3 வருடம் தனிக் குடித்தனம்.. பணத்தையும் ஆட்டைய போட்ட பிரபல நடிகர்! இப்போ தொக்கா மாட்டிக்கிட்டாரு!
சென்னை: பிரபல காமெடி நடிகரான காதல் சுகுமார் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தனிக் குடித்தனம் நடத்தியதோடு, நகை பணம் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொண்டு தன்னை ஏமாற்றி மோசடி செய்து விட்டதாக பிரபல நடிகை ஒருவர் கடந்த ஜனவரி மாதம் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், புகார் கொடுத்து 3 மாதங்களுக்குப் பிறகு மாம்பலம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நடிகர் சுகுமார், காதல் அழிவதில்லை, விருமாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தாலும் காதல் படமே அவருக்கு அடையாளத்தை கொடுத்தது. அதன் காரணமாகவே அவர் காதல் சுகுமார் என அழைக்கப்படுகிறார்.
தமிழ் திரை உலகில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர் திருட்டு விசில், சும்மாவே ஆடுவோம் என இரண்டு திரைப் படங்களை இயக்கியும் இருக்கிறார். தற்போது பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் ஓரிரு படங்களை சிறிய பட்ஜெட்டில் தயாரித்து இயக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் யூட்யூப் சேனல்கள் உள்ளிட்டவற்றிலும் பேட்டி அளித்து வருகிறார்.

இந்த நிலையில் தான் தன்னை காதல் சுகுமார் திருமணம் செய்வதாக ஏமாற்றி பணம், நகைகள் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டதாக நடிகை ஒருவர் பரபரப்பு புகாரை கூறி அதிர வைத்திருக்கிறார். சென்னையைச் சேர்ந்த அவர் ஒரு சில படங்களை துணை நடிகையாக நடித்திருக்கிறார். இந்த நிலையில் ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை பிரிந்த நிலையில் குழந்தையுடன் வசித்து வரும் அந்த நடிகைக்கும் காதல் சுகமாருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அவரை காதலிப்பதாக கூறிய காதல் சுகுமார் அந்த நடிகையை தனியாக குடி வைத்திருக்கிறார். மேலும் அவருடன் தனிக் குடித்தனம் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அடிக்கடி அந்த நடிகையிடம் இருந்து நகை பணம் உள்ளிட்டவற்றையும் சுகுமார் வாங்கி வந்திருக்கிறார். இதற்கிடையே கடந்த சில நாட்களாக அந்த நடிகையுடன் சுகுமார் பேசவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் அவர் செல்போன் நம்பரையும் பிளாக் செய்து இருக்கிறார்.
இதை அடுத்து தன்னை திருமணம் செய்து கொள்வதாக பணம் நகை உள்ளிட்டவற்றை வாங்கிவிட்டு தன்னிடம் பேசாதது ஏன் என நடிகை கேட்டதற்கு தனக்கு திருமணம் ஆகிவிட்டது என சுகுமார் கூறியிருக்கிறார். அப்போது தான் சுகுமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆனதும், அந்த பெண்ணுக்கு தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து தன்னுடன் பொய்யாக பழகியதோடு நகை பணம் உள்ளிட்டவற்றை மோசடி செய்து விட்டதாக சுகுமார் மீது அந்த நடிகை காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதமே புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் புகார் கொடுத்து மூன்று மாதங்களுக்கு பிறகு காதல் சுகுமார் மீது சென்னை மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருக்கின்றனர். பெண்கள் வன்கொடுமை சட்டம், மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே இது தொடர்பாக காவல் நிலையத்தில் துணை நடிகை புகார் அளித்த நிலையில் பணத்தை திருப்பித் தருவதாக கூறி நடிகர் சுகுமார் செக் வழங்கி இருக்கிறார், ஆனால் வங்கியில் காசோலையை செலுத்திய நிலையில் அது பணம் எதுவும் இல்லாமல் பவுன்ஸ் ஆகிவிட்டதாக துணை நடிகை மீண்டும் புகார் அளித்தார்.
இதை அடுத்து மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதை அடுத்து வழக்கின் விசாரணை தீவிரமடைந்திருக்கும் நிலையில் காதல் சுகுமாரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதற்குப் பிறகு கைது நடவடிக்கையும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications