சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 பேரும் சண்டை போட்டுக்காதீங்க.. முடிஞ்சா சசிகலாவையும் ஆட்டத்துல சேர்த்துக்கோங்க.. பாக்யராஜ் அட்வைஸ்

Google Oneindia Tamil News

சென்னை: எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி உடைந்து விடக் கூடாது, முடிந்தால் சசிகலாவையும் சேர்த்து வாக்கெடுப்பு நடத்துங்க என நடிகரும் பாஜக நிர்வாகியுமான பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் உள்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது. ஒற்றைத் தலைமை குறித்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிமுக பொதுக் குழு கூட்டம் கூச்சல் குழப்பத்துடன் நடந்து முடிந்துள்ளது.

2024 தேர்தலுக்குப் பின் கர்நாடகா 2 ஆக, மகாராஷ்டிரா 3 ஆக உ.பி.4 ஆக பிரியும்-பாஜக அமைச்சர் உமேஷ் கட்டி 2024 தேர்தலுக்குப் பின் கர்நாடகா 2 ஆக, மகாராஷ்டிரா 3 ஆக உ.பி.4 ஆக பிரியும்-பாஜக அமைச்சர் உமேஷ் கட்டி

இரட்டை தலைமை தொடர வேண்டும் என ஓபிஎஸ் தரப்பின் விருப்பமாக இருக்கிறது. இன்னும் சிலர் ஓபிஎஸ்ஸும் வேண்டாம் இபிஎஸ்ஸும் வேண்டாம், மூன்றாவது நபர் தலைவராக வர வேண்டும் என விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது.

பஞ்சாயத்து

பஞ்சாயத்து

இந்த நிலையில் அதிமுக பஞ்சாயத்துக்காக ஓபிஎஸ் டெல்லி சென்றுள்ளார். அங்கு பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் அதிமுக பொதுக் குழு கூட்டம் கூடுகிறது என நிரந்தர அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ் மகன் உசேன் அறிவித்துள்ளார்.

 எம்ஜிஆர் ஆதரவாளர்

எம்ஜிஆர் ஆதரவாளர்

இதனால் அன்றைய தினம் என்ன நடக்கும் என்பது பெரிய கேள்வியாக உள்ளது. இந்த நிலையில் அதிமுக உடைந்து விடக் கூடாது என நடிகரும் பாஜக நிர்வாகியுமான பாக்யராஜ் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் மீது தீராத பாசம் கொண்டவர் பாக்யராஜ், அவரது அரசியல் வாரிசு என்றும் சொல்லப்பட்டவர்.

பாக்யராஜ் பேச்சு

பாக்யராஜ் பேச்சு

இதுகுறித்து ஒரு விழாவில் பாக்யராஜ் பேசுகையில் அதிமுக உடையக் கூடிய அளவுக்கு ஒரு துர்பாக்கியமான சூழல் இருப்பது மனதுக்கு வேதனையை கொடுக்கிறது. நீயா நானானு இவர்கள் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டு கட்சியை உடைப்பதை விட மறுபடியும் பொதுக் குழு கூட்டுவதற்கு ஏற்பாடு செய்து அந்த குழுவில் இருவரும் தேர்தலில் நின்று யாருக்கு ஓட்டு விழுதோ அவர்களுக்கு கட்டுப்பட்டு போவதுதான் கட்சிக்கு நல்லது.

முற்றுப்புள்ளி

முற்றுப்புள்ளி

எம்ஜிஆர் மக்களுக்காகவே கஷ்டப்பட்டு தொடங்கி கட்சி. அது வீணாக போக கூடாது. இவர்களுக்கு நடுவில் சசிகலா வேறு. முடிந்தால் அவரையும் ஆட்டத்திற்கு சேர்த்து கோங்க. இவங்க எல்லாம் வரதுக்கு காரணமாக இருந்த அவங்க மட்டும் என்ன பண்ணாங்க, ஜெயலலிதாவுடன் கூடவே இருந்தாங்க, அவருக்கு கணவர், குழந்தைகள் இல்லை. அவர் தனியாக இருந்து மீண்டும் சண்டை ஏற்படுவதற்கு பதில் அதற்கும் இப்போதே முற்றுப்புள்ளி வைத்துவிடலாமே.

Recommended Video

    Pugalenthi தடாலடி! OPS இல்லன..CV சண்முகத்துக்கு பதவி மட்டும் எப்படி? *Politics
    சண்டை எதற்கு

    சண்டை எதற்கு

    இதை நான் சொல்றதுனால் சசிகலாவுக்கும் எனக்கும் சம்பந்தம் என நினைக்க வேண்டாம். நான் அவரை இரு, மூன்று முறைதான் பார்த்துள்ளேன். எப்போதும் அனைவரையும் அரவணைத்து செல்வது நல்லது. கட்சி ஒன்றும் இல்லாத அளவுக்கு ஒரு சூழல் வரக் கூடாது. தொண்டர்கள் மன உளைச்சலில் இருக்கிறார்கள். ரத்தத்தின் ரத்தமான தொண்டர்களுக்காகவாவது இந்த இரு தலைவர்களும் தங்களுக்குள் இருக்கும் சண்டையை மறந்து ஒற்றுமையாக இருக்க கேட்டுக் கொள்கிறேன் என்றார் பாக்யராஜ்.

    English summary
    Actor Bhagyaraj asked OPS and EPS not to quarrel each other and ADMK should not split.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X