நடிகர் சிவக்குமார் குடும்பமா இதை செய்தது? போலீசுக்கு ஓடிய பாஜக.. பூதாகரமாகும் சூர்யாவின் கீழடி விசிட்
சென்னை: நடிகர் சூர்யா குடும்பத்தினர் மீது பாஜக தரப்பு, காவல்துறையில் புகார் தந்துள்ளது.. நடிகர் சூர்யா உள்ளிட்டோர் விதிமுறைகளை மீறி கீழடி அருங்காட்சியகத்துக்கு உள்ளே சென்றதாகவும் பாஜகவினர் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.
கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு நடைபெற்றது... இதில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட அருங்காட்சியகம் ஒன்று உருவாக்கப்பட்டது.
உலகதரத்தில் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் கடந்த மார்ச் மாதம் 6-ம் தேதி அன்று பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது...

ஜோதிகா
ஏப்ரல் 1-ம் தேதி முதல் பார்வையாளர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.. இந்நிலையில், தமிழர்களின் தொல்லியல் வரலாற்றை பறைசாற்றும் இந்த அருங்காட்சியகத்தை நடிகர் சிவக்குமார், அவரது மனைவி லட்சுமி சிவக்குமார், நடிகர் சூர்யா, ஜோதிகா, தேவ் மற்றும் தியா ஆகியோர் குடும்பத்துடன் பார்வையிட்டனர். இவர்களுடன் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினரான சு. வெங்கடேசனும் உடனிருந்தார். இறுதியில் அங்குள்ள பதிவேட்டில் சிவக்குமார் குடும்பத்தினர் தங்களது எண்ணங்களை எழுதி பதிவிட்டனர்.

பெருமிதம்
இதுகுறித்து, நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும், பெருமிதத்துடன் பதிவிட்டிருந்தார்.. "தமிழ் நாகரிகத்தின் தனிச்சிறப்பையும், தொன்மையையும் கீழடி உணர்த்துவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழர் வாழ்வியலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்போம் எனவும், தமிழரின் வைகை நாகரிகத்திற்கு இது ஒரு தொடக்கம் எனவும் பதிவிட்டிருந்தார்.. ஆனால், இந்த விவகாரம் கடந்த 2 நாட்களாகவே விஸ்வரூபமெடுத்து வருகிறது.. சூர்யா தன்னுடைய குடும்பத்துடன் வந்திருந்தபோது, கீழடியில், அங்கு வந்த மாணவர்களை வெளியே காக்க வைத்தது சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது.

ஜோதிகா
அது தற்போது போலீஸ் புகார் வரையும் சென்றுள்ளது.. இது தொடர்பாக மதுரை பாஜக மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், வழக்கறிஞர் முத்துக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் தென் மண்டல காவல் துறை தலைவர் அஸ்ரா கர்க்கை சந்தித்து புகார் மனு ஒன்றை தந்துள்ளனர்.. அதில், :சிவகங்கை மாவட்டம் கீழடியில் 8 கட்ட அகழ்வாராய்ச்சியில் 2800 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான பொருட்களை தமிழக அரசின் தொல்லியல்துறை சார்பில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் கீழடி அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்டு முதல்வர் அதனை கடந்த சில வாரங்களுக்கு முன்பு திறந்து வைத்ததார்.

நடிகர் சிவக்குமார்
காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணி வரை பொதுமக்கள் நுழைவு கட்டணம் செலுத்தி அருங்காட்சியகத்தை பார்வையிடலாம் என அறிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி அருங்காட்சியகத்திற்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை எம்.பி. சுவெங்கடேசன் மற்றும் நடிகர்கள் சூர்யா, சிவகுமார், ஜோதிகா அவர்களது குடும்பத்தினர் குறிப்பிட்ட கால வரையறை நேரத்திற்கு முன்பாகவே கீழடி அருங்காட்சியகத்திற்குள் சென்றுள்ளனர். கண்காட்சி திறக்கும் நேரமான பத்து மணிக்கு மேலாகியும் பொதுமக்கள் அனுமதிக்கபடவில்லை. பள்ளி மாணவ மாணவிகள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் பல மணி நேரம் கால் கடுக்க கடும் கோடை வெயிலில் நிறுத்தி வைக்கபட்டனர்.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா உள்ளிட்டோர் விதிமுறைகளை மீறி உள்ளே சென்றுள்ளனர் என பாஜகவினர் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். மேலும், தனது தனிப்பட்ட நலனுக்காக எம்.பி.வெங்கடேசன் பாராளுமன்ற நடத்தை விதிகளை மீறி நடிகர்களை அழைத்து சென்றதாகவும், இதற்கு அனுமதி அளித்த அனைத்து ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலத்தில் பொது மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் கீழடி அருங்காட்சியகத்தின் பராமரிப்பு, மற்றும் நிர்வாகத்தை மத்திய அரசின் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications