"பிரபல நடிகரை".. திடீர்னு அழைத்து பேசிய தலைவர்.. காரணமே வேறயாமே.. கமலாலயத்தில் என்ன நடந்தது?
நடிகர் எஸ்வி சேகருக்கு பாஜகவில் புதிய பொறுப்பு தரப்படலாம் என்கிறார்கள்
சென்னை: எஸ்வி சேகருக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போனை போட்டு வரவழைத்தது மிகுந்த கவனத்தை பாஜகவில் ஏற்படுத்தி வருகிறது.
எஸ்வி சேகரை பொறுத்தவரை பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதவர்.. பாஜகவின் அபிமானியான இவரை கட்சி சரியாக பயன்படுத்தி கொள்ளாமலேயே இருந்தது.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போதுகூட, எத்தனையோ பேருக்கு பொறுப்புகள் தரப்பட்டன.. தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் எஸ்வி சேகர் கண்டுகொள்ளப்படவில்லை.

கமலாலயம்
அந்த சமயத்தில் ஒரு பிரபல இதழுக்கு எஸ்வி சேகர் பேட்டி தந்திருந்தார்.. அப்போது, இதை பற்றி ஓபனாகவே கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு அவர், "நான் பாஜகவில்தான் இருக்கிறேன். ஆனால், அது பாஜகவுக்குத் தெரியுமா, தெரியாதானு தெரியலை... நான் கட்சியிலிருந்து விலகியில்லை. விலக்கிவைக்கப்பட்டிருக்கிறேன். மோடி அட்வைஸ்படிதான் பாஜகவில் சேர்ந்தேன்... 1990-லிருந்தே பாஜக அனுதாபியாக இருந்திருக்கிறேன்... வெற்றிக்குப் பின்னாடி ஓடுபவன் அல்ல. வெற்றி என்னால் வர வேண்டும் என நினைப்பவன்.. பாஜகவில் என்னைப் பயன்படுத்திக்கொண்டால் பாஜகவுக்கு நல்லது. இல்லாவிட்டால் எனக்கு எந்த நஷ்டமுமில்லை" என்று துணிந்து சொல்லி இருந்தார்.

தூண்டில்
அப்படி இருந்தும், எஸ்வி சேகரை, கட்சி கண்டுகொள்ளவில்லை.. எப்போதுமே, மாற்று கட்சியில் இருப்பவர்களுக்கு தூண்டில் போட்டு தன் பக்கம் இழுத்து வந்து, அவர்களுக்கு உயர்ந்த பதவியை தந்து அழகு பார்க்கும் பாஜக.. ஆனால், எஸ்வி சேகர் விஷயத்தில் மட்டும் ஏன் இப்படி யோசனையில் மூழ்கியது என்று தெரியவில்லை.. முகமே தெரியாதவர்களுக்கும் போஸ்டிங் தந்து வந்த பாஜக, மோடியின் அபிமானி என்று தெரிந்தும், எஸ்வி சேகரை ஒதுக்கி வைத்தே வந்துள்ளதும் அப்பட்டமாக தெரிந்து கொண்டே இருந்தது.

கமலாலயம்
இந்நிலையில்தான், கமலாலயத்தில்அண்ணாமலையை சந்தித்து பேசியிருக்கிறார் எஸ்வி சேகர்.. விரைவில் எம்பி தேர்தல் வர போகிறது.. தேசிய கட்சிகள் இதற்காக தயாராகி கொண்டிருக்கின்றன.. அந்த வகையில், தமிழக பாஜக முனைப்பு காட்டி வருகிறது.. தமிழகத்தில் எப்படியாவது 25 எம்பிக்களை டெல்லிக்கு அனுப்பிவிட வேண்டும் என்று வைராக்கியத்தில் பாஜக தீவிரத்தை கையில் எடுத்துள்ளது..

போன் கால்
இப்படிப்பட்ட சூழலில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் சென்சார் போர்டு உறுப்பினருமான எஸ்வி சேகரை, அண்ணாமலை கமலாலயத்திற்கு அழைத்துள்ளார்.. அங்கு இருவரும் படங்களுக்கான தணிக்கை, சென்சார் போர்டு விவகாரம் குறித்த பல்வேறு விஷயங்களை விவாதித்ததாக தெரிகிறது. மாநில தலைவர் திடீரென எஸ்வி சேகரை அழைத்து பேசியுள்ளதற்கு வேறு காரணம் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.. அநேகமாக கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அணில்
ஒருமுறை எஸ்வி சேகர் பேசும்போது, "சோ தான் என்னை மோடியிடம் அறிமுகம் செய்து வைத்தார்... மோடிதான் என்னை பாஜகவில் சேர சொன்னார்... பாஜக பதவிக் கொடுக்கவில்லை என்பது எனக்கு வருத்தமே கிடையாது... மோடி அரசாங்கம் நடைபெற ராமருக்கு அணில் மாதிரி உதவி செய்கிறேன்... அவ்வளவுதான்.. நான் என்ன செய்கிறேன் என்பது மோடிக்கு தெரியும்... நான் எல்லாம் போனில் சொன்னாலே 5 ஆயிரம் ஓட்டு மாறிப்போகக்கூடிய அளவுக்கு செல்வாக்கு இருக்குன்னு எனக்கு தெரியும்.. அதனால எந்த இடத்தில் எங்க பேசணுமோ அங்க பேசுவேன்" என்று நம்பிக்கையுடன் சொல்லி இருந்தார்..

போன் செய்த தலைவர்
இந்த அளவுக்கு ஆழ்ந்த நம்பிக்கைப்பிடிப்புள்ள எஸ்வி சேகருக்கு, தமிழக பாஜக எந்தமாதிரியான போஸ்டிங்கை ஒதுக்க போகிறதோ என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது... விரைவில் எம்பி தேர்தல் உள்ள நிலையில், தமிழகத்தில் பாஜக தன்னை நிலைநிறுத்தி கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், எஸ்விசேகரின் முக்கியத்துவமும் தேவைப்படலாம் என்றும் தெரிகிறது.. பார்ப்போம்..!
-
சைக்கிள் ஓட்டறதெல்லாம் ஓ.கே.. வாயை திறந்து பேசுங்க விஜய்.. அண்ணாமலை அட்வைஸ் -
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக












Click it and Unblock the Notifications