நடிகர் சூர்யாவின் பாதுகாவலரிடம் ரூ.42 லட்சம் மோசடி.. குடும்பத்துடன் சிக்கிய பணிப்பெண்
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் கூறி வருகிறார்கள். கொலை, கொள்ளை, மோசடி, பாலியல் வன்கொடுமை ஆகியவை அதிகளவு நடப்பதாக புகார் உள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யா பாதுகாவலரிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்த வழக்கில் சூர்யா வீட்டில் பணியாற்றி வந்த சுலோச்சனா என்ற பெண் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவர்களின் ஆசையை தூண்டி விட வேண்டும் சதுரங்க வேட்டை படத்தின் வசனம் தான் பல மோசடிகளுக்கு மூலதனம். இதற்கு எந்த மக்களும் விதிவிலக்கு இல்லை. பலரும் ஆசைப்பட்டு மோசடி வலையில் சிக்கி ஏமாந்து விடுகிறார்கள். சமீபகாலமாக பல நூதன மோசடிகள் அரங்கேறி வருகின்றன.

சூர்யா பாதுகாவலரிடம் மோசடி
சைபர் குற்றங்கள் ஒருபக்கம் அதிகரித்து கொண்டிருக்கின்றன. மறுபக்கம் நிதி நிறுவன மோசடிகளும் அதிகளவு நடந்து கொண்டு தான் இருக்கின்றன. முதலீடுகளை இரண்டு மடங்கு திருப்பித் தருகிறோம் என்பதில் தொடங்கி நிலம், தங்கம், வேலை, தொழில் ஆகிய பலவற்றிலும் மோசடி நடந்து கொண்டு தான் இருக்கிறது.
மோசடிகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் உடன் பழகுவோரே பல நேரங்களில் ஏமாற்றி விடுவார்கள். சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் சமூகத்தில் முக்கிய அந்தஸ்தில் இருப்போர் மற்றும் விஐபிகளையும் குறிவைத்து ஏராளமான மோசடிகள் நடத்தப்படுகின்றன. அந்த வரிசையில் நடிகர் சூர்யாவின் தனி பாதுகாவலர் சிக்கியுள்ளார்.
42 லட்சம் மோசடி
நடிகர் சூர்யா திரைப்படத்தில் நடிப்பதுடன் அகரம் அறக்கட்டளை மூலம் ஏராளமான சமூக சேவைகளையும் செய்து வருகிறார். அவரிடம் அந்தோணி என்பவர் தனி பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவர் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக ரூ.42 லட்சம் மோசடி செய்துள்ளனர் என்று கூறியிருந்தார்.
இந்தப் புகாரில் சூர்யாவின் வீட்டில் பணியாற்றி வந்த சுலோச்சனா என்ற பெண், அவரின் மகன்கள் பாலாஜி, பாஸ்கர், சகோதரி விஜயலட்சுமி ஆகிய 4 பேர் மாம்பலம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடிக்கு சுலோச்சனா மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. அவருக்கு குடும்பத்தினரும் உதவி செய்துள்ளனர்.
சிக்கிய பணிப்பெண்
மாதம் ரூ.5,500 கட்டினால் மாதம் ஒரு கிராம் தங்கம் தருவதாகவும், ரூ.6,500 கட்டினால் வாரம் ஒரு கிராம் தங்கம் தருவதாகவும் சுலோச்சனா ஆசையை தூண்டியுள்ளார். அதை நம்பி ஆரோக்கியராஜ் ரூ.42 லட்சம் வரை கொடுத்துள்ளார். ஆனால் சொன்னபடி அவர்கள் நகை கொடுக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டிருப்பதை ஆரோக்கியராஜ் தாமதமாக உணர்ந்துள்ளார்.
இதையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறை அவர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே பாணியில் அவர்கள் பலரிடம் மோசடி செய்துள்ளனர். முதல் கட்ட விசாரணையில் அவர்கள் ரூ.2.5 கோடி அளவுக்கு மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
அவர்களை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் யார், யார் என்பதை விசாரித்து வரும் காவல்துறையினர், அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்வது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications