செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் போனை தட்டி விட்ட சம்பவம்.. வருத்தம் தெரிவித்தார் நடிகர் சிவக்குமார்
Recommended Video

சென்னை: மதுரையில் செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை தட்டி விட்டதற்கு நடிகர் சிவக்குமார் வருத்தம் தெரிவித்தார்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்ட தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவக்குமார் மற்றும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்து கொண்டனர்.
அப்போது திறப்பு விழா இடத்துக்கு வந்த சிவக்குமாரை காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்களில் ஒருவர் உள்ளே வந்து சிவக்குமார் வந்து கொண்டிருக்கும் போது செல்பி எடுக்க முயன்றார். உடனே யாரும் எதிர்பாராத வேளையில் சிவக்குமார் அவரது போனை தட்டி விட்டார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த ரசிகர் யாரிடமோ இதுகுறித்து முறையிட்டார்.
[கெளரவம் பார்க்காமல் ஸாரி சொன்ன சிவக்குமார்... பெரிய மனுஷன், பெரிய மனுஷன்தான்]

வேண்டுமானாலும்
இந்நிலையில் சிவக்குமாருக்கு எதிராக கண்டனங்கள் வலுத்தன. செல்பி எடுத்த ரசிகரின் செல்போனை தட்டிவிட்டதற்கான காரணத்தை சிவக்குமார் கூறியுள்ளார். அதில் செல்பி எடுப்பது என்பது அவரவர் சொந்த விஷயம். நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் கொடைக்கானல் ஏரி, ஊட்டி தொட்டபெட்டா போன்ற இடங்களுக்கு சென்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.
[சிவகுமார் விளக்கம் கொடுத்தாலும் விடாமல் துரத்தும் மீம்ஸ்.. இதை பாருங்க]

நியாயமா
அது பற்றி நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. ஆனால் பொது இடங்களில் அதுவும் 200, 300 பேர் கலந்து கொள்ளும் விழாவில் காரில் இறங்குவதிலிருந்து மண்டபத்திற்கு செல்வதற்குள் பாதுகாப்பிற்கு வரும் ஆட்களை கூட ஓரம் தள்ளிவிட்டு சுமார் 20, 25 பேர் கைபேசியை வைத்துக் செல்பி எடுக்கிறேன் என்று நடக்கக் கூட முடியாமல் செய்வது நியாயமா?

நெட்டிசன்கள்
தங்களை புகைப்படம் எடுக்கிறேன் என்று கேட்கமாட்டீர்களா? விஐபி என்றால் தான் சொல்லும்படி தான் இருக்க வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்? என்றார். இந்நிலையில் சிவக்குமார் மன்னிப்பு கேட்டுத்தான் ஆக வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர்.
|
வீடியோ வெளியீடு
இந்த நிலையில் சிவக்குமார் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆர்வமிக்க ரசிகர்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டு அப்படிதான் நடந்து கொள்வார்கள். பிரபல கலைஞர் அதையெல்லாம் பொருத்து கொள்ளத்தான் வேண்டும். மக்கள் தவறு என நினைக்கும் பட்சத்தில் உளமாற வருத்தம் கேட்கிறேன் என்றார் சிவக்குமார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications