பையன் கதவ ரொம்ப நேரம் திறக்காம மூடியிருந்தா.. போய் என்னன்னு பாருங்கள்.. நடிகர் கார்த்தி அட்வைஸ்
சென்னை: உங்கள் பையன் கதவ ரொம்ப நேரமா மூடியிருந்தா என்னனு போய் பாருங்கள் என பெற்றோர்களுக்கு நடிகர் கார்த்தி அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழக காவல் துறை சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில் நான் எப்போதும் காவல் துறையை ஹீரோவாக பார்க்கிறேன். நான் சில மாதங்களுக்கு முன்னர் போதைப் பொருள் ஒன்றை பற்றி பேசியிருந்தேன். அதை பற்றி பெற்றோர் பலர் கேட்கிறார்கள்.
மாணவர்களை கேட்டால் என்னுடைய நண்பர்கள் பயன்படுத்துவார்கள் என்கிறார்கள். அந்த போதை பொருள் ஜில்லென இருக்கும் என்கிறார்கள். பெற்றோருக்கு அதை பற்றி பெரிதாக எதுவும் தெரியவில்லை. ஆனால் இளைய தலைமுறையினருக்கு எல்லாமே தெரிந்திருக்கிறது.

மொபைலில் கேம் விளையாடி விளையாடி வெளியே சென்றால் அவர்களுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. அந்த வயதில் எல்லாம் டிரை செய்யணும் என தோன்றும். இப்போது பள்ளி மாணவர்களும் போதை பொருள் விவகாரத்தில் சிக்கிவிட்டார்கள். இது மிகவும் பயத்தை உண்டாக்கி வருகிறது.
போதை பொருட்கள் நமது மூளையை பேதளிக்க வைக்கிறது. இப்போது எல்லா கடைகளிலும் இது மறைமுகமாக விற்கப்படுகிறது. பள்ளிகளுக்கு அருகே கூட கிடைக்கிறது. போதை பொருள்கள் பயன்படுத்துவது வீரம் என கருதுகிறார்கள். விளையாட்டு மிக மிக முக்கியம் என நான் கருதுகிறேன். அதை இந்த அரசு அதிகமாக ஊக்கப்படுத்த வேண்டும்.
பெற்றோர் முதலில் பிள்ளைகளிடம் நண்பர்களாக பழகுங்கள். கதவை நீண்ட நேரம் மூடியிருந்தால் என்ன செய்கிறார்கள் என பாருங்கள். போதை பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் மகிழ்ச்சி, சோகம் என அனைத்து சமயங்களிலும் இது போன்ற போதை பொருளை பயன்படுத்துவதாக கூறுகிறார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளை கவனித்து நண்பர்களாக வழிநடத்த வேண்டும். போதைப்போருள் இல்லாத ஒரு சமுதாயத்தை நாம் அனைவரும் சேர்ந்து தான் உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications