காஞ்சி சங்கராச்சாரியாரின் அறியாத முகம்.. இஸ்லாமியரிடம் பேசியது என்ன? நெகிழ்ந்த நடிகர் ராஜ்கிரண்
ஆறாம் வேளையா. இஸ்லாமிய சகோதரர் முழிக்கிறார். பெரியவர் தொடர்கிறார். ஆறாம் வேளைத் தொழுகையான, "தஹஜ்ஜத்து" தொழுகைஎவ்வளவு சிறப்பு மிக்கது என்று நபிகள் நாயகம் சொல்லி இருக்கிறாரேபடித்ததில்லையா...?
சென்னை: மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் இஸ்லாமியர் ஒருவரிடம் அழைத்து 6 வேளை தொழுக சொன்னதாகவும், எந்த மதத்தைப் பற்றியுமே எவ்வித புரிதலும் இல்லாமல் இப்போது உள்ளவர்கள் அரசியல்வாதிகளின் பேராதரவோடு மக்களை ஏய்த்துப் பிழைப்பதிலேயே குறியாக இருக்கின்றனர் என்றும் நடிகர் ராஜ்கிரண் தெரிவித்து உள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ராஜ்கிரண். நடிகராக தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த இவர் தற்போது வரை பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமின்றி முகநூலில் பல தரப்பட்ட கருத்துக்களை அவர் பதிவிட்டு வருகிறார்கள். இவரது கருத்துக்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்லாமியரிடம் பேசிய சங்கராச்சாரியார்
இதுகுறித்து அவர் பேஸ்புக்கில் பதிவிட்டு இருப்பதாவது, "மஹா பெரியவர்"
ஒரு இஸ்லாமிய சகோதரர், ஏதோவொரு வேலை நிமித்தமாக காஞ்சி சங்கர மடத்துக்குச் செல்கிறார். அவரை அழைத்து, பெரியவர் நலம் விசாரிக்கிறார். பின்பு, தொழுவது எல்லாம் உண்டா? ஆமாம் ஐயா, ஐந்து வேளையும் தவறாமல் தொழுவேன். ஏன் ஆறாம் வேளையை விட்டு விட்டீர்?

6 வேளை தொழுகை
ஆறாம் வேளையா. இஸ்லாமிய சகோதரர் முழிக்கிறார். பெரியவர் தொடர்கிறார். ஆறாம் வேளைத் தொழுகையான, "தஹஜ்ஜத்து" தொழுகை
எவ்வளவு சிறப்பு மிக்கது என்று நபிகள் நாயகம் சொல்லி இருக்கிறாரே
படித்ததில்லையா...? "ப்ரம்ம முகூர்த்த வேளையில், ஊரெல்லாம் உறங்கிக் கொண்டிருந்தார்.

ஆறுகால பூஜை
இறைவனுக்காக தூக்கத்தை உதறித்தள்ளி, விழித்தெழுந்து, இறைவனைத் தொழுது அவனிடம் கையேந்தி அழுதால் கேட்டது கிடைக்குமே அற்புதமான "தஹஜ்ஜத்து" தொழுகையை விட்டு விடாதீர் இந்துக்களுக்கு ஆறுகால பூஜை போல் இஸ்லாமியர்கள் மேன்மையுற ஆறு வேளை தொழுகை" என்று கூற
இஸ்லாமிய சகோதரர் நெக்குறுகிப் போனார்.

ஞானிகள்
மனிதனை மேன்மைப்படுத்தும், எல்லா மத தத்துவங்களையும் கற்றறிந்து, தெளிந்தவர் தான் ஞானி. மஹா பெரியவரைப் போன்ற ஞானிகள், இன்றில்லை. இந்து மதம் உட்பட, எந்த மதத்தைப் பற்றியுமே எவ்வித புரிதலும் இல்லாமல், தாடி வைத்து தலைப்பாகை கட்டியவர் எல்லாம் சாமியார்கள் என்றும், ஞானிகள் என்றும் யோகிகள் என்றும், சத்குருக்கள் என்றும், தங்களைத் தாங்களே நினைத்துக் கொள்கின்றனர்.

அரசியல் ஆதரவு
அரசியல்வாதிகளின் பேராதரவோடு மக்களை ஏய்த்துப் பிழைப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, நம் நாட்டிலே, சொந்த நாட்டிலே. சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார், சமயம் பார்த்து பல வழியிலும் கொள்ளை அடிக்கிறார்." என்றார்.












Click it and Unblock the Notifications