Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் கும்பமேளாவில் புனித நீராடினேனா.. எவ்வளவு பெரிய அவமானம் இது.. பிரகாஷ் ராஜ் கொடுத்த பதிலடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் பிரகாஷ் ராஜ் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதாக வெளியான புகைப்படம் போலி என்பது தெரிய வந்துள்ளது. அது ஏஐ மூலமாக உருவாக்கப்பட்ட புகைப்படம் என்றும், போலி புகைப்படத்தை உருவாக்கியவர்களுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் நடிகர் பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார்.

சமூக ஆர்வலரான கெளரி லங்கேஷ் கொலைக்கு பின், நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அரசியலிலும் ஈடுபட்ட அவர், கடந்த ஆண்டுகளாக சமூக பிரச்சனைகள் குறித்தும் கேள்வி எழுப்பி வருகிறார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி ஜஸ்ட் ஆஸ்கிங் என்று பதிவிடும் பதிவுகள் ஏராளமான முறை ட்ரெண்டாகி இருக்கிறது.

maha kumbh mela 2025 prakash raj

இதனால் பாஜக ஆதரவாளர்கள் மற்றும் பிரகாஷ் ராஜ் இடையில் எப்போது விவாதங்கள் நடந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் பிரகாஷ் ராஜின் புகைப்படம் ஒன்று வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகளும் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம்.

இந்த திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நிகழ்ச்சி நடந்து வருகிறது. நடப்பாண்டில் ஜனவரி 12ஆம் தேதி தொடங்கிய கும்பமேளா, பிப்.26ஆம் தேதியான மகா சிவராத்திரி வரை நடைபெறவுள்ளது. இதற்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பலரும் வந்துள்ளனர். இதுவரை 10 கோடிக்கும் அதிகமானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

அரசியல்வாதிகள், பிரபலங்கள் என்று பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும் புனித நீராடி வருகின்றனர். இந்த நிலையில் பிரகாஷ் ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதை போன்ற புகைப்படம் பாஜக ஆதரவாளர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வந்தது. கன்னட சினிமாவின் பிரசாந்த் சம்பர்கி தனது எக்ஸ் பக்கத்தில், பிரகாஷ் ராஜ் புனித நீராடும் புகைப்படத்தை பகிர்ந்து, பிரகாஷ் ராஜ் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும் என்று நம்புவதாக பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து நடிகர் பிரகாஷ் ராஜ், மதவெறியர்கள் மற்றும் கோழைகளின் கடைசி வழி போலி செய்திகளை பரப்புவது தான். அவர்களின் புனித விழாவின் போது கூட போலி செய்திகளை பரப்புகிறார்கள்.. எவ்வளவு பெரிய அவமானம் இது.. போலி புகைப்படத்தை பரப்பியவர்களுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இனி விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+