திவேதி, தீவட்டி எல்லாம் இல்லை..தேவாட்டியா..அர்த்த ராத்திரி ஆராய்ச்சியில் டோஸ் வாங்கிய நடிகை கஸ்தூரி
சென்னை: ஐ.பி.எல். ஜூரத்தில் எல்லோரும் மூழ்கிக் கிடந்த நேரத்தில் நடிகை கஸ்தூரி நள்ளிரவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் பேரு என்ன திவேதியா, தேவாட்டியாவா என ஆராய்ச்சியில் இறங்கினார். அவரது இந்த பெயர் ஆராய்ச்சிக்கு நெட்டிசன்கள் இரவோடு இரவாக சூடாகவும் பதிலளித்தனர்.
ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நேற்று இரவு மோதின. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 3 முக்கிய விக்கெட்டுகளை ராஜஸ்தான் அணியின் ராகுல் திவேதியா வீழ்த்தினார்.

ராகுல் திவேதியா சேட்டை
விக்கெட்டுகளை ராகுல் திவேதியா வீழ்த்தியது ஒன்றும் பெரிய விஷயமாக இல்லை.. இவர்தான் சென்னையின் தோல்விக்கு காரண கர்த்தா என்பது கூட இன்னொருபுறம்.. ஆனால் ஆடுகளத்தில் இவர் செய்த சேஷ்டை பாஷைகள்தான் எல்லோரையும் செம கடுப்பில் தள்ளிவிட்டது.

நடிகை கஸ்தூரி சர்ச்சை ட்வீட்
இதனால்தான் என்னவோ இவரது பெயரை எப்படி அழைக்கலாம் என ஒரு திடீர் ஆராய்ச்சியில் இரவோடு இரவாக நடிகை கஸ்தூரி ட்விட்டரில் இறங்கினார். முதலில் ஒரு பதிவை போட்டு அதை நீக்கிவிட்டார் கஸ்தூரி. பின்னர் தேவாட்டியா என்ற உச்சரிப்பு சரியாக இருக்கும். corrected . thx. என குறிப்பிட்டிருந்தார் கஸ்தூரி. உடனடியாக @Malli_official என்ற நெட்டிசன், Tweet அசிங்கமா இருக்கு.. உங்க ரேஞ்சுக்கு இது தேவையா ma'am..?! என பதில் கொடுத்தார்.

நடிகை கஸ்தூரிக்கு பதில்கள்
மேலும் @yours_CPrasanK என்ற நெட்டிசன், அவன் பேர் திவாட்டியா....ரொம்ப சீன் போட வேண்டாம்...மிகவும் தரக்குறைவான பதிவு... என கொந்தளித்தார். இதேபோல நெட்டிசன்கள் பலரும் கஸ்தூரியை வசைமாறி பொழிந்தனர். பின்னர்தான் இரவு 11.21 மணிக்கு நடிகை கஸ்தூரி தமது ட்விட்டர் பக்கத்தில், திவேதி, தீவட்டியெல்லாம் இல்லை. தேவாட்டியா தான் கரெக்ட்டு. ஆனா இதுக்குனே அலையறவங்களுக்கு பேரு கூட கெட்ட வார்த்தையாதான் தெரியும். அட போங்கப்பா. என பதிவிட்டிருந்தார்.

புகழவும் செய்த நெட்டிசன்கள்
உடனடியாக @mskisforjustice என்ற நெட்டிசன், உங்க யூகத்துக்கு எல்லாம் போஸ்ட் செய்யாதீங்க.. எதையும் சரியாக புரிந்து கொண்டு போடுங்க.. என்று சொன்னதுடன் கஸ்தூரிக்கு அட்வைஸும் செய்திருந்தார். ஆனால் கஸ்தூரியோ, நீங்கதான் தப்பா புரிஞ்சுகிட்டீங்க என பதில் கொடுத்தார். @kenanandu1 என்ற நெட்டிசனோ, தேவையான நேரத்தில கியூமர் போட்டு கலாய்க்கிறதில உங்களுக்கு நிகர் நீங்க தாம்பா! என புகழவும் செய்திருக்கிறார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications