Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவராத்திரி! கேளம்பாக்கம் சிவன் கோயிலில் இரவு வழிபாடு.. அதிகாலை வீடு வந்த மயில்சாமிக்கு மாரடைப்பு

சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கம் சிவன் கோயிலில் இரவு முழுவதும் வழிபாடு நடத்திய மயில்சாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் இரவு முழுக்க வழிபாடு நடத்திவிட்டு வீட்டுக்கு செல்லும் போது நடிகர் மயில்சாமிக்கு அதிகாலை 3.30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை சாலிகிராமத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் தமிழ் திரைப்பட காமெடி நடிகர் மயில்சாமி. இவர் தமிழ் திரைப்படங்களில் காமெடி நடிகராக வலம் வந்தார்.

இவர் வடிவேலு, விவேக் ஆகியோருடன் காமெடியில் அசத்தியிருப்பார். தூள் படத்தில் நடிகை ரீமா சென்னின் ராசி கடகத்தை அவர் ஆங்கிலத்தில் கேன்சர் என்பார். இதை தவறாக நினைத்து கொள்ளும் நடிகர் விவேக், தான் விரும்பும் சுவப்னாவுக்கு (ரீமாவின் கேரக்டர் பெயர்) கேன்சர் என மயில்சாமியிடம் கவலை தெரிவிப்பார்.

கடக ராசி

கடக ராசி

கடக ராசியைத்தான சுவர்னா கூறினார் என்பதை மயில்சாமி சொல்ல வருவார், ஆனால் அவரை சொல்ல விடாமல் கேன்சரை பற்றி நீ எதுவும் சொல்லி என்னை பயமுறுத்தாதே எத்தனை படங்களில் நான் பார்த்திருக்கிறேன் என்பார். உடனே ஸ்வப்னாவுக்கு கேன்சர் குணமாக கோயில்களுக்கு செல்வதாக கூறி விவேக்கிடம் இருந்து மயில்சாமி பணத்தை கறப்பார். ஒரு கட்டத்தில் திருப்பதிக்கு நடந்தே செல்வதாக மயில்சாமி கூறுவார்.

திருப்பதியில் லட்டுக்கு பதில் ஜிலேபி

திருப்பதியில் லட்டுக்கு பதில் ஜிலேபி

அப்போது திருப்பதியில் இருந்து வந்ததாக கூறும் மயில்சாமியிடம் விவேக் லட்டு கேட்பார். அதற்கு திருதிருவென விழிக்கும் மயில்சாமி ஜிலேபியை கொடுப்பார், என்னடா இது லட்டுக்கு பதிலா ஜிலேபி தரேனு விவேக் கேட்க அதுக்கு பாஸ் இப்ப லட்டுக்கு பதிலாக ஜிலேபி போட சொல்லி ஆந்திர அரசு உத்தரவாம் என மயில்சாமி சொல்வார். இந்த காமெடியை இன்று பார்த்தாலும் வயிறு குலுங்க சிரிக்காதவர்களே இருக்க மாட்டார்கள்.

200 படங்கள்

200 படங்கள்

அப்படிப்பட்ட அவர் இதுவரை 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மழை, வெள்ளம், புயல் காலங்களில் நலிந்தவர்களுக்கு உதவிகளை செய்துள்ளார். அது போல் கொரோனா காலகட்டத்தில் லாக்டவுன் நேரத்தில் பலர் உணவுக்குகூட வழியில்லாமல் கஷ்டப்பட்ட போது விருகம்பாக்கத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை செய்தார். சமூகம் சார்ந்த விஷயங்களுக்கும் குரல் கொடுப்பார். கடந்த 2021 ஆம் ஆண்டு பெட்ரோல் டீசல் விலை உச்சத்தில் இருந்த போதும் அவர் குரல் கொடுத்தார். பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறிப்பிடும் வகையில் திருமணமான தம்பதிக்கு பெட்ரோல் கேனை பரிசாக கொடுத்திருந்தார்.

மயில்சாமிக்கு ஆன்மீகத்தில் நாட்டம்

மயில்சாமிக்கு ஆன்மீகத்தில் நாட்டம்

மயில்சாமி ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர். தீவிர சிவபக்தராக இருந்தார். எப்போதும் நெற்றி முழுவதும் திருநீறு பட்டை அணிந்து கொண்டு குங்கும பொட்டை வைத்திருப்பார். இவர் சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு சென்றார். அங்கு இரவு முழுவதும் வழிபாடு நடத்தினார். டிரம்ஸ் சிவமணியுடன் இசை கச்சேரியிலும் கலந்து கொண்டார். இந்த நிலையில் இந்த கோயிலில் பூஜையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பும் போது அவருக்கு அதிகாலை 3.30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அழைத்து சென்றனர். அவரது உயிர் மருத்துவமனைக்கு வரும்போதே பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அஞ்சலி

அஞ்சலி

நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ரமேஷ் கண்ணா, மனோபாலா , சார்லி, சரத்குமார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதில் சார்லி கூறுகையில் எங்களது முதல் சந்திப்பிலேயே நானும் மயில்சாமியும் நண்பர்களாவிட்டோம். சிவபக்தரான மயில்சாமி சிவராத்திரி அன்று இறந்துவிட்டார் என உருக்கமாக தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+