விஜயைப் பற்றி தவறாகப் பேசவில்லை.. இமேஜை கெடுக்கப் பார்க்கிறார்கள்.. மன்சூர் அலிகான் பரபரப்பு
சென்னை: சினிமாவை கெடுக்க கட்சி ஆரம்பித்துள்ளதாக நடிகர் விஜயை மன்சூர் அலிகான் விமர்சித்துள்ளதாக தகவல் பரவிய நிலையில், தம்பி விஜயைப் பற்றி நான் தவறாக எதுவும் பேசவில்லை என்றும், சிலர் விஷமத்தனமான கருத்துகளை யூடியூபில் பரப்பி வருகிறார்கள் என்றும் நடிகர் மன்சூர் அலிகான் விளக்கம் அளித்துள்ளார்.
விஜயின் கோட், மறுபக்கம் விஜயின் அரசியல் பிரவேசம், விக்கிராவாண்டி மாநாடு என பரபரப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, விரைவில் விஜய் மாநாட்டு தேதியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியது. இதுகுறித்து அந்தக் கட்சியின் தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற அடிப்படை கோட்பாட்டோடு, நாம் அரசியலை அணுகுவதும் ஒருவித கொள்கை கொண்டாட்டமே.
முழுமையான கொண்டாட்டத்திற்காகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வ பதிவுக்காகவுமே, நாம் இதுவரை காத்திருந்தோம். இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது. தமிழக வெற்றிக் கழகத்தை, அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்காக கடந்த பிப்ரவரி 2ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து இருந்தோம்.
அதைச் சட்டபூர்வமாகப் பரீசிலித்த தேர்தல் ஆணையம், தற்போது நம் தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்து, தேர்தல் அரசியலில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக பங்குபெற அனுமதி வழங்கியுள்ளனர். இதை உங்களுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். திசைகளை வெல்ல போவதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு நமக்காக திறந்துள்ளது.
இச்சூழலில், நமது கழகத்தின் கொள்கை பிரகடன முதல் மாநில மாநாட்டுக்கான ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளது. அதுகுறித்த அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள். தடைகளை தகர்த்தெறிந்துஇ கொடி உயர்த்தி, கொள்ளை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கான தலையாய அரசியல் கட்சியாக தமிழ்நாட்டில் வலம் வருவோம். வெற்றிக் கொடியேந்தி மக்களைச் சந்திபோம். வாகை சூடுவோம்." என்று கூறியிருந்தார்.
தவெக மாநாடு நடத்துவதற்கான அனுமதியை போலீஸார் வழங்கியுள்ள நிலையில், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுடன் மாநாடு ஏற்பாடுகள் தொடர்பாக பணையூரில் உள்ள தனது வீட்டில் ஆலோசனையில் தவெக கட்சியின் தலைவர் விஜய் ஈடுபட்டார்.
இக்கூட்டத்தில் மாநாட்டை இந்த மாதமே நடத்தி முடிக்க வேண்டும் என்று விஜய் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாட்டுப் பணிகளை அனைவரும் ஒருங்கிணைந்து விரைந்து மேற்கொள்ள வேண்டும் என விஜய் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார்.
விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் மாநாடு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 33 விதிமுறைகள் காவல் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் கருத்தில்கொண்டு மாநாடு பணிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மாநாடு பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்களை எவ்வாறு ஒருங்கிணைத்து அழைத்து வர வேண்டும் என்றும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, சினிமாவை கெடுக்க கட்சி ஆரம்பித்துள்ளதாக நடிகர் விஜயை மன்சூர் அலிகான் விமர்சித்துள்ளதாக தகவல் பரவிய நிலையில், விஜயைப் பற்றி நான் தவறாக எதுவும் பேசவில்லை என்று நடிகர் மன்சூர் அலிகான் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில் நான் பேசியிருந்தேன். அந்தப் பேச்சில் சினிமாவை கெடுப்பதற்காக சிலர் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளதாக நான் பேசியுள்ளதாக, திரித்து சில பேர் விஷமத்தனமான கருத்துகளை யூடியூபில் வெளியிட்டு வருகின்றனர்.
தம்பி விஜய் கட்சி ஆரம்பித்திருக்கும் நிலையில் அவருடைய புகழைக் கெடுப்பதற்காகவும், விஜய், மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் அரசியலில் இறங்குவதை தடுப்பதற்காக சினிமாக்காரர்கள் மீது அவதூறு பரப்பி வருகின்றனர் என்றுதான் தெளிவாகப் பேசியிருந்தேன். அதனை சிலர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பத்திருப்பது குறித்து நான் தவறாகப் பேசியதாக பரப்பி வருகின்றனர்.
நான் அதுபோன்று எதுவும் பேசவில்லை. அந்தப் பேட்டியில் நான் தெளிவாக பேசியுள்ளேன். ஏன் தீய எண்ணத்துடன் இதை பரப்பினார்கள் என்று தெரியவில்லை. தம்பி விஜயின் கவனத்துக்கு இதனை கொண்டு போக வேண்டும். சினிமா நடிகர்களை கேவலப்படுத்துவதற்கு நினைக்கின்றனர், இமேஜை கெடுக்கப் பார்க்கின்றனர் என்று கூறியதை தவறாகப் பரப்பி கெட்டபேர் வாங்கி கொடுக்கப் பார்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி!











Click it and Unblock the Notifications