ஐசியூவில் நடிகர் ரோபோ சங்கர்.. சென்னை பெருங்குடி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. வெளியான தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் நடிகர் ரோபோ சங்கர் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை மோசமாகி உள்ளதால் அவரை ஐசியூவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று புகழ்பெற்றவர் ரோபோ சங்கர். விஜய் டிவியில் வெளியான பல்வேறு நிகழ்ச்சிகளில் ரோபோ சங்கர் தனது மிமிக்ரி மூலமாக மக்களை கவர்ந்தார். அதேபோல் ரோபோ போன்று நடனமாடி மக்களை ஈர்த்தார்.

robo shankar chennai

அதன்பிறகு சினிமா வாய்ப்பு கிடைத்தது. நடிகர் தனுஷின் மாரி உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். காமெடி கதாபாத்திரங்களில் நடித்து நடிகராக உயர்ந்தார் ரோபோ சங்கர்

இந்நிலையில் தான் திடீரென்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னையில் புதிய படப்பிடிப்பில் ரோபா சங்கர் நடித்து வந்தார். அப்போது அவர் திடீரென்று மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

படப்பிடிப்பின்போது ரோபோ சங்கருக்கு நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மயங்கியதாக கூறப்படுகிறது. மருத்துமவமனையில் ரோபோ சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று காலையில் ரோபோ சங்கர் மருத்துவமனையின் சாதாரண பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன்பிறகு மாலையில் அவர் ஐசியூவுக்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டதால் ஐசியூவுக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஐசியூவில் வைத்து ரோபோ சங்கருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது அவரது ரசிகர்களை கவலைப்பட வைத்துள்ளது. ரோபோ சங்கர் மீண்டும் குணம்பெற வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு ரோபோ சங்கர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டார். மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை பெற்று அவர் நலம் பெற்ற நிலையில் தற்போது மீண்டும் உடல்நலக்குறைவால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளது அவரது குடும்பத்தினரையும், ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+