ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்? நான் உயிரோடு இருக்க ’இவங்க’ தான் காரணம்.. உருகிய பொன்னம்பலம்!
சென்னை: ஸ்டண்ட் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கி தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக உயர்ந்தவர் பொன்னம்பலம். சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட அவர் கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவசர வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், தனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி என உருக்கமாக ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக வாழ்க்கையை தொடங்கி பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தவர் பொன்னம்பலம். நாட்டாமை படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பொன்னம்பலம் என்ற பெயரிலேயே அந்த படத்தில் அவர் சரத்குமாருக்கு வில்லனாக நடித்திருந்தார்.
'தாய்க்கிழவி நீளமா பேசாத மூச்சு வாங்கும்' என்ற வசனம் அவருக்கு பெரும் புகழைப் பெற்றுக் கொடுத்தது. வில்லன் என்றாலே பொன்னம்பலம் தான் என அப்போதைய 90ஸ் கிட்ஸ்கள் அவரைப் பார்த்தாலே மிரளுவார்கள்.

அதற்குப் பிறகு கமல், ரஜினி, விஜயகாந்த், சரத்குமார் என முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்த அவர் சில படங்களில் கௌரவ வேடத்திலும் தோன்றியிருக்கிறார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பழமொழிகளில் பணிபுரிந்தவர். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இந்த நிலையில் திடீரென அவருக்கு கடும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பொருளாதார சிக்கலில் சிக்கிக்கொண்டார். மருத்துவ செலவுக்கே பணம் போதாத நிலையில் தனக்கு உதவ வேண்டும் என யூடியூப் சேனல்களை பேட்டியும் கொடுத்தார். தொடர்ந்து பல பிரபலங்களும் அவருக்கு உதவினர். குறிப்பாக நடிகர் சிரஞ்சீவி நேரடியாகவே வந்து அவருக்கு உதவினார்.
அது மட்டுமல்லாமல் நடிகர்கள் கமல், சரத்குமார், தனுஷ், சிம்பு உள்ளிட்ட பலரும் அவருக்கு உதவினர். தொடர்ந்து சிகிச்சை முடிந்து வீட்டுக்குச் சென்ற நிலையில் மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் அவசர வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஆடியோ வெளியிட்டு இருக்கிறார் பொன்னம்பலம்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு ஆடியோவில்," கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் 40 நாட்கள் இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இப்போது சிறுநீரகத் தொற்று காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து தற்போது சாதாரண வார்டுக்கு என்னை மாற்றி இருக்கிறார்கள்.
ஆசனவாய் பகுதி அருகே அறுவை சிகிச்சையும் நடந்திருக்கிறது. பல படங்களில் நடித்து லட்சமாக சம்பாதித்து நான் தற்போது பொருளாதாரத்தில் அடிபட்டு தரை மட்டமான நிலைக்கு வந்து விட்டேன். இருந்த போதும் எனக்கு நடிகர்கள் கமல்ஹாசன், சரத்குமார், சிம்பு, ரவி மோகன், நிழல்கள் ரவி, கேஎஸ் ரவிக்குமார், தனுஷ் உள்ளிட்ட பலர் உதவினார்கள் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் விரைவில் குணம்பெற வேண்டுமென எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்" என அந்த ஆடியோவில் உருக்கமாக கூறியிருக்கிறார். இதை அடுத்து பொன்னம்பலம் மீண்டும் உடல் நலம் பெற்று சினிமாவில் நடிக்க வர வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications