Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கார்த்தி மகள் prekg ஸ்கூல் ஃபீஸ் இவ்வளவா? நீங்களாம் நல்லாயிருப்பீங்களா.. நடிகர் சிவக்குமார் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்தியின் மகள் படிக்கும் பள்ளிக் கூடத்தில் இத்தனை லட்சம் கட்டணமா? அடப்பாவிகளா நீங்கெல்லாம் நல்லா இருப்பீங்களா என நடிகர் சிவக்குமார் ஆவேசமடைந்தார்.

தமிழ் சினிமாவில் தனது யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியவர் சிவக்குமார். இவர் ஹீரோவாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்திருந்தார். நடிகர், பேச்சாளர், இலக்கியவாதி இவை எல்லாவற்றுக்கும் மேல் இவர் ஒரு ஓவியர்.

அற்புதமாக ஓவியங்களை வரைவார். இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார். ராதிகாவின் அண்ணாமலை சீரியலில் நடித்திருந்தார். இவர் கல்வி கற்க முடியாத மாணவர்களுக்கு கல்வி வழங்க அகரம் அறக்கட்டளையை தொடங்கினார்.

Actor Sivakumar angry speech on Actor Karthis daughter school fees

2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அகரம் அறக்கட்டளையில் தரமான கல்வியை அனைத்து ஏழை எளிய மக்களும் பெற்று இன்று சமூகத்தில் நல்லநிலையில் இருக்கிறார்கள். படிக்க முடியாத சூழலில் இருப்போரை தேடி சென்று படிப்பதற்கு தேவையான நிதியை இந்த அறக்கட்டளை வழங்குகிறது.

இதில் தந்தையுடன் மகன்கள் சூர்யாவும் கார்த்தியும் பணஉதவியை அளித்து மாணவர்களை ஊக்கப்படுத்தி வழிநடத்தி வருகிறார்கள். இந்த அகரம் அறக்கட்டளையின் சார்பில் 44-ஆவது விருது வழங்கும் விழா அண்மையில் நடந்தது. இந்த அறக்கட்டளை தொடங்கி 44 ஆண்டுகள் நிறைவடைந்தன. 1979 ஆம் ஆண்டு தனது 100 ஆவது படத்தின் போது சிவக்குமார் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் தொடங்கப்பட்டது.

இந்த அறக்கட்டளையுடன் இணைந்து அகரம் அறக்கட்டளையும் ஏழைகளுக்கு உதவிகளை செய்து வருகிறது. இந்த விருது வழங்கும் விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த விழாவில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து நடிகர்கள் சூர்யாவும் கார்த்தியும் பேசினர்.

இதைத் தொடர்ந்து நடிகர் சிவக்குமார் பேசுகையில் எங்கள் அம்மா எங்களின் சொந்த நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். எனது படிப்பிற்காக என் அக்காவின் படிப்பை நிறுத்திவிட்டார். நான் படித்த போது 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு இரண்டே கால் ரூபாய் கட்டணம். அது போல் 9 , 10 ஆகிய வகுப்புகளுக்கு ஐந்தே கால் ரூபாய் கட்டணம்.

நான் படித்த போது காமராஜர் உதவி எங்களுக்கு கிடைக்கவில்லை. கட்டணம் கட்டித்தான் படித்தேன். நான் 1ஆம் வகுப்பு முதல்வர் 10 ஆம் வகுப்பு வரை படித்த போது மொத்தம் எவ்வளவு செலவானது என பார்த்தால் வெறும் 850 ரூபாய்தான். ஆனால் கார்த்தியின் மகள் ப்ரீகேஜி படிக்கிறார். அவர் எல்ஜேகியும் அல்ல, யூகேஜியும் அல்ல.

ப்ரீகேஜி படிப்பதற்கு 2.5 லட்சம் ரூபாய் செலவாகிறது. இத்தனைக்கு ப்ரீகேஜியில் எந்த படிப்பும் சொல்லி தரமாட்டாங்க. ஒன்னுக்கு ரெண்டுக்குதான் போவாங்க. இதுக்கு ரெண்டு லட்சமா , அடப்பாவிங்களா, நல்லா இருப்பீங்களா என ஆவேசத்துடன் பேசினார். மேலும் அவர் பேசுகையில் என் அம்மாவிடம் 10 ஆம் வகுப்புக்கு கட்டணமாக ஐந்தே கால் ரூபாய் கேட்டேன். உடனே முந்தானையில் முடிந்து வைத்திருந்த காசை கொடுத்தார். அது போல் அடுத்த சில நாட்கள் கழித்து மீண்டும் அம்மாவிடம் போய் பதினொன்றே கால் ரூபாய் கேட்டேன். எதுக்கு என்றார் பொதுத் தேர்வு கட்டணம் என்றேன், சரி என கொடுத்தார். பிறகு மீண்டும் அம்மாவிடம் போய் தலையை சொறிந்தேன்.

அதற்கு அம்மா என்ன என கேட்டார். ஒன்னும் இல்லை என்றேன். சும்மா சொல்லு என்றார். 10ஆம்வகுப்பு முடிக்க போவதால் நண்பர்கள், வாத்தியார்கள், தலைமை ஆசிரியர்களுடன் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும். அதற்காக 5 ரூபாய் வேண்டும் என கேட்டேன். கொன்னேபுடுவேன் போடா என திட்டினார். பிறகு பள்ளிக்கூடத்திற்கு போனேன்.

அங்கு புகைப்படம் எடுக்க மாணவர்கள் தயாரானர். நான் வீட்டுக்கு கிளம்பியதை பார்த்து ஒரு மாணவன் அழைத்து ஏன் போகிறாய் , புகைப்படம் எடுக்கவில்லையா என்றான். அதற்கு நான் பணம் இல்லை என்றேன். அதனால் என்ன வந்து நில் என்றான். ஆனால் எனக்கு தன்மானம் இடம் கொடுக்கவில்லை , அதனால் நான் கிளம்பிவிட்டேன். ஆனால் அந்த புகைப்படத்தில் என்னால் நிற்க முடியவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு இருந்தது.

நான் ஒரு 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். அதில் 4 கோடி ரீல்களில் என் முகம் இருக்கும். ஆனால் 5ரூபாய் புகைப்படத்தில் என் முகம் இல்லை. பிறகு ஒரு தனியார் தொலைகாட்சி ஏற்பாட்டின் பேரில் என் பள்ளியை தேடி கண்டு பிடித்து என்னுடன் படித்த சில மாணவிகள், மாணவர்கள் (எல்லாம் இப்போது தாத்தா பாட்டி ஆகிட்டாங்க என கூறி சிரிக்கிறார்), ஆசிரியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன் என பழைய நினைவுகளை சிவக்குமார் பகிர்ந்து கொண்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+