நீட் கீட்டுலாம் தூக்கி போடுங்க! நாடு முழுக்க தமிழக பாடத்திட்டம் கொண்டு வாங்க! மன்சூர் அலிகான் அதிரடி
சென்னை: நீட் கீட்டு எல்லாத்தையும் தூக்கி போடுங்க என்றும் தமிழ்நாட்டு பாடம்தான் நாடு முழுக்க வைக்க வேண்டும் என்றும் நடிகர் மன்சூர் அலிகான் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
நீட் எனும் தேசிய தகுதி தேர்வு கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை எழுதினால்தான் மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்கிறது. இந்த தேர்வை எழுத தற்போது நிறைய பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

இத்தனை கடினமான இந்த தேர்வை எழுதுவதில் அரசு பள்ளி மாணவர்கள், ஏழை எளிய மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். இதனால் அவர்களுடைய மருத்துவக் கனவு என்பது கானல் நீராகிவிடுகிறது. பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் பணம் செலவாகிறது.
இதனால் அரியலூர் அனிதா முதல் சென்னை சிட்லபாக்கம் ஜெகதீஸ்வரன் வரை இதுவரை 22 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் நன்கு படித்து பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த போதிலும் நீட் எனும் அரக்கனால் இவர்களது மருத்துவர் கனவு கலைந்து போன விரக்தியில் தங்கள் உயிரை மாய்த்து கொண்டுள்ளனர்.
இதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் அதிமுக ஆட்சி காலத்திலும் நீட் விலக்கு மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது போல் திமுக ஆட்சியிலும் இரு முறை நீட் விலக்கு மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டது.
ஆனால் அதன் மீது இதுவரை ஆளுநரோ குடியரசுத் தலைவரோ ஒப்புதல் அளிக்காத நிலை உள்ளது. கடந்த முறை சென்னை ராஜ்பவனில் நடந்த எண்ணித் துணிக எனும் நிகழ்ச்சியில் தமிழகத்திற்கு எப்போது நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும் என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியோ அது போன்ற எந்த திட்டமும் இல்லை என திட்டவட்டமாக கூறியதுடன் நீட் விலக்கு மசோதாவுக்கு நான் கையெழுத்திட மாட்டேன் என சொல்லிவிட்டார்.
இந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய மக்கள் போராட்டம் வெடிக்க வேண்டும் என்றும் இதை நீக்கும் முழு பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். இது தொடர்பாக திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் ஒரு நாள் உண்ணாரவிரத போராட்டமும் நடைபெற்றது.
இந்த நிலையில் நீட் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சில விஷயங்களை கூறியுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. அவர் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறுகையில் கார்பரேஷன் ஸ்கூலில் படித்த தமிழன்கள்தான் நிறைய சாதித்திருக்கிறார்கள். அப்ப நீட் கீட்டுலாம் தூக்கி போடுங்க. எந்த என்ட்ரன்ஸ் எக்ஸாமும் வைக்கக் கூடாது.
தமிழ்நாட்டு பாடநூல்தான் இந்தியா முழுமைக்கும் அமல்படுத்த வேண்டும். சில விஷயங்களை மாற்றிவிட்டு அவங்க சாதனை செய்த மாதிரி செய்றாங்க இல்லையா, அது அவங்களுக்கே கேவலமான விஷயம் என பதிலளித்தார். மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மீது மிகக் கடும் விமர்சனங்களை நடிகர் மன்சூர் அலிகான் வைத்திருந்தார். மக்களுக்காக மத்திய அரசு என்ன செய்தது. இவ்வாறு மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications