சரத்குமார் கிளப்பிய பரபரப்பு.. ஆபாச வெப்சைட்கள் மொத்தமா முடங்குதா.. எல்லாமே சூதாட்டம்.. அப்படின்னா?
சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ள நிலையில், அது தொடர்பாக புதிய கோரிக்கை ஒன்றை நடிகர் சரத்குமார் முன்வைத்திருக்கிறார்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களை விளையாடி பணமிழந்து, கடனாளியாகி, கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டனர்.
அதனால், மனித உயிர்களை காவு வாங்கும் இப்படிப்பட்ட ஆப்களை முற்றிலுமாக தடை செய்யும் மசோதாவை தமிழக அரசு கொண்டு வந்து ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆன்லைன் தடை சட்டத்திற்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் தொடர்ந்து நிராகரித்துக்கொண்டே இருந்தார்..

சரத்குமார்: இதையடுத்து, தமிழக அரசியலில் பல்வேறு அதிர்வுகளை கிளப்பியது இந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா விவகாரம். பிறகு, தமிழக அரசின் பலகட்ட அழுத்தங்களுக்கு பிறகு இதற்கு ஒருவழியாக ஒப்புதல் வழங்கியிருக்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ரவி. அதைத் தொடர்ந்து இப்போது ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் அமலுக்கு வந்திருக்கிறது. இதற்கிடையில் ஆன்லைன் சூதாட்டத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் விளம்பரத்தில் சமக தலைவரும் நடிகருமான சரத்குமார் நடித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.
இதுகுறித்து சரத்குமார், "ரம்மி ஒரு புத்திசாலித்தனமான விளையாட்டு. நான் அந்த விளம்பரங்களில் நடித்ததற்காக இதைச் சொல்லவில்லை. ரம்மி விளையாட புத்திசாலித்தனம் வேண்டும். ஒருவன் எதையாவது செய்ய விரும்பவில்லை என்றால், அவன் அதை செய்யவே மாட்டான். நான் விளம்பரத்தில் நடித்ததால் மக்கள் விளையாடுவதில்லை. நான் கேட்டதற்காக அவர்கள் எனக்கு வாக்களித்தார்களா? மதுவிலக்கு கோரியும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தக் கோரியும் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தின்போது சரத்குமார் கேட்டுக்கொண்டிருந்தார்.
ஆபாச வெப்சைட்கள்: ஆன்லைன் ரம்மியை நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்தச் சொல்லி எந்தப் பயனும் இல்லை என்றும் சரத்குமார் கூறியிருந்த நிலையில், இப்போது, முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்.. சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொள்ளாச்சியைச் சேர்ந்த சபாநாயகம் என்பவர் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்ட செயலியால் சுமார் ரூ.90 லட்சம் தொகையை இழந்த வேதனையில் தற்கொலை செய்து கொண்ட செய்தி வேதனையளிக்கிறது.
சூதாட்டத்துக்கு தடை என்று சொல்லும்போது, அனைத்துவித ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் தடை விதித்திட வேண்டும். முக்கியமாக நான் ஏற்கெனவே பலமுறை தெரிவித்தது போல, இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் ஆபாச இணையதளங்களை முடக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். சரத்குமாரின் இந்த வேண்டுகோள் தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் விவாதமாகி வருகிறது.

போர்னோகிராபி: போர்னோகிராஃபி உள்ளிட்ட செயலிகள் மற்றும் இணையதளங்களுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது, பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது. ஏற்கனவே ஒரு பேட்டியில் சரத்குமார் சொல்லும்போது, ஆன்லைன் ரம்மி மட்டுமல்ல, ஆபாச பட வெப்சைட்கள் மற்றும் மதுவும் தடை செய்யப்பட வேண்டும், நீங்கள் தடை செய்தால் நான் ஏன் நடிக்க போகிறேன் என கேள்வி எழுப்பியிருந்தார், கிரிக்கெட் சூதாட்டத்தில்கூட தோனி, விராட் கோலி நடிக்கிறார்கள். இதையெல்லாம் தடை செய்தால் யார் நடிக்க போகிறார்கள்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications