மக்கள் தலைவராக நல்லாட்சி தருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.. நேரில் வந்து வாழ்த்திய நடிகர் சிரஞ்சீவி
சென்னை: தெலுங்கு முன்னணி நடிகர் பவன் கல்யாண் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நிர்வாகம் பற்றி பாராட்டு தெரிவித்த நிலையில், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி ஸ்டாலினை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
Recommended Video
பூங்கொத்து கொடுத்து ஸ்டாலினுக்கு சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் பதவியேற்றார். அது கொரொனா தொற்று உச்சத்தில் இருந்த நேரமாகும். இருப்பினும், சவாலான அந்த நேரத்தில் தனது விடா முயற்சியால், படிப்படியாக தொற்று எண்ணிக்கையைக் குறைப்பதில் முக்கிய பங்காற்றினார் முதல்வர் ஸ்டாலின்.

ஸ்டாலின் சாதனைகள்
தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த விளம்பரங்களில் தோன்றினார். இதனால், தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் மக்கள் எண்ணிக்கையை அதிகரித்தார். இதுமட்டுமின்றி பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயண திட்டம் கொண்டு வந்தார். மக்களின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு ஆவின் பால் விலையை குறைத்தார், ரேஷன் கடைகளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார் ஸ்டாலின். மேலும், பெட்ரோல் மீது மூன்று ரூபாய் வரி குறைப்பு செய்தார். இதனால் நாட்டின் பிற பகுதிகளில் 3 இலக்க விலையை தாண்டி பெட்ரோல் விற்பனையாகி வரும் நிலையில் தமிழகத்தில் அது இரண்டு இலக்கம் என்ற அளவில் தான் இருக்கிறது

சிறந்த முதல்வர்
இதையடுத்து மு.க.ஸ்டாலினின் நிர்வாகத் திறனை பல தரப்பும் பாராட்ட ஆரம்பித்துள்ளது. தேசிய அளவிலான பிரபல ஊடகத்தின் கருத்துக் கணிப்பில் இந்தியாவின் சிறந்த முதல்வர் பட்டியலில் முதலிடம் பிடித்தார் ஸ்டாலின். இதையடுத்து பல நட்சத்திரங்களும் வெளிப்படையாக ஸ்டாலின் ஆட்சியை பாராட்ட ஆரம்பித்துள்ளனர்.

பவன் கல்யாண்
நேற்றுமுன்தினம், தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தமிழக முதல்வரை பாராட்டி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், நேற்று தெலுங்கு திரையுலக உச்ச நட்சத்திரம் சிரஞ்சீவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன்பிறகு, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குத் தனது ட்விட்டர் பதிவில் புகழாரம் சூட்டியுள்ளார் சிரஞ்சீவி.

சிரஞ்சீவி ஸ்டாலின் சந்திப்பு
இந்தச் சந்திப்பு தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் சிரஞ்சீவி கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. கட்சிகள் தாண்டி அவர் எடுத்திருக்கும் சில பயனுள்ள முயற்சிகள் மூலம் சிறந்த அரசியல் தலைவராக அவர் உயர்ந்திருக்கிறார். மக்களின் தலைவராக, தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்புடன், கொரோனா காலகட்டத்தில் சிறப்பான ஆட்சி தந்து வருகிறார். இதற்காக ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் கூறினேன்". இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

பவன் கல்யாண் வாழ்த்து
முன்னதாக, பவன் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில், "அன்புக்குரிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் அரசியல் செய்ய வேண்டும். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நீங்கள் செய்து வருகிறீர்கள். உங்களது ஆட்சி நிர்வாகம், உங்கள் அரசின் செயல்பாடுகள், உங்கள் மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது." என்று குறிப்பிட்டிருந்தார்.
-
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications