ஒரே சமூகம்.. ஓட்டுகளை பிரிக்கும் சுந்தர் சி.. பிடிஆருக்கு செம டஃப்.. திடீர் வேட்பாளர் ஆனது எப்படி?
சென்னை: மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை எதிர்த்துக் களமிறங்குகிறார் நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி. முதல் முறையாக தேர்தலில் களம் காணும் சுந்தர் சி, தனது சக சமூகத்தைச் சேர்ந்தவரான பிடிஆரை எதிர்த்து களம் இறக்கப்பட்டுள்ளார்.
வரும் சட்டசபை தேர்தலில் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஏசி சண்முகம் கொடுத்த அறிவிப்பில், அதிமுக ஒரு தொகுதியும், பாஜக ஒரு தொகுதியும் தங்களுக்கு ஒதுக்கியுள்ளதாகவும், அதிமுக ஒதுக்கிய தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலும், பாஜக ஒதுக்கும் தொகுதியில் தாமரை சின்னத்திலும் போட்டியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மதுரை மத்தியில் சுந்தர்.சி
அதன்படி, மதுரை மத்திய தொகுதியை அதிமுக, புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கியுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஏசி சண்முகம். இந்த தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் திரைப்பட நடிகரும், இயக்குநருமான சுந்தர் சி போட்டியிடுவார் என அறிவித்துள்ளார். பாஜகவில் நடிகை குஷ்பு பொறுப்பு வகித்து வரும் நிலையில், அவரது கணவரான சுந்தர் சி இந்த சட்டசபை தேர்தலில் களமிறங்குகிறார்.
மதுரை மத்திய தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏவும், அமைச்சருமான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். கொண்டைக்கட்டி தொண்டைமண்டல வெள்ளாளர் சமூகத்தைச் சேர்ந்த அவர், மதுரை மத்திய தொகுதியில் பாரம்பரியமான செல்வாக்கைக் கொண்டவர். 2 முறை அங்கு வெற்றி பெற்றுள்ளார். அவரது தந்தை பிடிஆர் பழனிவேல்ராஜனும் அங்கு வெற்றி பெற்று செல்வாக்காக இருந்தவர்.
ஒரே சமூகம்
திமுகவின் அறிவு முகமாக உள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை மதுரை மத்திய தொகுதியில் வீழ்த்துவது சாதாரண காரியமல்ல என்பதை உணர்ந்த ஏ.சி. சண்முகம், அவர் சார்ந்த அதே பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த சினிமா பிரபலம் சுந்தர் சி-யை களமிறக்கி உள்ளார். மதுரை மத்தியில் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கணிசமாக உள்ளனர். அவர்களின் வாக்குகள் முழுமையாக பிடிஆர் பக்கம் செல்ல விடாமல் தடுக்கவும் சுந்தர் சி களமிறக்கப்பட்டுள்ளார்.
மேலும், திமுகவின் ஸ்ட்ராங் வேட்பாளர்களை எதிர்க்க, பிரபலங்களை களமிறக்குவது ஒரு உத்தி. அந்தவகையில், இந்த முறை மதுரை மத்திய தொகுதியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை எதிர்க்க சுந்தர் சி களமிறக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக நடிகை குஷ்பு உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுந்தர்.சி வேட்பாளர் ஆனது எப்படி?
கடந்த மாதம் மதுரை வண்டியூரில், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்தின், ஏ.சி.எஸ் அறக்கட்டளை சார்பில் 140 அடி உயர சுதந்திரப் போராட்ட வீரர், வ.உ.சிதம்பரம் பிள்ளை சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது. இதில் இயக்குநர் சுந்தர்.சி கலந்து கொண்டார்.
அந்த நிகழ்வில் சுந்தர் சி பேசும்போது, "சுந்தர்.சி என்பது என்னுடைய பெயர். இதில் இருக்கும் சி என்பது என்னுடைய அப்பாவின் பெயரான சிதம்பரம் பிள்ளை என்பதை குறிக்கும்" என பேசியிருந்தார். மேலும் ஏ.சி.சண்முகமும் தானும் நண்பர்களாக இருப்பதாகவும் சுந்தர்.சி மேடையில் பேசியிருந்தார். இந்தச் சூழலில் தான் சுந்தர்.சி மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார்.
-
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்!












Click it and Unblock the Notifications