Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபலம் என்பது மட்டுமே கட்சி தொடங்குவதற்கு போதுமா? விஜயை தாக்கிப்பேசிய நடிகர் நாசர்.. பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ''இப்போது வெறும் 'பிரபலம்' என்பது மட்டுமே போதும் என்று ஒரு கட்சி ஆரம்பித்து இருக்கிறார்கள். எந்தக் கொள்கையின் அடிப்படையில் நீங்கள் ஒரு நாட்டை வழிநடத்தப் போகிறீர்கள் என்பதே முக்கியம். வரலாற்றுச் சுவடுகள் இருக்கவேண்டுமே தவிர படங்களின் பட்டியலை வைத்து நான் அரசமைப்பேன் என்று சொல்வது தேவையற்றது. கடற்கரையில் அமர்ந்து பார்த்தால் விதவிதமான அலைகள் வரும். சில அலைகள் சுகமாக இருக்கும், சில நம்மை இழுத்துச் செல்ல முயலும். அரசியல் சூழலிலும் இன்று பல புதிய அலைகள் வீசுகின்றன. ஆனால், அந்த அலைகளையெல்லாம் தாங்கி நிற்கின்ற ஒரு பெரும் பாறையாக நான் தற்போதைய முதலமைச்சரை பார்க்கிறேன்'' என்று நடிகர் நாசர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் தான் சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

actor-nassar-and-indirectly-attacks-vijay-and-he-says-is-fame-alone-sufficient-to-start-a-politi

இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் நாசர் கலந்துக் கொண்டு பேசினார். அப்போது அவர் கூறிய கருத்து கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக விஜயை, மறைமுகமாக நாசர் தாக்கி பேசி இருப்பதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

எந்த கட்சியையும் சாராதவன்

அதில் நாசர் பேசியதாவது: ''எல்லோருக்கும் தெரியும். நான் ஒரு பொதுவான ஆள். எந்த கட்சியையும் சாராதவன். மக்களின் சார்பாக நான் பேசுகிறேன். கட்சியின் சார்பாக இல்லை. இன்று தேர்தல் காலம். நாம் இன்னும் சில வாரங்களில் ஒரு சட்டசபை தேர்தலை நெருங்க இருக்கிறோம். எனக்குள் பெரிய கேள்விக்குறி பொதுவானதாக.. அடுத்த ஒரு நிர்வாகத்தை அடுத்த ஒரு அரசை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கல்வி, வரி, பொருளாதார முன்னேற்றம் என எல்லாவற்றையும் தீர்மானிக்கப்போகும் ஓர் அரசை நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

எதிர்காலத்தை தீர்மானிக்கும் அரசு

அப்போது நாம் என்னவெல்லாம் யோசிக்க வேண்டும். ஒரு சாதாரண சட்டையை அல்லது புடவையை வாங்கச் சென்றால் கூட, அது சாயம் போகுமா, ஒரிஜினல் பட்டுதானா என பல கேள்விகளை கேட்கிறோம். ஆனால், ஏழு கோடி தமிழர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அரசை தேர்ந்தெடுக்கும்போது என்னென்ன கேள்விகள் வர வேண்டும். அவன் சொன்னான்.. இவன் சொன்னான் என்று நாம் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கிறோம். சிந்தித்து கேள்விகள் கேட்பதில்லை.

பிரபலம் என்பது மட்டுமே..

எனக்கு இந்த கேள்விகள் வரும்போது நான் யாரை ஆதரிப்பது?. கட்சிகள் இருக்கின்றன. மற்ற கட்சிகள் இருக்க கூடாது. ஒரு கட்சி தான் இருக்க வேண்டும் என்பது கிடையாது. கட்சிக்கு ஒரு கொள்கை வேண்டும். கொள்கைகள் ஒன்றாக இருக்க வேண்டியது அவசியமில்லை.

ஆனால் இப்போது என்னவென்றால் 'பிரபலம்' என்பது மட்டுமே போதும் என்று ஒரு கட்சி ஆரம்பித்து இருக்கிறார்கள். திட்டங்களை பட்டியலிட்டு சொல்வது அல்ல கட்சி. "வீடு கட்டித் தருவேன்" என்று எல்லா கட்சிகளும் சொல்லும். அது ஒரு திட்டமே தவிர கொள்கையல்ல.

படங்களின் பட்டியலை வைத்து..

எந்தக் கொள்கையின் அடிப்படையில் நீங்கள் ஒரு நாட்டை வழிநடத்தப் போகிறீர்கள் என்பதே முக்கியம். வரலாற்றுச் சுவடுகள் இருக்கவேண்டுமே தவிர படங்களின் பட்டியலை வைத்து நான் அரசமைப்பேன் என்று சொல்வது தேவையற்றது.

திராவிட இயக்கத்திற்கு 75 ஆண்டுகாலப் பாரம்பரியம் இருக்கிறது. அதற்குப் பின்னால் எண்ணற்ற தியாகங்கள், வீரச் செயல்கள் மற்றும் வரலாற்றுச் சுவடுகள் புத்தகங்களாக பதிவாகியுள்ளன. வெறுமனே படங்களைப் பட்டியலிட்டு "நான் ஆட்சி செய்வேன்" என்று கூறுவது தற்போதைய தேவை அல்ல. நமக்குத் தேவை கல்வியிலும், பொருளாதாரத்திலும் நம்மை முன்னேற்றக்கூடிய ஒரு கொள்கை.

முதல்வர் பற்றி பெருமை

நமக்குள் ஜாதி, மதம், தொழில் அடிப்படையில் வேறுபாடுகள் தேவையில்லை. ஒரு நடிகர் தனது நடிப்பிற்காக பாராட்டப்பட வேண்டும், ஒரு வியாபாரி தனது பொருளின் தரத்திற்காக மதிக்கப்பட வேண்டும். ஆனால், அரசு என்று வரும்போது மதம், ஜாதி கடந்து எல்லோரையும் அரவணைத்து செல்லும் கொள்கை வேண்டும். கல்வி, பொருளாதாரம், சுயமரியாதை - இந்த மூன்றும் தான் ஒரு சமூகத்தின் கண்கள். இவை எங்கே கிடைக்கின்றன என்று தேடிப் பார்த்தால், அவை ஒரு புள்ளியில் வந்து குவிகின்றன.

கடற்கரையில் அமர்ந்து பார்த்தால் விதவிதமான அலைகள் வரும். சில அலைகள் சுகமாக இருக்கும், சில நம்மை இழுத்துச் செல்ல முயலும். அரசியல் சூழலிலும் இன்று பல புதிய அலைகள் வீசுகின்றன. ஆனால், அந்த அலைகளையெல்லாம் தாங்கி நிற்கின்ற ஒரு பெரும் பாறையாக நான் தற்போதைய முதலமைச்சரை பார்க்கிறேன்.

விஜய் மீது மறைமுக 'அட்டாக்'

நமது வாழ்க்கையை நாமே தீர்மானிக்க வேண்டிய தருணம் இது. உணர்ச்சிவசப்படாமல் சிந்தித்தால், தமிழகத்தின் விடியல் 'உதயத்தில்' தான் இருக்கிறது என்பது புரியும். சமூகத்திற்காக 100 வயது வரை வாழ்ந்த ஐயா நல்லகண்ணு போன்றவர்களின் வாழ்வு கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. கலைவாணர் காட்டிய வழியில் நகைச்சுவையோடு நற்பண்புகளையும், கருத்துக்களையும் விதைக்கும் கலைஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்'' என்றார்.

இதன்மூலம் நடிகர் நாசர், விஜயை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் சமீபத்தில் விஜய் தான் தமிழக அரசியல் கட்சியை தொடங்கினார். வரும் தேர்தலில் அவரது கட்சி போட்டியிட உள்ளது. இதனால் பிரபலம் என்பது மட்டுமே போதும் என்று ஒரு கட்சி ஆரம்பித்து இருக்கிறார்கள் என்று நாசர் கூறியது விஜயை தான் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+