திடீரென மயங்கி விழுந்த ரோபோ சங்கர்.. சூட்டிங்கில் திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி
சென்னை: நடிகர் ரோபோ சங்கருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பில் அவர் திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று புகழ்பெற்றவர் ரோபோ சங்கர். அதன்பிறகு சினிமா வாய்ப்பு கிடைத்தது. நடிகர் தனுஷின் மாரி உள்பட பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து நடிகராக உயர்ந்தார் ரோபோ சங்கர்.

இந்நிலையில் தான் திடீரென்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ரோபோ சங்கர் தற்போது சென்னையில் புதிய படப்பிடிப்பில் நடித்து வருகிறார். படப்பிடிப்பின்போது அவர் திடீரென்று மயங்கி உள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
படப்பிடிப்பின்போது ரோபோ சங்கருக்கு நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மயங்கியதாக கூறப்படுகிறது. மருத்துமவமனையில் ரோபோ சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு ரோபோ சங்கர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டார். மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை பெற்று அவர் நலம் பெற்ற நிலையில் தற்போது மீண்டும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது ரோபோ சங்கரின் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications