Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்ரீகாந்தை சிக்க வைத்த தயாரிப்பாளர்.. பார்ட்டியில் ஏற்பட்ட பழக்கம்! அடுத்து சிக்கும் முக்கிய நடிகர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்-க்கு ஜூலை 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்த நிலையில், இந்த வழக்கில் இன்னும் சில விஐபி-க்கள் சிக்கப் போகிறார்கள் என்று சொல்லப்பட்டு வருகிறது.

ரோஜாக் கூட்டம், நண்பன், பூ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் ஸ்ரீகாந்த். கடந்த சில ஆண்டுகளாக இவர் நடித்த படங்கள் பெரியளவில் வெற்றி பெறாத நிலையில், சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார். தற்போது ஸ்ரீகாந்த் தீங்கிரை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பிரசாத் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் இடையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நட்பு இருந்தது தெரிய வந்தது.

Actor Srikanth Remanded Till July 7 in Drug Use Case VIPs Under Scanner

அதிமுக நிர்வாகி

இதனிடையே மே 29ஆம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மதுபான கூடத்தில் அடிதடியில் ஈடுபட்டதாக அதிமுக நிர்வாகியான பிரசாத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர் மீது ஏற்கனவே வேலை தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாகவும் ஒரு வழக்கு உள்ளது. இந்த நிலையில் பிரசாத்தை விசாரித்த போது, அவருக்கு கொக்கைன் போதைப்பொருள் பழக்கம் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

சர்வதேச கும்பல்

இதன்பின் அவருக்கு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் என்ற பிரடோ என்பவர் கொக்கைன் போதைப் பொருளை விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போது பல திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. பிரதீப் குமாருக்கும் கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

பெங்களூர் டூ சென்னை

ஜான் என்பவர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர். இவரை கடந்த 19ஆம் தேதி போலீசார் கைது செய்த நிலையில், அவர்களின் செல்போன்களை ஆய்வு செய்திருக்கின்றனர். இதன் மூலமாக பெங்களூரில் உள்ள சர்வதேச போதைப்பொருள் கடத்தும் கும்பலைச் சேர்ந்த நைஜீரியாவின் ஜூரிக் என்பவர் சென்னையில் விற்பனை செய்யும் கும்பலுக்கு கொக்கைன் சப்ளை செய்துள்ளார்.

கொக்கைன் எவ்வளவு?

2020ஆம் ஆண்டு முதலே பிரதீப் குமார் இந்த கும்பலிடம் இருந்து கொக்கைன் போதைப் பொருள் வாங்கி சென்னையில் விற்பனை செய்து வந்துள்ளார். ஒரு கிராம் கொக்கைன் ரூ.7 ஆயிரத்திற்கு பெற்று, ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளார். இந்த சூழலில் தான், நடிகர் ஸ்ரீகாந்த் பெயரை கூறி 3 ஆண்டுகளாக போதைப்பொருள் வாங்கி இருக்கிறார்.

மாட்டியது எப்படி?

இந்த விவகாரம் தெரிய வந்த பின், ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அதன்பின் அவரின் ரத்த மாதிரி சேகரித்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதன்பின் அவர் தடை செய்யப்பட்ட கொக்கைன், மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியது உறுதியாகியது.

3 ஆண்டுகளில் 40 முறை

இதன்பின் போலீசாரின் விசாரணையில், தீங்கிரை படத்தின் படப்பிடிப்பின் போது, பார்ட்டி என்ற பெயரில் இதனை பழக்கப்படுத்திவிட்டதாக கூறி இருக்கிறார். இதன் காரணமாக பிரதீப் குமார் பெங்களூரில் இருந்து கொக்கைன் வாங்கி வந்து சென்னையில் உள்ள பிரசாத்திற்கு விற்றுள்ளார். 2023ஆம் ஆண்டில் இருந்து சுமார் 40 முறை நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைனை பிரதீப் குமாரிடம் இருந்து வாங்கி இருக்கிறார்.

அடுத்தது யார்?

கூகுள் பே பரிவர்த்தனை மூலமாக மட்டும் ரூ.4.72 லட்சம் நடந்திருக்கிறது. அவரின் வீட்டில் நடந்த சோதனையிலும் 3 பாக்கெட் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ள நிலையில், கழுகு படத்தின் ஹீரோவான கிருஷ்ணாவும் சிக்குவார் என்று சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+