'99 சதவீதம் இன்னும் தெருவிலதான் நிக்குது சார்'... சர்ச்சையான 'வாத்தி' தனுஷ் பேச்சு
நடிகர் தனுஷ் வாத்தி பட ஆடியோ ரிலீஸில் பேசிய டியூசன் கதை விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: நடிகர் தனுஷ் வாத்தி பட ஆடியோ ரிலீஸில் பேசிய சில விஷயம் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. பல லட்சம் ரசிகர்களை கொண்ட தனுஷ் போன்ற நடிகர்கள், மேடையில் பேசும் போது கவனமாக பேச வேண்டும் என்றும், அவரது பேச்சு, நடை உடை அனைத்தும் பின்பற்றுவார்கள் என்பதால் அவர்களுக்கு நல்வழிகாட்ட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

வெங்கி அத்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா நடித்துள்ள 'வாத்தி'திரைப்படம் வரும் பிப்ரவரி 17ம் திரையரங்குகளில் வெளியாகிறது. ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிப்ரவரி 4ம் தேதி நடந்தது. இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் இந்த இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய தனுஷ், படிப்பு பிரசாதம் மாதிரி. அதை பைவ் ஸ்டார் ஹோட்டல்ல விக்காதீங்க' என்பது தான் வாத்தி படத்தின் கதை. பள்ளியில் பெத்தவங்க பீஸ் கட்டிருவாங்கன்னு கவனமே இல்லாத சுத்திருக்கேன். ஆனால் இன்னைக்கு என் பிள்ளைகளை படிக்க வைக்குறப்போ தான் அது தெரியுது. எந்த சூழ்நிலை வந்தாலும் படிப்பு ரொம்ப முக்கியம். எண்ணம் போல் வாழ்க்கை, உங்களுடைய எண்ணத்தை படிப்புல வையுங்க. அது தான் உங்களைக் காப்பத்தும். என் வண்டிக்கு பின்னால் என்னைப் பின்தொடர்ந்து சிலர் வர்றாங்க.. உங்கள் பெற்றோர்கள் உங்களை நம்பி அனுப்பிவைக்கிறாங்க.. நீங்கள் இந்த மாதிரி செய்யும் போது எனக்கு பயமாக இருக்கு என்று ஆக்கப்பூர்வமாக பேசினார்.












Click it and Unblock the Notifications