ஃபெஞ்சல் புயல் பாதிப்பு.. ரூ.10 லட்சத்தை நிவாரணமாக கொடுத்தார் அமரன் நாயகன் சிவகார்த்திகேயன்
சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்தை நடிகர் சிவகார்த்திகேயன் நிவாரணமாக வழங்கியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் வங்கக்கடலில் உருவாகும் புயல் தமிழகத்தை கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகிக்கிவிடுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களை குறிவைத்து தாக்கியது. புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில், அதன் வேகம் இயல்பை விட குறைவாக இருந்தது. எனவே, அது விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கடுமையான மழைப்பொழிவை கொடுத்தது.

இது பெரும் வெள்ளத்தை உருவாக்கியது. வெள்ளம் சில மாவட்டங்களில் வடிந்துவிட்டாலும் கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இது வடியவில்லை. இன்னமும் மக்கள் பேரிடர் மீட்பு முகாம்களில்தான் தங்கியுள்ளனர். இப்படி இருக்கையில் இம்மூன்று மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2000 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதேபோல வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
தவிர மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என்றும், முற்றிலுமாக பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பதில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதிய வீடு வழங்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் பேரிடர் நிவாரண நிதிக்கு பல்வேறு அமைப்புகளும், தனி நபர்களும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். அந்த வகையில் அமரன் திரைப்பட நாயகன் நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சத்தை நிவாரணமாக வழங்கியுள்ளார்.

மழையின் தாக்கம்: நவ.30ம் தேதி மரக்காணத்திற்கு அருகே ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தது. வழக்கமாக புயல் கரையை கடக்கிறது எனில் அது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிவிடும். அதேபோல ஃபெஞ்சலும் வலுவிழந்தது. ஆனால் இதன் நகரும் வேகம் குறைவாக இருந்தது. எனவே, இது செல்லும் இடங்கள் எல்லாம் கனமழையை கொடுத்தது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் 50 செ.மீ அளவுக்கு மழை பெய்திருந்தது. 20 செ.மீ அளவுக்கு மழை பெய்தால் ரெட் அலர்ட் விடுக்கப்படும். அப்படியெனில் 50 செ.மீ எனில் எந்த அளவுக்கு மழையின் தீவிரம் இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
மொத்தமாக வடகிழக்கு பருவமழையும், ஃபெஞ்சல் புயலும் சேர்ந்து தமிழகத்திற்கு நல்ல மழையை கொடுத்திருக்கிறது. வழக்கமாக அக்.1 தொடங்கி டிச.3ம் தேதி வரை 366.6 மி.மீ அளவுக்குதான் மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 441 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இது இயல்பை விட 20% அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications