‛‛அதிமுக ஒன்றிணைய வேண்டும்’’.. நடிகர் மயில்சாமியின் ஆசையே இதுதான்.. சொல்றது யாரு தெரியுமா?
மறைந்த நடிகர் மயில்சாமி உடலுக்கு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அணி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை: தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகராக ஜொலித்த மயில்சாமி இன்று காலமானார். சென்னை வீட்டில் உள்ள அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என நடிகர் மயில்சாமி வலியுறுத்திய தகவல் வெளியாகி உள்ளது. மயில்சாமி உடலுக்கு ஓ பன்னீர் செல்வம் அணியின் ஜேசிடி பிரபாகர் மரியாதை செலுத்திய பிறகு இதுபற்றிய விஷயங்களை உருக்கமாக தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்தவர் நடிகர் மயில்சாமி. சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார். மிமிக்ரி கலைஞராக சிறந்து விளங்கிய இவர் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
1984ல் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

பலருக்கும் உதவி
திரையுலகில் தனக்கென தனி ஸ்டைலில் அவர் பயணித்தார். இதனால் பிரபல நகைச்சுவை நடிகர்கள் வரிசையில் மயில்சாமியும் இணைந்தார். இவர் சுமார் 100க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர், குணசித்திர வேடங்கள் என பல பரிணாமங்களில் திரையில் தோன்றினார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். இதற்கு அப்பாற்பட்டு பலருக்கு உதவிகள் செய்து வந்தார். குறிப்பாக கொரோனா காலத்தில் பலருக்கும் உதவி செய்தார்.

இன்று மரணம்
இந்நிலையில் தான் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் முன்பே அவர் இறந்தார். நேற்று இரவு மகாசிவராத்திரியையொட்டி கோவிலில் தரிசனம் செய்த மயில்சாமி இன்று காலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

திரையுலகினர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி
மேலும் மயில்சாமியின் இறப்பு செய்தியை கேட்டு தமிழ் திரையுலகம் அதிர்ச்சியடைந்தது. மேலும் திரையுலகத்தை சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினர் உள்பட பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அணி சார்பில் ஜேசிடி பிரபாகர் மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு மயில்சாமிக்கும், அதிமுகவுக்கும் இடையேயான தொடர்பு மற்றும் மயில்சாமியின் குணம் பற்றி அவர் எடுத்து கூறினார். இதுபற்றி ஜேசிடி பிரபாகர் கூறியதாவது:

அதிமுக இணைய...
அதிமுக ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சார்பில் மறைந்த மயில்சாமிக்கு இறுதி மரியாதை செலுத்த இங்கு வந்தோம். மரியாதை செலுத்தியபோது என் எண்ணம் எல்லாம் அதிமுக ஒன்றுபட்டு இருக்க வேண்டும். தொண்டர்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவர் அடிக்கடி வலியுறுத்தியதை நினைத்து பார்த்தேன். குறிப்பாக அவரது மறைவு என்பது திரைப்பட துறைக்கு மட்டுமின்றி, அதிமுக தொண்டர்களுக்கு மட்டுமின்றி மனிதநேய மிக்க அனைவருக்குமான பேரிழப்பு என கருதுகிறேன்.

எம்ஜிஆர் புகழ் பரப்ப
வாழ்நாளில் பெரும்பகுதியை எம்ஜிஆர் புகழ் பரப்ப மேடைதோறும் மயில்சாமி முழங்கினார். எம்ஜிஆர் மீது கொண்ட பேரன்பால் பலர் அவரிடம் இருந்து ஆதாயம் அடைந்தனர். ஆனால் எவ்வித ஆதாயமும் அடையாவிட்டாலும் கூட எம்ஜிஆர் புகழ் நிலைக்க வேண்டும் என மயில்சாமி எடுத்து கொண்ட முயற்சிகளை நான் நன்கு அறிவேன். குறிப்பாக 2011 சட்டசபை வில்லிவாக்கம் தொகுதியில் பேராசிரியர் அன்பழகனை எதிர்த்து நான் நின்றபோது எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்த நாட்களையும், ஒவ்வொரு முறை மேடைகளில் பேசும்போது எம்ஜிஆர் பற்றியும், அவரது புகழ் நிலைக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் சொல்லிக்கொண்டே இருப்பார்.

இன்று இல்லை என்பது வருத்தம்
மனிதநேயம் அனைவருக்கும் பரவ வேண்டும் என ஆசைப்பட்டார். ஈகை குணம் கொண்ட அனைவரும் எம்ஜிஆர் தான் என ஒரு கூட்டத்தில் அவர் பேசியது இன்னும் என் நினைவில் உள்ளது. பொதுவாழ்க்கையில் போற்றத்தக்க வாழ்க்கை வாழ்ந்த மயில்சாமி இன்று இல்லை என நினைப்பது வருத்தமாக உள்ளது, என்றார்.
-
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு!












Click it and Unblock the Notifications