தாயின் ஆசையை நிறைவேற்றிய டேனியல் பாலாஜி.. ஆவடியில் சொந்த செலவில் கட்டிய அங்காள பரமேஸ்வரி கோயில்
சென்னை: சென்னையை அடுத்த ஆவடி அருகில் அங்காள பரமேஸ்வரிக்கு கோயில் கட்டியுள்ளார் டேனியல் பாலாஜி.
தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவர் டேனியல் பாலாஜி. தனது குரலால் அனைவரையும் நடுங்க வைத்தவர். இவர் மருதநாயகம் படத்தின் புரொடெக்ஷன் மேனேஜராக இருந்து பின்னர் சித்தி சீரியலில் நடித்தார்.

இதன் மூலம் டேனியல் என்ற அடைமொழி அவரது பெயர் பாலாஜியுடன் ஒட்டிக் கொண்டது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், பொல்லாதவன், பைரவா, வேட்டையாடு விளையாடு, கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் சென்னையில் ஆவடி அருகே உள்ள போலீஸ் செக் போஸ்ட் அருகே ரகதூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கட்டியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு இந்த கோயிலை கட்டத் தொடங்கி, இந்த ஆண்டு மார்ச் 9ஆம் தேதி கும்பாபிஷேகத்தையும் டேனியல் பாலாஜி நடத்தி முடித்தார். தனது அம்மாவின் ஆசைக்காக டேனியல் பாலாஜி இந்த கோயிலை கட்டியிருந்தார்.
இது பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த கோயிலை எப்படி கட்டினார் என்பது குறித்து டேனியல் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அதில் அவர் கூறுகையில் முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. கட்டுவதற்கு முன்பு கோயில்கள் வரலாறு பற்றி நான் தெரிந்து கொண்டேன்.
கோயில்களை பொருத்தமட்டில் சவுண்ட் எனர்ஜி என்பது முக்கியமானது. எனவே இந்த அங்காள பரமேஸ்வரி கோயிலிலும் அந்த வசதி செய்யப்பட்டுள்ளது. சிறு வயதில் இருந்தே எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஆயினும் நான் கடவுளிடம் எப்போதும் வேண்டியதில்லை.
கடவுள் எப்போது என் கூட இருக்க வேண்டும் ென்று மட்டுமே நான் ஆசைப்பட்டேன். கோயில் கட்டும் பணிகளின் போது நான் நேரடியாக ஈடுபட்டதற்கான காரணம் எனக்கு இருக்கும் ரசனைதான். என்னுடைய இறைத்தாய்க்கு நான் கட்டிக் கொடுத்த வீடுதான் இந்த கோயில்.
கடவுளுக்கு என்னுடைய நன்றிக் கடன்தான் இந்த கோயில் .எனக்கு இதுவரை கிடைத்த உயரங்கள் எதுவும் நான் எதிர்பார்க்காதவை. நான் எது செய்தாலும் அந்த பணியின் மீது மட்டும் என் கவனம் இருக்கும். அந்த பணியால் நான் பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இருக்காது. ஆனாலும் எனக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும்.
மனதார நாம் நம்பும் விஷயங்கள் நிச்சயம் நடக்கும். அனைத்தையும் வாய் விட்டு சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. வேண்டுதலுக்கென்று தனியாக எந்த முறையும் இல்லை. எதிலும் நம்பிக்கை வேண்டும். அது கண்மூடித்தனமானதாக இருந்தாலும் பரவாயில்லை. கோயிலில் சற்றஉ நேரம் அமைதியாக இருந்தாலே போதும் பல நன்மைகள் கிடைக்கும். கோயிலுக்கு நிம்மதியுடன் வந்து நிம்மதியாகச் செல்லுங்கள். மனம் அமைதியடையும் வாழ்வில் நன்மை கிடைக்கும் என தெரிவித்திருந்தார் டேனியல் பாலாஜி.
அப்படிப்பட்ட டேனியல் பாலாஜி நேற்று இரவு இறைவனடி சேர்ந்தார். அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொட்டிவாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய உடல் புரசைவாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. காலை முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கோயில், ஆன்மீகம் என இருந்த டேனியல் பாலாஜிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications