிழ் சினிமால கூட இதுவரைக்கும் எந்த ஹீரோவும் செய்ய துணியாத நல்ல விஷயம்'.. நடிகர் பாலையா வீடியோ
சென்னை: நடிகர் பாலகிருஷ்ணாவை கிண்டல் பண்ணி நிறைய வீடியோ வந்திருக்கிறது , ஆனா அவரு நம்ம தமிழ் சினிமால கூட இதுவரைக்கும் எந்த ஹீரோவும் செய்ய துணியாத ஒரு நல்ல விஷயத்தை எடுத்து புரியும்படி சொல்லி உள்ளார் என பாலையாவை பாராட்டி நெட்டிசன் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா அங்கு ஏக பிரபலம். அவரது படம் வந்தாலே மிகப்பெரிய அளவில் சினிமா திரையரங்குகள் அதிரும். அவரது நடிப்பு மட்டும் அதற்கு காரணம் அல்ல. பாலகிருஷ்ணா படம் என்றாலே சண்டை தான் மாஸ். பாலகிருஷ்ணாவை பாலையா என்று செல்லமாக அழைக்கிறார்கள் ஆந்திர மக்கள்.

பாலகிருஷ்ணா தான் ஒற்றை கையில் ரயிலை நிறுத்தும் சண்டை காட்சியில் நடித்தவர். இதேபோல் டாடா சுமோக்களை பறக்க விட்டவர். பேருந்து ரயில், விமானம் எதுவாக இருந்தாலும் அவர் தனி ஒருவராக தூக்கி அடிக்கக்கூடிய சாகசக்காரராக பாலையா தெலுங்கு சினிமாக்களில் காட்டப்படுவார். இன்று வரை தெலுங்கு சினிமாவில் சண்டைக்காட்சிகள் என்றால் அது பாலையாவின் படம் தான் மாஸ் என்கிற அளவில் இருக்கும்.
நடிகர் பாலகிருஷ்ணாவ கிண்டல் பண்ணி நிறைய வீடியோ பாத்துருக்கோம் , ஆனா அவரு நம்ம தமிழ் சினிமால கூட இதுவரைக்கும் எந்த ஹீரோவும்செய்ய துணியாத ஒரு நல்ல விஷயத்தை எடுத்து புரியும்படி சொல்லி இருக்காரு வெல்டன் பாலையா..🔥🙏 pic.twitter.com/AdUhCu2ArO
— Leo பொன்னி..😎😎 (@RajVijayDhoni) November 28, 2023
அதேநேரம் எதார்த்தத்தை மீறி சண்டைக்காட்சிகள், நடனம், எமோசனல் பாலையா படத்தில் இருக்கும் என்பதால் தமிழ் சினிமா ரசிகர்கள் அவரது ஒவ்வொரு பட காட்சிகளையும் கிண்டல் செய்து வீடியோ போடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிக்கிறார்கள். இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், நடிகர் பாலகிருஷ்ணா கிண்டல் பண்ணி நிறைய வீடியோ பாத்திருக்கோம் , ஆனா அவரு நம்ம தமிழ் சினிமால கூட இதுவரைக்கும் எந்த ஹீரோவும் செய்ய துணியாத ஒரு நல்ல விஷயத்தை எடுத்து புரியும்படி சொல்லி இருக்காரு வெல்டன் பாலையா.. என்று கூறி வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில் பாலையா பள்ளிக்குழந்தைகளிடம் குட் டச், பேட் டச் குறித்து பேசியிருப்பார்.
அந்த வீடியோவில் பாலையா பேசுகையில், மார்பகம், பின்னாடி, மற்றும் இரண்டு கால்களுக்கு நடுவில் உள்ள பகுதி என மூன்று இடங்களில் யார் தொட்டாலும் உடனே அம்மாவிடம் போய் சொல்லுங்கள். உங்கள் சக நண்பர்கள், அண்ணன், தம்பி, சித்தப்பா, மாமா, தாத்தா ஏன் அப்பாவே தொட்டாலும் அம்மாவிடம் போய் சொல்லுங்கள் என்று கூறியிருப்பார். இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகிறார்கள். அதேநேரம் விசித்ரா விஷயத்தை குறிப்பிட்டு சிலர் விமர்சனமும் செய்து வருகிறார்கள்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications