ஒரே போட்டோ.. நடிகர் பிரகாஷ் ராஜ் நச்! அட இப்டி யாரும் யோசிக்கலயே - இதான் புதிய இந்தியாவோ
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்த இந்திய நினைவு சின்னம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் நிலையில், அதை ஒற்றை புகைப்படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.
இந்தியாவுக்கான புதிய நாடாளுமன்ற கட்டிடம் டெல்லியில் ரூ.971 கோடி ரூபாய் மதிப்பில் 62,000 சதுர மீட்டரில் முக்கோண வடிவில் கட்டப்பட்டு வருகிறது.
மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும், கூட்டு கூட்டத்திற்கு 1,272 உறுப்பினர்களும் அமரும் வகையில் பிரம்மாண்டமாக இந்த கட்டிடம் கட்டப்படுகிறது.

நாடாளுமன்றம்
நில அதிர்வுகளையும் தாங்கும் வகையில் கட்டப்படும் இந்த கட்டிடத்தின் மேற்கூரையில் 6.5 மீட்டர் நீளமுள்ள 9,500 கிலோ எடையில் தேசிய நினைவு சின்னத்தின் வெண்கல சிலை நிறுவப்பட்டு உள்ளது. கடந்த 11-ந் தேதி இந்த தேசிய நினைவு சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அசோக சக்கரத்துடன் 4 சிங்கங்கள் நிற்பது போன்ற தேசிய சின்னத்தில் பல்வேறு மாறுபாடுகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் சாடின.

தேசிய நினைவு சின்னம்
புதிய சின்னம் மாற்றியமைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. தேசிய நினைவு சின்னத்தில் உள்ள சிங்கங்கள் கம்பீரமாகவும், கச்சிதமான வடிவமைப்போடும் இருக்கும் என்றும், தற்போது நரேந்திர மோடி திறந்து வைத்த சிலையில் சிங்கங்கள் வாயை திறந்து ஆக்ரோசமாக இருப்பதுடன், தேசிய நினைவு சின்னத்தையே பிரதிபலிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எதை நோக்கி செல்கிறோம்?
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு தரப்பில் பெரிதாக விளக்கங்கள் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் நடிகரும் சமூக செயற்பாட்டாளருமான பிரகாஷ் ராஜ் பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் திறந்து வைத்த தேசிய நினைவு சின்ன சிலை குறித்து ஒற்றை புகைப்படத்தில் விமர்சனம் செய்து இருக்கிறார். அன்றும் இன்றும் பயன்படுத்தப்பட்ட புகைப்படங்களை ஒப்பிட்டு, நாம் எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம் என்று பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரகாஷ் ராஜின் ஒப்பீடு
அந்த படத்தில் அன்று பயன்படுத்தப்பட்ட சாந்தமாக இருக்கும் ராமர் படத்தையும், இன்று பயன்படுத்தப்படும் ஆக்கிரோஷமாக இருக்கும் ராமர் படத்தையும் அவர் ஒப்பிட்டு உள்ளார். அதேபோல், சாந்தமாக இருக்கும் அனுமன் படத்தையும், இன்று பயன்படுத்தப்படும் ஆக்கிரோஷமான அனுமன் படத்தையும் அவர் ஒப்பிட்டு இருக்கிறார். அதேபோல், வழக்கமான தேசிய நினைவு சின்னத்துடன் மோடி திறந்துவைத்த ஆக்கிரோஷமான சிலையை அவர் ஒப்பிட்டுள்ளார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications