நடிகர் பிரபுக்கு திடீர் உடல் நலக்குறைவு.. சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி.. என்ன பிரச்சனை?
தமிழ் திரைப்பட நடிகர் பிரபுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை: நடிகர் பிரபுக்கு திடீரென்று ஏற்பட்ட உடல் நலக்குறைவால் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திங்கட்கிழமையான நேற்று மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவரது மகன் பிரபு. இவரும் தமிழ் சினிமாவில் நடிகராகி அறிமுகமாகி கொடிக்கட்டி பறந்தார்.
100க்கும் அதிகமான படங்களில் பிரபு நடித்து 80s காலத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் திகழ்ந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி பிறமொழி படங்களிலும் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

திடீர் உடல் நலக்குறைவு
தொடக்கத்தில் ஹீரோவாக தனக்கென முத்திரை பதித்த நடிகர் பிரபு தற்போது குணசித்திர வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் தான் நடிகர் பிரபுவுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் திங்கட்கிழமை மருத்துவமனையில் அனுமதித்தனர். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

சிறுநீரகத்தில் கல் அகற்றம்
மருத்துவமனையில் நடிகர் பிரபுவுக்கு டாக்டர்கள் பரிசோதனைகள் செய்தனர். இந்த வேளையில் சிறுநீரகத்தில் கல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுநீரகத்தில் இருந்த கல் டாக்டர்கள் குழுவினரால் அகற்றப்பட்டுள்ளது. லேசர் வகையை சேர்ந்த அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகத்தில் இருந்த கல் அகற்றப்பட்டுள்ளது.

மருத்துவமனையில்
இதுபற்றி மெட்வே மருத்துவமனை குழுவின் தலைவரான பழனியப்பன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‛‛சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் பிரபல திரைப்பட நடிகர் பிரபு பிப்ரவரி 20 இரவு சிறுநீரக பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

டிஸ்சார்ஜ் எப்போது?
பிரபுவுக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு, இன்று காலை யூரித்ரோஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டன. அவர் தற்போது பூரண உடல் நலத்துடன் இருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பொதுவான மருத்துவ சோதனைகளுக்கு பிறகு, ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications