நடிகர் மாரிமுத்துவின் இறுதி பயணம்.. பேசிய கடைசி வார்த்தை.. இப்படி பலிக்கும்னு எதிர்பார்க்கலயே
சென்னை: நடிகர் மாரிமுத்துவின் இறுதி பயணம் தொடங்கி விட்டது. அவரது உடல் சென்னையில் இருந்து சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உறவினர்கள் உடன் செல்ல சீரியல், சினிமாவில் உடன் நடித்த பலரும் கண்ணீர் மல்க விடை கொடுத்து அனுப்பினர். அவர் சினிமாவில் நடித்த கடைசி காட்சி போலவே நிஜ வாழ்க்கையிலும் மரணம் நிகழ்ந்துள்ளது எதிர்பாராதது.
எதிர்நீச்சல் டிவி சீரியலில் அவர் பேசிய இந்தாம்மா ஏய் என்ற ஒற்றை வார்த்தைதான் பல ரசிகர்களை மாரிமுத்துவிற்கு கொடுத்தது. சினிமாவில் மாரிமுத்துவிற்கு கிடைத்த புகழை விட டிவி சீரியல் மூலம் அவருக்கு நிறைய ரசிகர்களையும் புகழ், செல்வாக்கை கிடைக்கச் செய்தது. பொது இடங்களுக்கு செல்லும் போது கூட மாரிமுத்து உடன் போட்டோ எடுக்க பலரும் விரும்புவார்களாம்

டப்பிங் பேசும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. டப்பிங்கில் நெஞ்சுவலி ஏற்பட்டதால் இவர் தானே காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சோதனை செய்யப்பட்ட போதுதான் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மாரிமுத்துவின் உடல் வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.
மாரிமுத்துவின் உடலுக்கு திரை உலக பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். எதிர்நீச்சல் டிவி சீரியலில் நடித்த நட்சத்திரங்கள் பலரும் குடும்பத்தில் ஒருவரை இழந்ததைப் போலவே கதறி துடித்தனர். எதிர்நீச்சல் சீரியலில் நெஞ்சுவலிக்குது பயமா இருக்குது என்று வசனம் பேசியிருப்பார் மாரிமுத்து.
அதே போல அவர் கடைசியாக பகவான் கிருஷ்ணா இயக்கத்தில் நடித்திருந்தார் அந்த படத்தில் மாரிமுத்து மரணமடைந்தது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அந்த போஸ்டர் முன்பு நின்று ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்திருப்பார் மாரிமுத்து. அந்த செல்ஃபி இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த இயக்குநர் பகவான் கிருஷ்ணா, கடைசியாக என்னுடைய படத்தில்தான் நடித்தார் மாரிமுத்து. ரொம்ப நல்ல மனிதர். மரணத்தை பற்றி பயமில்லை என்று சொன்னார். சினிமாவிலும் பேசிக்கொண்டிருக்கும் போதே உயிர் போகும். அப்படித்தான் நிஜத்திலும் நடந்துள்ளது என்று கூறி கண்ணீர் விட்டார். சினிமாவில் அவருக்கு வைக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி பேனருக்கு முன்பாக நின்று செல்ஃபி எடுத்தார். இதை பற்றி நான் கேட்டதற்கு ரொம்ப கேசுவலாக சொன்னார். மரணத்தை பற்றி எனக்கு கவலையில்லை என்று சொன்னவர் இன்று இறந்து விட்டார் என்று இயக்குநர் பகவான் கிருஷ்ணா கூறினார்.
நடிகர் மாரிமுத்துவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சென்னையில் இருந்து சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது. நாளைய தினம் இறுதி அஞ்சலிக்குப் பின்னர் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படும். உறவினர்கள் உடன் செல்ல சீரியல், சினிமாவில் உடன் நடித்த பலரும் கண்ணீர் மல்க விடை கொடுத்து அனுப்பினர். அவர் சினிமாவில் நடித்த கடைசி காட்சி போலவே நிஜ வாழ்க்கையிலும் மரணம் நிகழ்ந்துள்ளது எதிர்பாராதது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications