ஆருத்ரா மோசடி.. 4 மாதமாக தலைமறைவு நாகப்பாம்புவால் வசமாக சிக்குகிறாரா ஆர்.கே.சுரேஷ்? முக்கிய க்ளூ?
சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் சிக்கிய ஆர்.கே.சுரேஷ் தற்போது டிவிட்டரில் நல்லப்பாம்பு படத்தை போட்டதால் டிவிஸ்ட் ஏற்பட்டுள்ளது.
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு ஆருத்ரா கோல்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி என ஆசைக்காட்டி முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ 2438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு ஆருத்ரா இயக்குநர்கள் உள்பட 21 பேரை கைது செய்தது.

இந்த வழக்கில் கைதான ரூசோவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் நடிகர், தயாரிப்பாளர், பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலைவராக உள்ள ஆர்.கே. சுரேஷுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்புள்ளதாக தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆர்.கே.சுரேஷுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால் ஆர்.கே.சுரேஷின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில்தான் சம்மனை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் படத்தயாரிப்பு தொடர்பாகவே ரூசோ தன்னை அணுகினார் என்றும் அது தொடர்பாக மட்டுமே பணப்பரிவர்த்தனை நடந்தது. தனது மனைவியையும் குழந்தையையும் கவனித்து கொள்ள வெளிநாட்டில் இருப்பதாகவும் அதனால் நேரடியாக ஆஜராக முடியவில்லை என கோரியிருந்தார். இதையடுத்து இந்த வழக்கை ஏப்ரல் 28 ஆம் தேதி ஒத்தி வைத்த நீதிமன்றம் , ஆர்.கே. சுரேஷின் மனுவை ரத்து செய்தது.
மேலும் விமான நிலையங்களில் ஆர்.கே.சுரேஷ் மீது லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அது போல் ஆர்.கே.சுரேஷின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. ரூசோவிடம் சுரேஷ் ரூ 15 கோடி பணம் வாங்கியிருக்கிறார் என்ற தகவலும் வெளியானது. இந்த நிலையில் திருச்சியில் உள்ள ஒரு நிதி நிறுவனத்திலும் ஆர்.கே. சுரேஷ் பண மோசடி செய்ததாக தெரியவந்தது. இதையும் குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆர்.கே. சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நாகப்பாம்பு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 5 மாதங்களுக்கு பிறகு இவர் நாகப்பாம்பின் படத்தை இணையத்தில் பதிவிட்டுவிட்டு நீக்கிவிட்டார். நீண்ட நாட்களாக தலைமறைவாக இருக்கும் ஆர்.கே.சுரேஷின் இந்த நாகப்பாம்பு பதிவு சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் அந்த நாகப்பாம்பு ட்வீட் ஒரு ட்விஸ்டை ஏற்படுத்தியுள்ளது.
சுரேஷ் தலைமறைவான போது கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி சிவலிங்கம் படத்தை போட்டிருந்தார். அதன் பிறகு 108 நாட்கள் கழித்து நாகப்பாம்பு படத்தை போட்டுள்ளார் . இந்த ட்வீட்டை போட்டதும் அவர் டெலிட் செய்துவிட்டார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications