யார் என்று கேட்ட ஜெயக்குமார்.. நேர்மையாக முன்னேறியவன் நான்.. பதில் சொன்ன சித்தார்த்.. பரபர சண்டை!
Recommended Video
சென்னை: நடிகர் சித்தார்த்தை யார் என்று தெரியாது என்று குறிப்பிட்ட அமைச்சர் ஜெய்குமாருக்கு நடிகர் சித்தார்த் டிவிட்டரில் பதில் அளித்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் வார்த்தை போர் மூண்டு இருக்கிறது.
நடிகர் சித்தார்த் சினிமா மட்டுமின்றி அரசியல் தொடர்பாகவும் அவ்வப்போது பேச கூடிய நபர். தமிழக அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியல் குறித்தும் தொடர்ச்சியாக பேசி வருகிறார். தன்னுடைய கருத்துக்களை மிகவும் தைரியமாக பேச கூடிய நபர் சித்தார்த்.
மிக முக்கியமான மத்திய பாஜக அரசு கொண்டு வந்த பல திட்டங்களை சித்தார்த் நேரடியாக எதிர்த்து இருக்கிறார். இதனால் அவருக்கு டிவிட்டரில் நிறைய மிரட்டல்கள் கூட வந்துள்ளது.
|
சித்தார்த் டிவிட்
இந்த நிலையில் சித்தார்த் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து டிவிட் செய்தார். அதில் , மறைந்த முதல்வர் ஜெயலலிதா குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஒரு போதும் ஆதரித்து இருக்க மாட்டார். ஆனால் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு அதை ஆதரிக்கிறது. இது பெரிய அதிர்ச்சி அளிக்கிறது.
|
உண்மையான நிறம்
இது அவர்களின் உண்மையான நிறத்தை காட்டுகிறது. அவரின் நேர்மையின்மையும் தொடர்ந்து எப்படியாவது ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்று ஆசையும் இப்படி செய்ய வைக்கிறது. இதற்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும். அதுவரை இந்த தற்காலிக பதவியில் இருங்கள் என்று குறிப்பிட்டார்.

பதில் அளித்தார்
அவரின் இந்த டிவிட் குறித்து தமிழக அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் ஜெயக்குமார், யார் அந்த சித்தார்த். அவர் நடிகரா? அவர் என்ன படத்தில் நடித்து இருக்கிறார். சிலர் எல்லாம் விளம்பரத்திற்காக கேள்விகளை வைப்பார்கள். அவர்களுக்கு பதில் சொல்லி பிரபலமாக்க விரும்பவில்லை, என்று குறிப்பிட்டார்.
|
சித்தார்த் பதில்
இதற்கு பதில் அளித்துள்ள சித்தார்த், என்னை பார்த்து அவர் யார் என்று கேட்கிறார். பிரச்சனை இல்லை. அவருடைய அரசுதான் 2014ல் எனக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகருக்கான விருதுக்கு தேர்வு செய்தது. 2017ல் இதை அறிவித்தார்கள். அதை இன்னும் கொடுக்கவில்லை. நான் விளம்பரத்திற்காக பேசவில்லை. நான் கஷ்டப்பட்டு உழைத்து சுயமாக இந்த இடத்திற்கு வந்துள்ளேன். நேர்மையாக வந்துளேன்!, என்று பதில் அளித்துள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications