கலைஞர் இருக்கும் வரை வாலாட்ட முடியலயே..அவருக்கு அப்பறம் ஸ்டாலின் தான்! பிரகாஷ் ராஜ் பளிச்..!
சென்னை: கலைஞர் இருந்திருந்தால் நான் பேச வேண்டிய அவசியம் இல்லை.. கலைஞர் இருக்கும் வரை எவராலும் வாலாட்ட முடியவில்லை என்றும், 50 சதவீத இட ஒதுக்கீட்டிற்காக போராடி வரும் நிலையில் எப்போதோ 69 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தவர் கலைஞர் என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
மறைந்த திமுக தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திமுக தரப்பில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபுவின் ஏற்பாட்டில் கலைஞரை மீண்டும் நேரில் சந்திப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் ’காலம் உள்ளவரை கலைஞர்’ என்ற கண்காட்சி சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
பிரகாஷ்ராஜ்: இந்த புகைப்பட கண்காட்சியை திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, எம்.எல்.ஏ,. தாயகம் கவி, பாடலாசிரியர் பா.விஜய் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ்ராஜ்,” பேச்சு வரவில்லை மனது 30 ஆண்டுகள் பின்னோக்கி செல்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிற்கு வந்த போது இருந்த கலைஞர் ஞாபகத்திற்கு வருகிறார். கலைஞருடன் இருப்பது போலவே ஒரு உணர்ச்சி ஏற்படுகிறது அதை இன்றைய தொழில்நுட்பம் செய்துள்ளது. 2 வருடங்கள் கலைஞரை ஸ்டடி பண்ண வேண்டி இருந்தது.
கலைஞர் நூற்றாண்டு: கலைஞரின் வாழ்க்கையின் பயணத்தை என்னால் உணர முடிந்தது. இப்படி நான் இன்று பேசுகிறேன் என்றால் இப்படிப்பட்ட மனிதரை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் உடனிருந்து ஸ்டடி செய்ததுதான் அதற்கு காரணம். சாதி அரசியலை பேசுகிறேன் என்கிறார்கள். கலைஞர் இருந்திருந்தால் நான் பேச வேண்டிய அவசியம் இல்லை. இருக்கும் வரை எவரும் இங்கு வாலாட்ட முடியவில்லை. ஒரு நூற்றாண்டில் கலைஞரை கொண்டாடி வருகிறோம்.
நம்பர் 1 மாநிலம்: கலைஞர் இல்லை என்றால் இன்று நான் ஐஏஎஸ் ஆபிஸராக ஆகியிருக்க மாட்டேன் என்று ஒரு அதிகாரி சொல்கிறார். கலைஞருடன் நிறைய அனுபவங்கள் உள்ளது. கலைஞருக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் அவர் கொள்கைகளை சிந்தனையையும் உயிரோடு இருக்கிறது என்றால் நன்றி. இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.. இன்னும் முன்னேறும். கலைஞரின் விதை தமிழ்நாட்டின் மக்களுக்குள் உள்ளது
நரேந்திர மோடி: அது தான் இந்த மண் அழகாக உள்ளது, ஒரு போராளியின் நிலமாக உள்ளது. நிறைய சூட்டிங் பார்க்க மக்கள் வருவார்கள், ஆனால் கன்னியாகுமரி சூட்டிங் கீர்க்கு அவரே ஆடியன்ஸைக் கூட்டி செல்கிறார் தற்போதைய காலகட்டத்திற்கு கலைஞர் ஒருவரே போதும், அவரால் எத்தனை பேர் உயர்த்தப்பட்டார்கள் என்பதைத்தான் பார்க்க வேண்டும் அந்த கணக்கில் நாம் கலைஞரை பார்க்க வேண்டும். ஜூன் 4 முடிவு தோல்விக்கான அனைத்து வேலையும் மோடி செய்து விட்டார்.
முக ஸ்டாலின்: முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு நிறைய விஷயங்களை செய்து வருகிறார், வளர்ச்சி தெரிகிறது, யாரையும் எதிர்த்து பேச வேண்டிய துணிச்சல் இருக்கிறது, அது தான் தமிழ் நாட்டின் குரல் அடையாளம், ஒரு முதல்வரை அப்படி நிக்கும் பொழுது மக்களுக்கு நம்பிக்கை வருகிறது, ஸ்டாலின், ஆட்சியை நான் பாராட்டுகிறேன், எனக்கு தமிழ்நாட்டில் வீடு உள்ளது என்று நம்பிக்கை வருகிறது. அவனால் இங்கிருந்து நுழைய முடியவில்லை, என் செல்லத்தை ஒன்னும் செய்ய முடியாதுல்ல நாடு அப்படி இருக்கு. 4 ஆம் தேதிக்கு பிறகு மோடியும் சும்மாதான் இருப்பார் அவரையும் இங்கே இந்த கண்காட்சியை பார்க்க அழைக்கலாம்” என்றார்.
-
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications