நெடுஞ்சானாக காலில் விழுந்து... கலைமாமணி விருதை தாய்க்கு சமர்ப்பித்த நடிகர் சிவகார்த்திகேயன்
சென்னை: தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருதை தாய்க்கு சமர்ப்பித்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
தமிழக அரசின் 2019, 2020 ஆம் ஆண்டுகளுக்கான கலை மாமணி விருதுகள் சென்னை தலைமை செயலகத்தில் இன்று வழங்கப்பட்டது. இவ்விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்றுக் கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன், தமிழக மக்களுக்கும் என் அப்பா அம்மாவுக்கும் நன்றி என கூறி இருந்தார்.

அத்துடன் இல்லாமல் வீட்டுக்கு சென்ற சிவகார்த்திகேயன், தாயின் காலில் நெடுஞ்சானாக விழுந்து வணங்கி தான் பெற்ற கலைமாமணி விருதை தாய்க்கு சமர்ப்பித்தார்.
சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும்,இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி🙏 தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம்🙏 pic.twitter.com/EtBPVyycNK
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 20, 2021
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன், சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும், இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி!
தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம் என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications