Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துரும்பாக இளைத்த குண்டு கல்யாணம்! ஜெயலலிதா அம்மா இல்லையே! கண்ணீர் விட்டு அழுத அதிமுக ஸ்டார் பேச்சாளர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக நட்சத்திர பேச்சாளரும் காமெடி நடிகருமான குண்டு கல்யாணம் துரும்பாக இளைத்துள்ளார். மேலும் அவருக்கு வாழ்வாதாரமும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

குண்டு கல்யாணம் 1967 ஆம் ஆண்டு சினிமாவில் சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். அவருடைய முதல் படம் மழலை பட்டாளம். இது 1979 இல் வெளியானது. இதைத் தொடர்ந்து 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் நாங்க புதுசா, நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்காக ஒரு பாடலையும் எழுதியுள்ளார். இவர் ரஜினிகாந்துடன் நிறைய படங்களில் நடித்துள்ளார். இதுவரை அவர் 750 படங்களில் நடித்துள்ளார்.

இவரது இயற்பெயர் லட்சுமி நாராயணன். இவரது தந்தை குண்டு கருப்பையா. இவர் எம்ஜிஆரின் தீவிர ஆதரவாளர். இவரும் 1950 முதல் 1970 வரை நடிகராக இருந்தார். இவருடைய பெயரில் உள்ள குண்டு என்ற அடைமொழி கல்யாணத்துடன் ஒட்டி கொண்டது. குண்டு கல்யாணம் தனது 6 வயது முதலே நடித்து வருகிறார். அவர் தந்தை குண்டு கருப்பையாவுடன் பல நாடகங்களில் நடித்துள்ளார்.

 என்ன படங்கள்

என்ன படங்கள்

தில்லு முல்லி, போக்கிரி ராஜா, சிவப்பு மல்லி, மெல்ல திறந்தது கதவு, தூங்காதே தம்பி தூங்காதே, காவலன் அவன் கோவலன் உள்ளிட்ட படங்களில் குண்டு கல்யாணம் நடித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்தார். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு டிடிவி தினகரனுடன் குண்டு கல்யாணம் சென்றார்.

ஓபிஎஸ்- இபிஎஸ்

ஓபிஎஸ்- இபிஎஸ்

பின்னர் அங்கிருந்து விலகி ஓபிஎஸ் - எடப்பாடி பழனிசாமி முன்பு நட்சத்திர பேச்சாளராக இணைந்தார். இதன் பிறகு சினிமாவிலும் அரசியலிலும் செல்வாக்கை இழந்த குண்டு கல்யாணம் கடந்த ஆண்டு நாம் இருவர் நமக்கு இருவர் எனும் சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளஆர். இந்த நிலையில் இவர் அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

குங்கும பொட்டு ஏன்

குங்கும பொட்டு ஏன்

அதில் அவர் கூறுகையில் மனிதராக பிறந்த அத்தனை பேருக்கும் ஏதோ ஒரு வகையில் பக்தி இருக்கும். ஆனால் எனக்கு 3 வயதாக இருக்கும் போதோ என் அப்பா என் நெற்றியில் விபூதி, பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என மிகவும் பழக்கப்படுத்தினார். அதை நானும் பழக்கிக் கொண்டேன் என தனது நெற்றியில் வைக்கும் மிகப் பெரிய பொட்டு குறித்து குண்டு கல்யாணம் தெரிவித்தார்.

நாடக கம்பெனி நஷ்டம்

நாடக கம்பெனி நஷ்டம்

மேலும் அவர் கூறுகையில் என் அப்பா குண்டு கருப்பையா அந்த காலத்தில் நாடக கம்பெனி நடத்தி வந்தார். அது போல் படங்களிலும் பிஸியாக நடித்து கொண்டிருந்தார். 60 பேரை வைத்து நாடக கம்பெனி ஆரம்பித்து அது சரியாக போகாததால் நஷ்டம் ஆகிவிட்டது. இதனால் கடைசி காலத்தில் அப்பாவின் இறுதி சடங்கிற்கு கூட பணம் இல்லை.

கல்யாணம் என அழைத்த விசு

கல்யாணம் என அழைத்த விசு


எனக்கு எம்ஜிஆர்தான் உதவினார். என்னை படிக்க வைத்து என் குடும்பத்தை பார்த்துக் கொண்டார். விசு சாரின் படத்தில் நடித்த போது அவர் எப்போதும் கதாபாத்திரத்தின் பெயரை வைத்துதான் கல்யாணம் என அழைப்பார். அதே போல் பாலசந்தர் சாரும் அப்படியே அழைத்து வந்தார். இந்த பெயர் நன்றாக இருந்தது. அதனால் அப்பாவின் பெயருக்கு முன் இருக்கும் குண்டு என்ற வார்த்தையை எடுத்து குண்டு கல்யாணம் என வைத்துக் கொண்டேன் என்றார்.

இளைத்துவிட்டேன்

இளைத்துவிட்டேன்

ஏன் இப்படி உங்கள் உடல் இளைத்துவிட்டது என கேட்ட போது குண்டு கல்யாணம் கூறுகையில் நானும் என் அப்பாவை போல் குண்டாக இருந்தேன். எனக்கு கடந்த 3 ஆண்டுகளாக கிட்னியில் பிரச்சினை ஏற்பட்டு வாரத்தில் இரு முறை டயாலிசிஸ் செய்து கொண்டிருக்கிறேன். அதனால் எனது உடல் மெலிந்து விட்டது. இந்த டயாலிசிஸ் சிகிச்சைக்காக ரூ 3000 ஆகிறது. என்னுடைய மருத்துவச் செலவையும் என்னையும் என் மகள் பார்த்து கொள்கிறார். நான் மது அருந்த மாட்டேன், சிகரெட் பிடிக்க மாட்டேன். எனக்கு கெட்ட பழக்கமும் இல்லை. ஆனாலும் எனக்கு கடவுள் இந்த பிரச்சினையை கொடுத்துவிட்டார். எனக்கு உடல் நிலையை சரி செய்துவிட்டுத்தான் திருமணம் செய்து கொள்வேன் என என் மகள் இருக்கிறாள். எனக்கு வருமானமும் இல்லை. முன்பு 10 நாட்கள் ஷூட்டிங்கில் நடித்த போது வெறும் 100 ரூபாயை கொடுத்தார் தயாரிப்பாளர், எனக்கு மனமுடைந்துவிட்டது.

 மருத்துவ செலவு

மருத்துவ செலவு

உடனே நான் என் பாக்கெட்டில் இருந்த 1 ரூபாயை எடுத்து அவரிடம் 101 ரூபாயை அவரிடம் கொடுத்துவிட்டேன். எனக்கு மனதே வெறுத்துவிட்டது. ஏதோ ஒரு செலவுக்கு ஆகும் வகையில் கொடுக்காமல் வெறும் ரூ 100 கொடுத்தார்கள். ஜெயலலிதா அம்மா உயிரோடு இருந்திருந்தால் எனக்கு உதவியிருப்பார்கள். அவர் இல்லாதது எனக்கு மிகப் பெரிய இழப்பாகி விட்டது. சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பல லட்சம் ஆகுமாம். யாராவது உதவினால் நன்றாக இருக்கும் என கண் கலங்கியபடியே கூறினார் குண்டு கல்யாணம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+