குடும்பத்தினருடன் பேசிய ரஜினிகாந்த்.. தற்போது உடல்நிலை எப்படி உள்ளது? டிஸ்சார்ஜ் எப்போது?
சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்திற்கு இருதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிகிச்சைக்கு பிறகு குடும்பத்தினருடன் ரஜினிகாந்த் நன்றாக பேசி வருவதாகவும், இன்று மாலை பொது வார்டுக்கு மாற்றப்படுவார் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக நள்ளிரவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். உற்சாகத்துடன் நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்தில் கலந்துகொண்டார்.

இந்த நிலையில் நேற்று விசாகப்பட்டிணத்தில் நடந்த கூலி படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்துக்கு நெஞ்சுவலியும் அடிவயிற்றில் வலியும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களை தொடர்புகொண்டு ரஜினி பேசியதாகவும், இதன்பின்னர் நேற்று இரவு 10 மணியளவில் நடிகர் ரஜினிகாந்த் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து ரஜினிகாந்துக்கு இன்று காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் மூன்று விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இருதவியல் சிகிச்சை நிபுணர் சாய் சதீஷ் உள்பட 3 பேர் தலைமையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ரஜினிகாந்திற்கு உணவு செரிமான பிரச்சினை, சிறுநீரக பிரச்சினை உள்ளதா என்று மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இதேபோல் இதயத்துக்கு செல்லும் ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதா? எனவும் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.
விஐபி வருகிறார்.. நடிகர் ரஜினிகாந்திற்காக நேற்று மாலையே ரெடியான அப்பல்லோ மருத்துவமனை?
முதலில் அடி வயிற்றில் வீக்கத்திற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். 4 மணி நேர பரிசோதனைக்கு பிறகு அவருக்கு ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து ரஜினிகாந்திற்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை. ஆஞ்சியோ செய்யப்பட்ட பிறகு இருதவிய அறுவை சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
சுமார் அரை மணி நேரம் மயக்கத்தில் இருந்ததாகவும், அதன்பின்னர் கண்விழித்த ரஜினிகாந்த் மருத்துவர்களிடம் சிரித்து பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தொடர்ந்து குடும்பத்தினருடனும் ரஜினிகாந்த் பேசி வருகிறார். தற்போது எழுந்து, நடந்து செல்லும் அளவுக்கு உடல்நலத்துடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக இன்று அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
இன்று இரவு அல்லது நாளை ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்றும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் தற்போது ரஜினிகாந்த் நல்ல உடல்நலத்துடன் இருக்கும் தகவல் அறிந்து பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications