அதென்ன ஸ்டாலினுக்கு மரியாதை.. பிரதமருக்கு அவமரியாதையா? பிரகாஷ்ராஜை போலீஸ் கைது செய்யுமா? சீறும் பாஜக
சென்னை: சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கும் திமுக அரசு, நடிகர் பிரகாஷ் ராஜ் மீதும் நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறது தமிழக பாஜக.
எம்.பி திருமாவளவன் தலைமையில் விசிக சார்பில் வருடந்தோறும் பல்வேறு துறையில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது.

இந்த விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ்ஜூக்கு, "அம்பேத்கர் சுடர் விருது" வழங்கப்பட்டது. விருது வாங்கிய பிறகு, பிரகாஷ் ராஜ் பேசியபோது, மோடியை கடுமையாக விமர்சித்தார்.
தெய்வக்குழந்தை: "கடந்த 10 வருடங்களாக இந்த மன்னரை நான் எதிர்த்து கொண்டு இருக்கிறேன். இனி மோடியை மன்னர் என்று சொல்லமுடியாது. அவர் "தெய்வக்குழந்தை" ஆகிவிட்டார். இனிமேல் நாம அவரை தேர்ந்தெடுக்கமுடியாது. அவரால் நாட்டுக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால் நம்மால் அவரை திட்ட முடியாது. தெய்வம் சோதிக்கிறது என்றுதான் சொல்லமுடியும்.
மோடியை கொஞ்சம் பாருங்களேன்.. ஒரு ஃபாசிஸ்ட். ஒரு சர்வாதிகாரி. அவர் தேரில் தான் நிற்பார். விமானத்தில் தான் வருவார்.. மக்கள் பூ போடுவார்கள்... அவர் மக்கள் பக்கத்திலே நிற்க மாட்டார்... மக்கள் வேலிக்கு அந்த பக்கம் நிற்பார்கள்... மக்களின் ஸ்பரிசம் தெரியாதவன், மக்களின் வியர்வையை தொடாதவன், மக்களின் பசியை அறியாதவவனுக்கு மக்களை பற்றி எப்படி புரியும்? அவர் தெய்வ மகன் கிடையாது.. டெஸ்ட் டியூப் பேபி" என்று பிரதமரை ஒருமையில் பேசி விமர்சித்திருந்தார்.
காட்டமான கேள்வி: பிரகாஷ் ராஜின் இந்த பேச்சைக்கேட்டு, பாஜக கொந்தளித்துள்ளது.. இதுதொடர்பாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி எக்ஸ் பதிவில், காட்டமாக கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.
"முதலமைச்சரை அவன், இவன் என்று ஏக வசனத்தில் பேசியது தவறு தான் என்று சொன்ன நீதிபதி, பிரதமரை அவன், இவன் என்று பேசிய பிரகாஷ் ராஜ் மீது நடவடிக்கை எடுப்பாரா? பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், பிரதமரை அவன், இவன் என்று பேசியதை ரசித்து கேட்டு கொண்டிருந்தது சரி என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் ஏற்றுக்கொள்கிறாரா?
அவமரியாதையா?: ஒருமையில் யாரையும் பேசுவதற்கு சவுக்கு சங்கருக்கும் உரிமையில்லை, பிரகாஷ் ராஜுக்கும் உரிமையில்லை. சட்டப்படி தவறு தான். சவுக்கு சங்கரை கைது செய்த காவல்துறை, பிரகாஷ்ராஜை கைது செய்யுமா? முதல்வருக்கு மரியாதை? பிரதமருக்கு அவமரியாதையா?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications