இந்து மதத்தை இழிவுப்படுத்தினால்... குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் -சரத்குமார்
சென்னை: இந்து மதத்தை இழிவுப்படுத்துவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், கறுப்பர் கூட்டத்திற்கு தனது கடும் கண்டனத்தை சரத்குமார் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது'

சரத்குமார் கருத்து
''கறுப்பர் கூட்டம் நாம் வணங்கும் முருகக் கடவுளை இழிவு படுத்தியதை அறிக்கையாக வெளியிடாமல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரத்யேகமாக நாளை சொல்வதற்குள் நான் கறுப்பர் கூட்டத்தை விமர்சிக்கவில்லை என்ற உங்கள் ஆதங்கத்தை நான் அறிவேன். இதோ என் கருத்து. தினமும் முருகனைத் துதித்து 108 முறை ஓம் நமசிவாய என்று சிவ பூஜை செய்து, தாய் தந்தையரை வணங்கி சமத்துவமாக இருத்தல் அவசியம் என்று நாளை துவங்குகின்ற என் கருத்து..''

இந்து கடவுள்
''கறுப்பர் கூட்டமே நீங்கள் இயக்கிவிடப்பட்ட மூடர்கள். "உதவிசெய்யாவிட்டாலும் பிறருக்கு இன்னல் தரவேண்டாம்" என்பது பழமொழி.
பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் வாழ்ந்து வருகின்ற கலாசாரம்,தெய்வ வழிபாடு, நம்பிக்கை,இவைகளை கொச்சை படுத்துவர்களுக்கு கொடுக்கின்ற தண்டனை இனி ஆண்டாண்டு காலத்திற்கு எந்த அறிவு மூடர்களும் வாய் திறவாமல் நம் ஹிந்துக்கடவுள்களை விமர்சிக்க முடியாத அளவிற்கு இருக்கவேண்டும்.''

யாரையும் இழிவுபடுத்தாதீர்
''கனவில்கூட அவர்களுக்கு அந்த எண்ணம் வரக்கூடாது, தப்பி தவறி கனவில் வந்தால் உடனே எழுந்து மன்னிப்பு கேட்கவேண்டும். எந்த மதத்தையும் இழிவு படுத்தக்கூடாது என்ற எண்ணத்தோடு அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் நம்மிடையே பிரிவினை என்ற விஷத்தை விதைப்பவர்கள் இவர்கள். ஒரு வாதத்திற்கு கேட்கிறேன் இந்த கறுப்பர் மந்தைகள் மற்ற மதத்தை அந்த மத போதனைகளை விமர்சிக்க தைரியம் இருக்கிறதா?''

என்ன பிரச்சனை
''ஹிந்துக்களை, ஹிந்துமதத்தை இழிவுபடுத்தினால் யாரும் கேட்க மாட்டார்கள் என்று தொடர்ந்து விமர்சிக்கின்ற கூட்டத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்து பாடம் புகட்டவேண்டும். விளம்பரம் தேடுபவர்கள் ஒடுக்கப்பட்ட வேண்டும். முருகா நான் சிறப்பாக, ஆரோக்கியமாக நோய் நொடியில்லாமல் வாழ்வதற்கு என் உடலில் உள்ள அனைத்து அங்கங்களை பாதுகாப்பாயாக என வேண்டுவதில் கறுப்பர் மந்தைகளே உங்களுக்கு என்னடா பிரச்சனை. கறுப்பர் கூட்டமே உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்''.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications