Actor Krishna| நடிகர் கிருஷ்ணாவின் வாக்குமூலத்தில் பெரிய ட்விஸ்ட் .. மெடிக்கல் டெஸ்ட்டில் மட்டும் மாறினால்?
சென்னை: தனக்கு இரைப்பை அலர்ஜி இருப்பதால் போதைப்பொருள் பயன்படுத்துவதற்கு வாய்ப்பே இல்லை என்று நடிகர் கிருஷ்ணா நுங்கம்பாக்கம் போலீசாரிடம் விசாரணையின் போது கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் பிரதீப் குமாருக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், ஸ்ரீகாந்த் உடன் மட்டுமே நட்போடு தான் பழகி வந்ததாகவும் நடிகர் கிருஷ்ணா கூறியுள்ளாராம். மருத்துவ பரிசோதனை முடிவின் அடிப்படையில் தான் கிருஷ்ணா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் பிரபல முன்னணி நடிகரான ஸ்ரீகாந்த், சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறுகையில், என் தந்தை வங்கி அதிகாரி. நான் 9-ம் வகுப்பு வரை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பள்ளியில் படித்து வந்தேன். வங்கி அதிகாரியான என் தந்தை சென்னைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். இதனால் எங்கள் குடும்பமும் சென்னைக்கு குடிபெயர்ந்தது.

பட வாய்ப்பு இல்லை
சென்னை திருமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்த நான், எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்தேன். படித்த உடன் சினிமாவில் நுழைந்து விட்டேன். 'ரோஜாக்கூட்டம்' படம் எனக்கு சினிமாவில் நல்ல பெயரை தந்தது. எனது திருமண வாழ்க்கையில் கூட, பிரச்சினைகள் வந்தன அதன்பிறகு நான் நடித்த சில படங்கள் வெற்றிபெறவில்லை. படவாய்ப்புகள் இல்லாமல் மன உளைச்சலில் சிக்கியிருந்தேன். கடன் பிரச்சினையிலும் சிக்கி இருந்தேன்.
பணத்திற்கு பதில் கொகைன்
இந்தநிலையில் பட அதிபர் பிரசாத்துடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் தயாரித்த 'தீங்கிரை' படத்தில் என்னை கதாநாயகனாக நடிக்க வைத்திருந்தார். அந்த பழக்கம்தான் என் வாழ்க்கை பாதையை தலைகீழாக மாற்றிவிட்டது. அவர் எனக்கு பாக்கி தொகை ரூ.10 லட்சம் தர வேண்டியிருந்தது. அந்த பணத்தை கேட்டபோது, அதற்கு பதிலாக 'கொகைன்' போதைப்பொருளை எனக்கு கொடுத்தார்.
மனஅழுத்தம்
அவர் நடத்திய விருந்து நிகழ்ச்சியில் போதைப்பொருள் வழங்கப்பட்டது. அதிலிருந்துதான் எனக்கு கொகைன் போதைப்பொருள் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் மன அழுத்தத்தை போக்க நான் வீட்டில் வைத்தே கொகைன் பயன்படுத்த ஆரம்பித்தேன். போதைப்பொருள் கும்பலை சேர்ந்த ஆப்பிரிக்க நாட்டவரான ஜான் ஆகியோருடன் எனக்கு நேரடி பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தி கொகைன் வாங்கினேன்.
போதைப்பொருள் தாராளம்
சினிமாவில் தற்போது விருந்து நிகழ்ச்சிகளில் கொகைன் போதைப்பொருள் தாராளமாக இருக்கிறது. கொகைன் பயன்படுத்துவது சட்டப்படி தவறு என்று தெரியாமல், தப்புசெய்துவிட்டேன். எனது மகனும், மகளும் தற்போது பள்ளியில் படித்து வருகிறார்கள். நான் இப்போது போலீசில் சிக்கியுள்ளதால், அவர்களது வாழ்க்கையும் பாழாகிவிடும் என்று அச்சமாக உள்ளது" என்று வேதனையுடன் ஸ்ரீகாந்த் வாக்குமுலம் அளித்ததாக கூறப்படுகிறது. நடிகர் ஸ்ரீகாந்த் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 3 சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகர் கிருஷ்ணா செல்போன் ஸ்விட்ச் ஆஃப்
நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து, கழுகு படத்தில் நடித்த பிரபல நடிகர் கிருஷ்ணா மீதும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இவர் முன்னணி இயக்குனரான விஷ்ணுவர்தனின் தம்பி ஆவார். கிருஷ்ணாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் கொடுத்திருந்தனர். இதனிடைமேய செல்போன் சுவிட்ச்-ஆப் ஆகியிருந்ததால் நடிகர் கிருஷ்ணா தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் பரவியது.
போதை பொருள்
இதனிடைய தனிப்படை போலீசார் கிருஷ்ணாவை கண்டுபிடித்துவிட்டனர். அவரிடம் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நடிகர் கிருஷ்ணாவிடம் போதை பொருள் தொடர்பாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மறுபுறம் அவரிடம் விசாரித்த போது, போலீசாரிடம் சில தகவல்களை கிருஷ்ணா கூறியிருக்கிறார்.
நடிகர் கிருஷ்ணா வாக்குமூலம்
இதன்படி, எனக்கு இரைப்பை அலர்ஜி இருப்பதால் போதைப்பொருள் பயன்படுத்துவதற்கு வாய்ப்பே இல்லை.. இதயத்துடிப்பு வேகமாக இருப்பதால் அது தொடர்பாக சிகிச்சை எடுத்து வருகிறேன். பிரதீப் குமாருக்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.. ஸ்ரீகாந்த் உடன் மட்டுமே நட்போடு பழகி வந்தேன்.. அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் இருந்து நான் போதைப் பொருள் வாங்கிச் செல்வதாக தவறான தெரிவித்துள்ளார் பிரதீப்.. " இவ்வாறு கூறியுள்ளார். இதையடுத்து மருத்துவ பரிசோதனை முடிவின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணா மீது அடுத்த கட்ட சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications