கம்பி கட்டுது திமுக.. முட்டு தருது "டீம்".. தொடுவதெல்லாம் அரசுக்கு ரிவர்ஸ்! ஜனநாயக அற்புதம்: பிரபலம்
சென்னை: கரூருக்கு தவெக தலைவர் போவதற்கு டிஜிபியிடம் அனுமதி கேட்டதுடன், ஜனாதிபதி, பிரதமருக்குகூட விதிக்காத நிபந்தனைகளையும் விஜய் போட்டாராம்.. உடனே அரசு தரப்பில், லோக்கல் எஸ்.பி.யை தொடர்பு கொள்ளுமாறு பதிலளிக்கப்பட்டதாம். இதெல்லாம் வெறும் தகவலாக வெளிவருகிறதே தவிர, அதிகாரப்பூர்வமாக இரு தரப்பிலும் வெளியாகவில்லை. தீபாவளி முடிந்ததுமே கரூருக்கு செல்லவிருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், இது எந்த அளவுக்கு உண்மையோ தெரியாது என்கிறார் பத்திரிகையாளர் மணி.
Behindwoods 02 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் மணி, "கரூர் பிரச்சனை இப்போதைக்கு தீராது.. சுப்ரீம் கோர்ட் தந்துள்ள உத்தரவு, தமிழக அரசுக்கு பெரிய பின்னடைவுதான்.. சட்டப்பேரவையில் தன்னுடைய தரப்பு வாதத்தை தமிழக அரசு எடுத்து வைத்தது.. ஆனாலும் பின்னடைவை அரசு சந்தித்துள்ளது..

சட்டசபையில் கரூர் விவகாரத்தை எப்படி பேச வேண்டுமோ, எவ்வளவு பேச வேண்டுமோ அதே அந்தளவுக்கு அதிமுக பேசியிருக்கிறது.. கரூர் விஷயத்தில் அதிமுக முன்னெடுத்து வரும் அரசியல் சரியானதுதான்..
சட்டசபையில் அதிமுக
ஆனால் வழக்கம்போலவே, அனைத்து அரசாங்கத்தை போலவே இந்த அரசும், கம்பி கட்டும் வேலையை செய்து வருகிறது. எப்படி பார்த்தாலும் வரும் தேர்தலில் கரூர் விவகாரம் மிகப்பெரிய பிரச்சனையாக விஸ்வரூபமெடுக்க போகிறது.
இதில் கொடுமை என்னவென்றால், இந்த கரூர் சம்பவத்துக்கு யார் காரணமோ, அவர் சீன்லேயே இல்லை.. ஆனால் மற்றவர்கள் எல்லாரும் கரூர் சம்பவத்தையும், அதைவிட அதிகமாக சம்பவத்துக்கு காரணமானவரை பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
விஜய்யை பற்றி எல்லாருமே பேசுகிறார்களே தவிர, "விஜய் தரப்பு" என்ற ஒன்று இல்லாமலேயே போய்விட்டது.
ஜனநாயக அற்புதம்
இதற்கு காரணம் விஜய்தான்.. கரூருக்கு போவதற்கு டிஜிபியிடம் அனுமதி கேட்டதுடன், ஜனாதிபதி, பிரதமருக்குகூட விதிக்காத நிபந்தனைகளையும் விஜய் போட்டாராம்.. உடனே அரசு தரப்பில், லோக்கல் எஸ்.பி.யை தொடர்பு கொள்ளுமாறு பதிலளிக்கப்பட்டதாம். இதெல்லாம் வெறும் தகவலாக வெளிவருகிறதே தவிர, அதிகாரப்பூர்வமாக இரு தரப்பிலும் வெளியாகவில்லை.
தீபாவளி முடிந்ததும் கரூருக்கு விஜய் செல்வதாக சொல்கிறார்கள், இதுஎந்த அளவுக்கு உண்மை தெரியவில்லை. எனவே, இதையெல்லாம், "ஜனநாயகத்தின் அற்புதம்" என்றுதான் சொல்ல வேண்டும்.
பெரியாரிஸ்டுகள்
கரூர் சம்பவத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழுவினர் அத்தனை பேரும், திமுகவின் சார்பு நிலையை கொண்டவர்கள். பெரியாரிஸ்டுகள்.. திமுக ஆதரவு நிலையையும், பாஜக எதிர்ப்பு நிலையையும் கொண்டுள்ளவர்கள்..
இதுபோன்ற உண்மை அறியும் குழுக்களின் நம்பகத்தன்மை என்னவென்று அனைவருக்குமே தெரியும் என்பதால், அதை பற்றி பேசாமல் கடந்து போவதே நல்லது.. இந்த குழுவுக்கு பொதுவெளியில் எந்தவிதமான நம்பகத்தன்மையும் இருக்காது.
முட்டுக் கொடுக்கும் குழு
அதுமட்டுமல்ல, மக்கள் மன்றத்தில் இந்த கரூர் விஷயத்தை நினைவூட்டி கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக, ஒரே விதமான விஷயத்தை செய்யும்போது, அது அரசுக்கு எதிராக மாறிவிடுகிறது.. அரசு பக்கம் நியாயமே இருந்தாலும்கூட, அரசு செய்வது எல்லாமே அதற்கு எதிராக திரும்பிவிடுகிறது. அதில் ஒன்றுதான் இந்த உண்மை கண்டறியும் குழுவை நியமனம் செய்துள்ளதும். இவர்கள் அனைவருமே அரசுக்கு முட்டு கொடுக்கதான் செய்வார்கள்..
அரசாங்கமோ அல்லது இதுபோன்ற உண்மை கண்டறியும் குழுவோ, குறைந்தபட்சம் சார்பு நிலை இல்லாதவர்களை அனுப்ப வேண்டும். அரசியல் சார்பற்ற யாராவது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைத்திருக்க வேண்டும்.
சவக்குழியை தோண்டும் அரசு
ஏற்கனவே கரூர் விஷயத்தில், விஜய்க்கு பொதுமக்களிடம் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.. விஜய்க்கான ஆதரவும் குறையவில்லை. மாறாக அரசுக்குதான் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது, தனக்கு ஆதரவான உண்மை கண்டறியும் குழுவை ஏன் நியமிக்க வேண்டும்?
இப்படியெல்லாம் செய்யாமல் இருப்பதன் மூலமாவது பழியை ஓரளவு துடைத்து கொள்ளலாம். ஆனால், கரூர் விஷயத்தை மக்களிடம் நினைவுபடுத்துவதன் மூலமாக, தனக்குதானே சவக்குழியை அரசாங்கம் தோண்டி கொள்கிறது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications