மாமா மகளையே மணம் முடித்த மாரிமுத்து! இதுவரை ஒரு முழம் பூ கூட வாங்கிக் கொடுத்ததில்லை!
சென்னை: குணசித்திர நடிகர் மாரிமுத்து காலமாகிவிட்ட நிலையில் அவர் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் பல வெளிவரத் தொடங்கியுள்ளன.
தேனி மாவட்டம் பசுமலையை சேர்ந்த மாரிமுத்து, உதவி இயக்குநராக பணியாற்றத் தொடங்கிய ஆரம்பக்காலத்தில் வெளியே யாரும் அவருக்கு பெண் கொடுக்க முன்வரவில்லை. இதனால் சொந்தத்திற்குள்ளேயே பெண் பார்க்கும் படலத்தை தொடங்கியிருக்கிறார்கள் அவரது குடும்பத்தினர்.

அந்த வகையில் போடியில் உள்ள தனது மாமா மகளையே மணம் முடித்துக்கொண்டார் மாரிமுத்து. பாக்கியலட்சுமி என்ற பெயரை செல்லமாக மலர் என்று மாற்றி தனது மனைவியை அழைத்து வந்தார் மாரிமுத்து. திருமணமாகி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மனைவிக்கு ஒரு முழம் பூ கூட மாரிமுத்து வாங்கிக் கொடுத்ததில்லை.
அந்தளவுக்கு குடும்பம், மனைவி, பிள்ளைகள் என யாரைப்பற்றியும் சிந்திக்காமல் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என ஓடிக் கொண்டிருந்திருக்கிறார். அதேபோல் மனைவி மலருடன் ஒரு நாள் கூட சேர்ந்தவாறு கோவிலுக்கு செல்லாதவர் மாரிமுத்து. தாம் ஒரு பகுத்தறிவாதி என்ற போதிலும், தனது மனைவியை கோவிலுக்கு செல்ல வேண்டாம் எனக் கூறாதவர்.
அதேபோல் தனது இரண்டு பிள்ளைகளையும் மாரிமுத்து ஒரு நாள் கூட அடித்ததில்லை. மிரட்டலிலேயே அவர்களை ஒழுங்குப்படுத்தி விடுவார். ஆரம்பக்காலங்களில் ஹோட்டல் சாப்பாடு உட்பட எதுவாகினும் உண்டு வந்த மாரிமுத்துவுக்கு கடந்த 5 ஆண்டுகளாகவே வீட்டுச் சாப்பாடு தான் எல்லாமே. அந்தளவுக்கு தனது உடல்நிலையை கண்காணித்து கவனிக்கத் தொடங்கினார்.
ஆனாலும் இயற்கை இன்று இவ்வுலகை விட்டு மாரிமுத்துவை பிரித்துவிட்டது. இதனால் அவரது ரசிகர்கள் சொல்லொணாத் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications