மோடிகிட்ட நான் வேற சொல்லணுமா?.. அவருக்கே காது கேட்டிருக்கும்.. சூர்யாவுக்காக வாய் திறந்த ரஜினி
சூர்யா பேச்சு பிரதமர் மோடிக்கு கேட்டுள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்
Recommended Video
சென்னை: "மோடிக்கிட்ட நான் என்னத்த தனியா சொல்றது.. சூர்யா பேசினதே மோடிக்கு கேட்டிருக்கு" என்று கிட்டத்தட்ட 10, 15 நாள் கழிச்சு ஒருவழியாக நடிகர் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
கடந்த 2 வாரங்களாக சூர்யா பேசிய புதிய கல்விக் கொள்கைக்கு ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஆளும் தரப்பு, பாஜக தரப்பு சூர்யாவின் பேச்சினை பகிரங்கமாக எதிர்த்தது. சூர்யாவுக்கு இதை பற்றி பேச தகுதி இல்லை என்றுகூட சொன்னது.
ஆனால் சீமான், டைரக்டர் ரஞ்சித் போன்றவர்களே சூர்யாவின் கருத்தை தைரியமாக வரவேற்றார்கள். இதற்கு பிறகுதான் "சொல்லலாமா, வேண்டாமா" என்று யோசிச்சு, சூழல் அறிந்து மற்றவர்கள் வரவேற்க ஆரம்பித்தார்கள். அப்படி வரவேற்றவர்களில் ரஜினியும் ஒருவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ரஜினி ரியாக்ஷன்
பொதுவாக, மத்திய அரசு எந்த அறிவிப்பு, திட்டம் கொண்டு வந்தாலும், அதற்கு ரஜினியின் ரியாக்ஷன் என்னவென்று தெரிந்து கொள்ள நம் மக்களுக்கு ஒரு ஆர்வம்! வழக்கம்போல் இந்த விஷயத்திலும் ரஜினி வாய் திறக்கவே இல்லை, துணிந்து கருத்து சொல்லவே இல்லை. அறிக்கையும் விடவில்லை, அவ்வளவு எதற்கு மோடியின் தேர்தல் வெற்றி முதல், பணமதிப்பு இழப்பு விவகாரம் வரை ஓடிப்போய் முதல் ஆளாக ட்வீட் போட்டு வாழ்த்திய ரஜினி, இந்த விவகாரத்திற்கு ட்வீட் கூட போடவில்லை.

காப்பான்
இந்நிலையில், நேற்றுதான், இதை பற்றி வாய் திறந்துள்ளார். அதுகூட சூர்யா பற்றி பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால்தான். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது ரஜினிகாந்த்தான்.

மோகன்லால்
அப்போது பேசிய அவர், ‘வைரமுத்துவின் தமிழாற்றுபடை புத்தகத்தை படித்தபோது அவர் மீதிருந்த மரியாதை மேலும் அதிகமானது என்பதுமுதல் கேவி ஆனந்த், மணிரத்னம், மோகன்லால் வரை புகழ்ந்து தள்ளிவிட்டார். பிறகுதான் சூர்யா விஷயத்துக்கு வந்தார். அப்போது அவர் பேசும்போது:

நடிப்பு
நடிகர் சூர்யா விடாமுயற்சியால் சினிமாவில் முன்னேறி இருக்கிறார். முதல் படமான ‘நேருக்கு நேர்' படத்தில் சூர்யா நடிப்பு பேசப்படும்படியாக இல்லாமல் போனது. ஆனால், அதன்பிறகு பாலாவின் ‘நந்தா', ‘பிதாமகன்' படங்களில் சிறந்த நடிகராக தன்னை செதுக்கிக்கொண்டு முன்னேறி வந்துள்ளார்.

நல்ல பிள்ளைகள்
சூர்யாவையும், கார்த்தியையும் ஒழுக்கமானவர்களாக அண்ணன் சிவகுமார் வளர்த்திருக்கிறார். இருவருமே நல்ல பிள்ளைகள். சூர்யாவின் இன்னொரு முகம் சில நாள்களுக்கு முன்னர் தெரியவந்தது. புதிய கல்வி கொள்கை குறித்து சூர்யா பேசிய கருத்து இங்கே சர்ச்சை ஆனது. இதே கருத்தை ரஜினிகாந்த் பேசியிருந்தால் பிரதமர் மோடி கேட்டிருப்பார் என்றுகூட இங்கே பேசியவர்கள் சொன்னார்கள். சூர்யா பேசினாலும் மோடி கேட்பார். இந்த விஷயத்தில் சூர்யா தெரிவித்த கருத்தை நான் ஆதரிக்கிறேன்.

அறக்கட்டளை
மாணவர்களுக்கு தன்னுடைய அறக்கட்டளை மூலம் நிறைய உதவிகளை செய்து வருகிறார். மாணவர்கள் படும் கஷ்டங்களை நேரில் பார்த்து நிறைய அனுபவத்தை தெரிந்து வைத்துள்ளார். அதனால் சூர்யா பேசும் கருத்துகள் வரவேற்கத்தகுந்தவை. எதிர்காலத்தில் மக்களுக்கு அவரது தொண்டு தேவையாக இருக்கும்" என்றார்.

வாழ்த்து
"சூர்யா பேசியதே மோடிக்கு கேட்டிருக்கிறது" என்கிறார் ரஜினி.. அப்படியானால் இந்த கருத்தை மோடியிடம் தனியாக எடுத்து சொல்ல ரஜினி தயாரில்லை என்றே தெரிகிறது. அதே நேரத்தில் சூர்யாவையும் வாழ்த்தியது போலவும் ஆகிவிட்டது.
-
உன் நடிப்பு பிடிக்காதுன்னு பாரதிராஜா சொல்லுவாரு.. கடைசிவரை நான் நினைச்சது நடக்கல! ரஜினிகாந்த் உருக்கம் -
மோடி நீண்ட நாட்கள் இந்திய பிரதமரா.. நேருவின் சாதனை முறியடிக்கப்படவில்லை.. ப சிதம்பரம் விளக்கம் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications