சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Rajinikanth Press Meet Live Updates: கட்சிக்கு ஒரு தலைமை- ஆட்சிக்கு ஒரு தலைமை - ரஜினி

Google Oneindia Tamil News

சென்னை: தமக்கு முதல்வர் ஆக வேண்டும் என்கிற கனவே இல்லை; தமது கட்சிக்கு ஒரு தலைமை- ஆட்சிக்கு ஒரு தலைமை என்கிற கொள்கை கடைபிடிக்கப்படும் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

சென்னையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Newest First Oldest First
11:02 AM, 12 Mar

கட்சி வேறு- ஆட்சி வேறு என்பது இந்தியா முழுவதும் ஒலிக்க வேண்டும்
11:02 AM, 12 Mar

2021 தேர்தலில் வெற்றிபெறாவிட்டால் கட்சியை கலைத்துவிடுவேன் என்கிற தொனியை வெளிப்படுத்தினார் ரஜினிகாந்த்
11:00 AM, 12 Mar

வாக்குகளைப் பிரிக்க நான் அரசியலுக்கு வரவிரும்பவில்லை- புரட்சி வெடிக்க வேண்டும்
11:00 AM, 12 Mar

திமுக, அதிமுகவுக்கு எதிராக என் கொள்கைகளால் அலை-எழுச்சி ஏற்படும் என்று நம்புகிறேன்
10:58 AM, 12 Mar

தமிழகத்தில் மிகப் பெரிய வெற்றிடம் இருக்கிறது- மக்களிடம் இப்போதே கொள்கைகள் சொல்ல வேண்டும். 54 ஆண்டுகாலமாக இருக்கும் திராவிட ஆட்சியை அகற்ற இதுதான் நேரம்
10:57 AM, 12 Mar

தேர்தல் நேரத்தில் கொள்கைகளை அறிவித்தால் எடுபடாமல் போனால் பலிகடாவாகிவிடுவர்
10:56 AM, 12 Mar

அசுர பலத்துடன் இருக்கும் அதிமுக, திமுக என்கிற ஜாம்பவான்களை எதிர்க்கிறோம். கருணாநிதியின் வாரிசு என்பதை நிரூபிக்கும் நிர்பந்தம் ஸ்டாலினுக்கு இருக்கிறது. இன்னொரு பக்கம் குபேரனின் கஜானாவையே கையில் வைத்திருக்கும் அதிமுகவை எதிர்கொள்ள வேண்டும்.
10:54 AM, 12 Mar

தமிழகத்தில் இப்போது நல்ல தலைவர்கள் யார் இருக்கிறார்கள்?
10:53 AM, 12 Mar

தமிழகத்தில் அரசியல் மாற்றம் தேவை- நல்ல தலைவர்கள் வர வேண்டும்
10:49 AM, 12 Mar

அரசியலில் அழகு பார்ப்பது பிடிக்காத ஒன்று- வேலை பார்க்க வேண்டும்
10:49 AM, 12 Mar

நான் முதல்வர் வேட்பாளர் இல்லை என்பதை யாரும் ஏற்கவே இல்லை
10:47 AM, 12 Mar

ஆட்சியில் இருப்பவர்களை கட்சியில் இருப்பவர்கள் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும்
10:46 AM, 12 Mar

ஆட்சியில் இருப்பவர்கள் தவறு செய்தால் அவர்களை கட்சி தலைமை தூக்கி எறியும்
10:45 AM, 12 Mar

கட்சி பதவிகளை தொழிலாக வைத்திருக்கிறார்கள் சிலர். தேர்தல் முடிந்ததும் அத்தியாவசியமான கட்சி பதவிகள் மட்டுமே இருக்கும் என்பது நிலைப்பாடு
10:45 AM, 12 Mar

நான் முதல்வர் பதவியை நினைத்துக் கூட பார்க்க முடியாது- என் ரத்தத்திலேயே இல்லை
10:44 AM, 12 Mar

கட்சிக்கு ஒரு தலைமை- ஆட்சிக்கு ஒரு தலைமை செயல்படுத்துவோம்
10:43 AM, 12 Mar

60% சதவீதம் 50 வயதுக்கு கீழே உள்ள இளைஞர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு
10:43 AM, 12 Mar

30-40% அனுபவம் வாய்ந்த வல்லுநர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்
10:42 AM, 12 Mar

50 வயதுக்கு கீழே இருப்பவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படும்
10:39 AM, 12 Mar

திமுக, அதிமுகவில் பூத் கமிட்டி தவிர 60,000 கட்சி பதவிகள் இருக்கின்றன; தேர்தல் நேரத்தில்தான் இவர்கள் தேவை
10:38 AM, 12 Mar

முதலில் அரசியல் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்பதற்காக சில திட்டங்கள் வைத்திருக்கிறேன்
10:38 AM, 12 Mar

2017-ல் அரசியலுக்கு வரும்போது சிஸ்டம் கெட்டுப் போயிருக்கிறது- மக்கள் மனதில் மாற்றம் உருவாக்க வேண்டும் என கூறினேன்
10:37 AM, 12 Mar

1996-க்குப் பிறகுதான் அரசியலை தீவிரமாக கவனிக்க தொடங்கினேன்
10:35 AM, 12 Mar

முதலில் அரசியலுக்கு வருவதாக சொன்னது 2017-ல்தான்- அரசியலுக்கு வருவதாக நான் 2017-க்கு முன்பு கூறவே இல்லை
10:35 AM, 12 Mar

வருங்கால அரசியல் எப்படி இருக்கும் என்பதை கண்ணோட்டமாக தெரிவிக்கிறேன் - ரஜினிகாந்த்
10:33 AM, 12 Mar

லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
10:33 AM, 12 Mar

செய்தியாளர்களை சந்தித்து வருகிறார் ரஜினிகாந்த்
10:30 AM, 12 Mar

பட்டாசுகள் வெடித்தும் மலர் தூவியும் ரஜினிக்கு ரசிகர்கள் வரவேற்பு
10:30 AM, 12 Mar

ராஜா அண்ணாமலைபுரம் லீலா பேலஸ் ஹோட்டலுக்கு ரஜினிகாந்த் வருகை தந்தார்
10:23 AM, 12 Mar

ரஜினிகாந்த் அறிவிப்புக்காக சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்கள் குவிந்தனர்
READ MORE

Actor Rajinikanth to spell his Political Agenda on today
English summary
Actor Rajinikanth will spell his political agenda on Today at Chennai Press Meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X