சத்யராஜின் மகளுக்கு தில்லு.. கட்சி கொடியை கடையில் வாங்கினால்? திமுக கிட்ட வராதீங்க: திவ்யா சத்யராஜ்
சென்னை: கடைகளில் திமுக கொடியை வாங்கிக் கொண்டு யாரும் தவறு செய்தால் அதற்கு திமுக எப்படி பொறுப்பாக முடியும்? ஈசிஆர் சம்பவத்துக்கும் அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்று பிரபல நடிகர் சத்யராஜ் மகளும், மருத்துவருமான திவ்யா தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகர் சத்யராஜ், எப்போதுமே தந்தை பெரியார் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.. திமுக ஆதரவாளரும்கூட.. பகுத்தறிவு கருத்துக்களை தன்னுடைய படங்களிலும் லேசாக புகுத்தி வருபவர்.. இவரது மகள் திவ்யா மருத்துவராக இருக்கிறார். ஊட்டச்சத்து நிபுணரான இவர், சமூக அக்கறையுடன் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் திவ்யா சத்யராஜ் பங்கேற்றும் வருகிறார். பொதுமக்களின் நன்மைக்காக, ஊட்டச்சத்து குறைபாடு குறித்த பல்வேறு வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார் திவ்யா.. அவரை வரவேற்று, திமுக உறுப்பினர் அட்டையை முதல்வர் வழங்கினார்.
ஆரோக்கியம்: திமுகவில் இணைந்தது பற்றி திவ்யா சத்யராஜ் சொல்லும்போது, "மக்கள் பணி செய்ய வேண்டும் என்பது என்னுடைய கனவு. திமுக, பெண்களுக்கு மரியாதை தரும் கட்சியாக உள்ளது. அதற்கு உதாரணம் புதுமைப்பெண் திட்டம். நான் ஊட்டச்சத்து நிபுணர். ஆரோக்கியத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பேன்.
திமுக ஆரோக்கியத்துக்கு மரியாதை தரும் கட்சியாக இருக்கிறது. அதற்கு உதாரணம்தான் பள்ளிகளில் காலை உணவு திட்டம். இது அனைத்தையும்விட எல்லா மதங்களுக்கும் மரியாதை தருகிற ஒரே கட்சியாக திமுக உள்ளது.. தலைவர் எனக்கு எந்த பொறுப்பை அளிக்கிறாரோ, அதில் மிகவும் கடினமாக உழைப்பேன்" என்று கூறியிருந்தார்.
திமுக கொடி: இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார் திவ்யா.. அப்போது அவர் சொன்னதாவது: "ஈசிஆர் சாலை சமீபத்தில் திமுக கொடியுடன் சிலர் காரில் சென்ற பெண்களை விரட்டியதாக வீடியோ காட்சிகள் வெளியானது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு விசாரணை செய்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அண்ணா பல்கலைக் கழக விவகாரத்திலும், சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளனர். அந்த நபர் திமுககாரர் என்று செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. பிரபலமானவர்களுடன் யார் வேண்டுமானாலும் போட்டோ எடுத்துக் கொள்ளலாம். அப்படி புகைப்படம் எடுத்துக் கொண்டவர் தவறு செய்தால் பிரபலங்கள் பொறுப்பாக முடியுமா?
ஈசிஆர் சம்பவம்: அண்ணா பல்கலைக் கழகத்தில் ஒரு பெண்ணிற்கு நடந்தது பெரிய கொடுமையான விஷயம். ஆனால் திமுக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளது. திமுக கட்சி கொடி எங்கும் கிடைக்கிறது. கடைகளில் திமுக கொடியை வாங்கிக் கொண்டு யாரும் தவறு செய்தால் அதற்கு திமுக எப்படி பொறுப்பாக முடியும்? ஈசிஆர் சம்பவத்துக்கும் அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
எதிர்க்கட்சிக்காரர் சொல்லும் பொய்களுக்கும், புகார்களுக்கும் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. எதிர்க்கட்சிகள் இது பற்றி பேசுவதற்கு தகுதி கிடையாது என்றே நினைக்கிறேன்.
விளக்கு: முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்ற தருணம் கொரோனா உச்சத்தில் இருந்த தருணம். பதவி ஏற்றதும் கொரோனாவுக்கு தீவிர நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்தினார். ஆனால், பாரத பிரதமர் மோடி கொரோனாவுக்கு எல்லோரும் மாடியிலிருந்து விளக்கு பிடிக்க சொன்னார். விளக்கு பிடிக்க இதுவா நேரம்? திமுக ஆட்சியில் இல்லை என்றால் கொரோனாவையும், வெள்ளத்தையும் சமாளித்திருக்கவே முடியாது. மற்ற கட்சிகளை விட பெரிய மரியாதை தருகிற கட்சி திமுகதான்.
அண்ணாமலை லண்டன் போய் விட்டு வந்து சவுக்கால் அடித்துக் கொண்டார். இதைப் பார்த்து, பக்கத்து வீட்டு பையன் சாக்லேட் கொடுக்கவில்லை என்றால் நான் சவுக்கால் அடித்துக் கொள்வேன் என்கிறான்.. திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார். நீங்கள் கண்டிப்பாக செருப்பு அணிந்து கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் காலில் முள் குத்தினால் கூட திமுகதான் காரணம் என்று சொல்வீர்கள்.
எதிர்க்கட்சிகள்: அதிமுக, பாஜக தவெக. கட்சிகள் பற்றியெல்லாம் நாங்கள் பேசுவதற்கு நிறைய இருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகளை திட்டுவது எங்கள் வேலை இல்லை. மக்கள் பணி தான் முக்கியம்" என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications