சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயேன் சென்ற கார் விபத்து.. டிரைவர்கள் வாக்குவாதம்.. என்ன நடந்தது?
சென்னை: சென்னையில் நடிகர் சிவகார்த்தியேகன் சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது. மத்திய கைலாஷ் பகுதியில் சென்று கொண்டிருந்த போது முன்னாள் சென்ற கார் மீது மோதி சிவகார்த்தியேகன் கார் விபத்தில் சிக்கியது. இதனால் இரு கார் டிரைவர்களும் சாலையில் இறங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சாலை விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காரில் இருந்து இறங்கிய நடிகர் சிவகார்த்திகேயன், முன்னாள் நின்ற காரில் இருந்தவரிடம் சமாதானம் செய்து கார் சேதத்திற்கான தொகையினை நான் தருவதாக சொல்லியதாகவும், அதற்கு அந்த காரில் இருந்த பெண் எங்கள் மீது தான் தவறு இருக்கிறது என சொல்லி சமாதானம் ஆனதாக கூறப்படுகிறது.

பராசக்தி திரைப்பட பணிகள்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் உள்ளார். கடைசியாக இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான மதராஸி படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தற்போது சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வர இருக்கிறது. பராசக்தி படத்தினை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி உள்ளார். ரெட் ஜெயன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ளது. படத்தில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
சிவகார்த்திகேயன் கார் விபத்தில் சிக்கியது
இந்த படம் தொடர்பான வேலைகளில் சிவகார்த்திகேயன் பரபரப்பாக ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் தான், சென்னை மத்திய கைலாஷ் அருகே சிவகார்த்தியேகன் சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது. முன்னாள் சென்ற கார் மீது சிவகார்த்திகேயன் கார் மோதியது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கார்களில் மட்டும் சேதாரம் ஏற்பட்டது. இதனால் இரண்டு கார்களின் டிரைவர்களும் மாறி மாறி வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உண்டானது. அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதை பார்த்தது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் அங்கு வந்து அவர்களிடம் விசாரிக்க தொடங்கினர்.
காரில் இருந்து இறங்கி வந்த சிவகார்த்திகேயன்
இதையடுத்து காரில் இருந்து இறங்கிய நடிகர் சிவகார்த்திகேயன், முன்னாள் நின்ற கார் உரிமையாளரிடம் சென்று காரில் சேதம் ஏற்பட்டு இருந்தால் அதற்கான தொகையை தந்துவிடுவதாக சொல்லியதாகவும், அதற்கு அந்த காரில் இருந்த பெண், இல்லை.. இல்லை.. எங்கள் மீது தான் தவறு என்று கூறியதாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
போலீசார் விசாரணை
இரு தரப்பினரும் சமாதானமாக சென்றதாகவும், இதனால் புகார் எதுவும் தரப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயன் காரில் இருந்து இறங்கியதால் அங்கு மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டதும் போக்குவரத்து நெரிசல் சீரானது. இந்த விபத்து தொடர்பாக மயிலாப்பூர் போக்குவரத்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications